Puthagam Pesuthu July Magazine 2021 Synopsis. Its Only Contains Tamil Literature. Its belongs to Bharathi Puthakalayam

புதிய புத்தகம் பேசுது – ஜுலை மாத இதழ் – 2021



புதிய புத்தகம் பேசுது – ஜுலை மாத இதழ் – 2021 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…

♻️ தலையங்கம்: வீட்டில் இரு! வாசித்திரு!
♻️ என். சங்கரய்யா 100 – ஜி. ராமகிருஷ்ணன்
♻️ நூல் அறிமுகம்: பேசாத பேச்செல்லாம் – பரிமளா ஜெயராமன்
♻️ நூல் அறிமுகம்: முன்னுதாரணமாக முன் நின்று.. – என்.சிவகுரு
♻️ நேர்காணல்: மனிதர்களே விஞ்ஞானிகளாகின்றனர். அதன் பிறகும் மனிதர்களாகவே வாழ்கின்றனர் – அருண் நரசிம்மன்| சந்திப்பு: பேரா.அருள் மகாலிங்கம்



♻️ நேர்காணல்: வரலாற்றை அறிவியல் கண்கொண்டு பார்க்க வேண்டும்; அறிவியலையும் வரலாற்றுக் கண்கொண்டு பார்க்க வேண்டும் | பேராசிரியர் வி.முருகன் | சந்திப்பு: பேரா. அருள்
♻️ சிறப்புக்கட்டுரை: அறிவியல் தமிழும் தமிழில் அறிவியலும் – ஆயிஷா. இரா. நடராசன்
♻️ நூல் அறிமுகம்: சாலையோரம் நிழல்தரும் மரங்கள் – புதுச்சேரி லெனின்பாரதி
♻️ நூல் அறிமுகம்: செவ்வானம் – ப.ஜீவகாருண்யன்
♻️ வாசிப்பு ரசனை வாழ்க்கை 8: வாழ்க்கைப் புத்தக வாசிப்பு – எஸ். வி. வேணுகோபாலன்




♻️ அஞ்சலி: சித்தலிங்கையா – பாவண்ணன்
♻️ நூல் அறிமுகம்: பச்சை வைரம் – புதுவை யுகபாரதி
♻️ நூல் அறிமுகம்: நமக்குத் தேவை நவீன மருத்துவமே;ஹீலர்கள் அல்ல… – ஜெ.பாலசரவணன்
♻️ நூல் அறிமுகம்: சிப்பிக்குள் பொதிந்திருக்கும் முத்து – ஸ்ரீதர் மணியன்
♻️ நூல் அறிமுகம்: யார் கைகளில் இந்து ஆலயங்கள் – பேராசிரியர் .அருள் மகாலிங்கம்
♻️ நூல் அறிமுகம்: மைய நீரோட்டத்தில் கவனம் பெறாது போன ‘இந்தியா உருவாகுவதாக’ – கரு. கல். சொல்லோவியன்

Puthagam Pesuthu July Magazine



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 2 Comments

2 Comments

  1. இரா. செந்தில் குமார்

    இந்த இதழில் வெளிவந்துள்ள மாற்று மருத்துவம் குறித்து அவதூறு பரப்பும் புத்தகமான ‘போலி அறிவியல் மாற்று மருத்துவம் மூடநம்பிக்கை” என்ற நூலின் தன்மை நூலாசிரியருக்கு மரபு மருத்துவங்கள் குறித்தான அறியாமையை காட்டுகிறது. அடிப்படை தத்துவம் இல்லாத அல்லோபதி மருத்துவம் பிற மருத்துவ முறைகளை எள்ளி நகையாடுவது சிறுபிள்ளை தனமானது. உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த மரபு மருத்துவங்கள் 104. ஆனால் ஆசிரியர் பார்வையில் அல்லோபதி மட்டுமே தெரிவது அவரின் குறுகிய நோக்கத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

  2. Rajesh

    புத்தகம்: புதிய புத்தகம் பேசுது
    மலர் 19 இதழ் 5
    பதிப்பகம்:பாரதி புத்தகாலயம் பக்கங்கள்:56
    விலை:20

    ஜூலை மாதத்திற்கான மாத இதழை வாசித்து முடித்து விட்டேன். தலையங்கம் “வீட்டில் இரு வாசித்திரு” வாசிப்பின் முக்கியத்துவத்தையும் அதற்கான பல்வேறு முன்னெடுப்புகளையும் சுட்டிக்காட்டியுள்ளது சிறப்பு. என். சங்கரய்யா 100 என்ற தலைப்பில் ஜி. ராமகிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரை 100 ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் என்.சங்கரய் யாவையும் அவர்களுடைய சிறப்பான பங்களிப்பையும் பட்டியலிடுகிறது.10 நூல்களின் அறிமுகமும் அதைப் பற்றிய விரிவான அலசலும் நன்று. நூல் அறிமுகத்தில் என்னை கவர்ந்தது “சிவந்த காலடிகள்” என்.சிவகுரு அவர்கள் எழுதியது.மிகவும் நேர்த்தியாக புதினத்தை அலசியுள்ளார்.வாசிக்கும் விருப்பம் ஏற்படுவது உறுதி.”அறிவியல் தமிழும் தமிழில் அறிவியலும்” என்ற தலைப்பில் சிறப்பு கட்டுரை ஆயிஷா இரா.நடராஜன் எழுதியுள்ளார். பல்வேறு எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களின் அறிவியல் தொடர்பான தமிழ் புத்தகங்களையும் பட்டியலிட்ட விதம் அருமை. “செவ்வானம்” நூல் அறிமுகம் குறித்தான தோழர் ஜீவகாருண்யம் கட்டுரை முழுவதும் அச்சுப் பிழைகளாகவே அமைந்தது வாசகனான எனக்கு வருத்தத்தை அளித்தது என்றால் கட்டுரை ஆசிரியர் மற்றும் நூல் ஆசிரியருக்கு எவ்வளவுக்கு வருத்தம் ஏற்பட்டிருக்கும் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் இருந்தால் நன்று. வாழ்க்கைப் புத்தக வாசிப்பு குறித்து எழுதிய எஸ்.வி.வேணுகோபாலன் அவர்களுடைய கட்டுரை மிக சிறப்பு. ‘யன் மே மாதா”சிறு கதை அவரில் ஏற்படுத்திய தாக்கத்தை விவரித்த விதம் வாசகர்களையும் வாசிக்கத் தூண்டும் என்பதில் ஐயமில்லை. “போலி அறிவியல் மாற்றுமருத்துவம் மூடநம்பிக்கை” நூல் அறிமுகம் செய்த பாலசரவணன் அவர்கள் ஆங்கில மருத்துவம் தவிர மற்ற அனைத்து மருத்துவமும் அறிவியலுக்குப் புறம்பான போலி மருத்துவம் என்று குறிப்பிட்டுள்ளது அவருடைய அறியாமையை காட்டுகிறது.உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமே ஆனாலும் நா கூசாமல் போலி மருத்துவம் என இவர் குறிப்பிட்டுள்ளது எனக்கு கிணற்றுத்தவளையை நினைவுபடுத்துகிறது.அவர் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழ எல்லாம்வல்ல இயற்கையை பிரார்த்திக்கிறேன். ஆகஸ்ட் மாத இதழ் கிடைக்கப் பெற்றேன் விரைவில் வாசித்த அனுபவம் எழுதுவேன்.

    https://bookday.in/puthagam-pesuthu-july-magazine-2021/

    ராஜேஷ்.நெ.பி
    சித்தாலப்பாக்கம் சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *