புதிய புத்தகம் பேசுது – டிசம்பர் மாத இதழ் – 2021 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…
♻️ தலையங்கம்: சென்னை புத்தகக் காட்சி… நம் எதிர்பார்ப்புகள் என்ன? – ஆசிரியர் குழு
♻️ நூல் அறிமுகம்: கற்றல் என்பது யாதெனில்- கல்வி 4.O – கு.செந்தமிழ் செல்வன்
♻️ நேர்காணல்: முகநூல் பதிவுகளாகச் சுருங்கிப் போய்விட்ட இலக்கியச் சூழல் – அழகிய பெரியவனுடன் ப்ரதிபா ஜெயசந்திரன்
♻️நூல் அறிமுகம்: அரசியல்… அ… ஆ.. நிகழ் அய்க்கண்
♻️நூல் அறிமுகம்: நகர்துஞ்சும் நள்யாமத்தில்… தஸ்தாவேஸ்கள் – ச. சுப்பாராவ்
♻️ வாசிப்பு ரசனை வாழ்க்கை 13: வலிக்கவைக்கும் வாசிப்பும் – எஸ். வி. வேணுகோபாலன்
♻️ நூல் அறிமுகம்: சங்க இலக்கியத்தின் வழி தமிழர் பண்பாட்டு வேரைக்கொண்டாடி… – சு.பொ.அகத்தியலிங்கம்
♻️நூல் அறிமுகம்: மதுரை போற்றுதும் – சுரேஷ் காத்தான்
♻️ நூல் அறிமுகம்: பரவசமூட்டும் பறவை வாழ்வியல் – என். மாதவன்
♻️ நூல் அறிமுகம்: பரவசமூட்டும் பறவை வாழ்வியல் – துரை. அறிவழகன்
♻️ நூல் அறிமுகம்: குழந்தைகளைக் கொண்டாடுவோம் – உமா மகேஸ்வரி
♻️ நூல் அறிமுகம்: மனிதர்களின் சித்திரத்தொகுப்பு – பாவண்ணன்
♻️ நூல் அறிமுகம்: இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி ? – அ. பாக்கியம்
♻️ நூல் அறிமுகம்: மனித இனம் தாய்வழி சமூகத்திலிருந்து ஆணாதிக்க சமூகத்திற்கு மாறும் வரலாறு -சுரேஷ் இசக்கிபாண்டி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அழகியபெரியவனின் பார்வையில் இன்றைய இலக்கிய படைப்பாளிகன் சூழல் குறித்து மறுக்கமுடியாதநிகழ்வுப் போக்குககளை சுட்டுகிறது. இதை முறிக்கத்தேவையான முயற்சிகளை எவ்வகையில் முற்போக்காளர்கள் முயன்றிருக்கிறார்கள் என்பதும் கவனத்தித் கொள்ள வேண்டியதிருக்கிறது. சமூக நோயைக் கண்ணுறும்போது நோயை வேரறுக்கும் வேலையையும் முன்னெடுக்கவேண்டிய. கடமையுண்டு. இதைக்கூட்டுச்செயல்பாடாகசெய்யவேண்டிய அவசியத்தையும் இந்நேர்காணல் உணர்த்துகிறது.வாழ்த்துகள் தோழர் அழகியபெரியவனுக்கும் பாரதிபுத்தகாலயத்தின் சார்பாக நேர்காணல் செய்ததோழர் பிரதிபாஜெயச்சந்திரனுக்கும்.
புத்தகம்:புதிய புத்தகம் பேசுது டிசம்பர் மாத இதழ்
பதிப்பகம்:பாரதி புத்தகாலயம் பக்கங்கள்: 96
விலை: 20
டிசம்பர் மாத இதழ் வாசித்தேன். தலையங்கத்தில் குறிப்பிட்டதுபோல் சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறாமல் போனதில் மிகுந்த வருத்தமே. அதற்காக எடுத்த முன்னேற்பாடுகள் அனைத்தும் வீணானது வாசகனாகிய எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. இம்முறை 11 நூல்களை பற்றிய அறிமுகம் சிறப்பாக இருந்தது.
1.கற்றல் என்பது யாதெனில்- ஆயிஷா இரா.நடராசன்
2.அரசியல்… அ…ஆ.. – அ.ஆறுமுகம் 3.நகர்துஞ்சும் நள்யாமத்தில்- பாவெல் சக்தி
4.சங்கச் சுரங்கம் முதலாம் பத்து கடவுள் ஆயினும் ஆக-ஆர் பாலகிருஷ்ணன்
5.மதுரை போற்றுதும்- ச.சுப்பாராவ் 6.வனவாசிகள்-முனைவர் சசிகுமார்
7.சிவப்புக் கிளி- வசுதேந்திரா 8.குழந்தைகளை கொண்டாடுவோம் – ஷ.அமனசுவிலி
9.திருநெல்வேலி- நீர்-நிலம்- மனிதர்கள்-நாறும்பூநாதன்
10.இந்திய தேர்தல்களை வெல்வது எப்படி-சிவம் சங்கர் சிங் 11.வால்காவிலிருந்து கங்கை வரை -ராகுல் சாங்கிருத்தியாயன்
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து புத்தகங்களின் அறிமுகம் ஒவ்வொரு வாசகரையும் வாசிக்க தூண்டுவதாக அமைந்திருந்தது. நேர்காணலில் எழுத்தாளர் அழகிய பெரியவன் அவரைப் பற்றியும் அவர் படைத்த படைப்புகளைப் பற்றியும் சமூகத்தின் மேல் அவர் கொண்ட பார்வையும் தெரிந்துகொள்ள முடிந்தது. நேர்த்தியான நேர்காணல் என்று சொல்லலாம்.வாசிப்பு ரசனை வாழ்க்கை தலைப்பு எழுதிவரும் ஆசிரியர் எஸ்.வி.வேணுகோபால் அவர்களின் வாசிப்பு அனுபவமும் அருமை புதிய நூல்களின் வெளியீடும், புத்தகங்களுக்கான சிறப்பு சலுகைகளையும் குறிப்பிடப்பட்டுள்ளது வாசகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். ஜனவரி மாத இதழ் இதனுள் வந்துவிட்டது அதைப்பற்றி வரும் நாட்களில் குறிப்பிடுகிறேன்.
https://bookday.in/puthagam-pesuthu-december-magazine-2021/
ராஜேஷ் நெ.பி
சித்தாலப்பாக்கம் சென்னை