புதிய புத்தகம் பேசுது – பிப்ரவரி மாத இதழ் – 2022 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…
♻️ தலையங்கம்: அறிவியல் சமுதாயம் அமைந்திட உழைப்போம் – ஆசிரியர் குழு
♻️ நூல் அறிமுகம்: வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா – ஜெ. பாலசுப்பிரமணியம்
♻️புத்தகக் காதல் 2: யுத்த பூமியில் ஒரு நூலகம் – ச.சுப்பாராவ்
♻️கட்டுரை: பள்ளி நூலகத்தில் அவசியம் இருக்க வேண்டிய தமிழ் நூல்கள் பகுதி 2 – ஆயிஷா இரா. நடராசன்
♻️நூல் அறிமுகம்: யானிஸ் வருஃ பாகிஸின் அகில உலக பகாசுரன் – நிகழ் அய்க்கண்
♻️ நூல் அறிமுகம்: வாசகர் இதயத் துடிப்பிலும் ஒலிப்பதாய்…. – எஸ் வி வேணுகோபாலன்
♻️ நூல் அறிமுகம்: காம்ரேட் ஷபின்னாவும் தோழர் பழனியும்… – சுரேஷ் இசக்கிபாண்டி
♻️நேர்காணல்: மானுடத்திற்கு உரியதெதுவும் எனக்கு அந்நியமானதல்ல – அய்ஜாஸ் அகமது
♻️ நூல் அறிமுகம்: சிற்பிகளான சிற்பங்கள் – ஸ்ரீதர் மணியன்
♻️ வாசிப்பு ரசனை வாழ்க்கை 15: ஆதித் தோழன் சொல்ல வருவது… – எஸ்.வி.வேணுகோபாலன்
♻️ நூல் அறிமுகம்: “சட்டத்தின் ஆட்சி” – எனும் அரசியல் சொல்லாடல் – ஜமாலன்
♻️நூல் அறிமுகம்: அதிதிகளின் உலகு – ஸ்ரீதர் மணியன்
♻️நூல் அறிமுகம்: ‘கசபத்’ – வேலைவெட்டியில்லாதவன் – கொள்ளு நதீம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
புத்தகம்: புதிய புத்தகம் பேசுது பிப்ரவரி 2022
ஆசிரியர்:இரா.நடராசன்
பதிப்பகம்:பாரதி புத்தகாலயம் பக்கங்கள்:56
விலை:20
வகை: மாத இதழ்
தலையங்கத்தில் மூடநம்பிக்கைகளில் மூழ்கி கிடக்கும் மக்களின் எண்ணிக்கை பண்டைய காலங்களை விட இன்றைய நூற்றாண்டில் அதிகம்.அறிவியல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு அல்லது அறிவியலின் பின் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை சாடுகிறது தலையங்கம்.
1.வா.உ.சி யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா – வேங்கடஜலபதி
2.அகில உலக பகாசுரன் – யானிஸ் வரிஃபாகிஸ்
3.இரண்டாம் உதயம் – மாதவராஜ்
4 தோழர் – தனுஷ்கோடி ராமசாமி
5 சிற்பியை செதுக்கும் சிற்பங்கள் – ஜோல்னா ஜவஹர்
6.இந்திய அரசியலமைப்புச் சட்டம் – செந்தில்நாதன்
7அதிதி -வரதராஜ மாணிக்கம்
8.கசபத்-சாளை பஷீர்
போன்ற நூல்களைப் பற்றிய அறிமுகம் கிடைக்கப் பெற்றேன். புத்தகக் காதல் பகுதியில் போர்களின் இடையில் சிரிய மக்கள் புத்தகங்களை பாதுகாப்பதற்கு எடுத்த முயற்சிகளையும் புத்தகங்களின் முக்கியத்துவம் எடுத்துக்கூறிய விதம் சிறப்பு.ச.சுப்பாராவ் அவர்களின் நேர்த்தியான பதிவு செய்துள்ளார். பள்ளி நூலகத்தில் இருக்க வேண்டிய தமிழ் நூல்களின் பகுதி இரண்டு அழகாக பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.அய்ஜாஸ் அகமது அவர்களுடன் நடத்திய நேர்காணல் சந்திப்பு அருமையாக இருந்தது. விஜய் பிரசாத் அவர்களின் சந்திப்பை தமிழில் ராஜசங்கீதன் மொழிபெயர்த்துள்ளார்.
எஸ்.வி.வேணுகோபால் அவர்களின் வாசிப்பு அனுபவம் பகுதியில் தமிழ்ச்செல்வன் அவர்களின் சிறுகதைகளின் வாசிப்பனுபவத்தை மிக சிறப்பாக விவரித்துள்ளார். மேலும் பல புதிய நூல்களின் வெளியீடும் தள்ளுபடி அறிவிப்பும் வாசகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.
https://bookday.in/puthagam-pesuthu-february-magazine-2022/
ராஜேஷ் நெ.பி
சித்தாலப்பாக்கம் சென்னை