புதிய புத்தகம் பேசுது – நவம்பர் மாத இதழ் – 2021 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…
♻️ தலையங்கம்: வாசிப்பின் நம்பிக்கையை பள்ளிகளில் விதைப்போம்! – ஆசிரியர் குழு
♻️ கட்டுரை: இவ்வாண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் தான்சானிய நாவலாசிரியர் அப்துல் ரசாக் குர்நா – பேராசிரியர் ஜி.வெங்கட்ராமன்
♻️ அஞ்சலி: என்றும் நினைவில் தோழர் டி.எஸ்.ஆர்.
♻️சிறப்பு கட்டுரை: இன்று அதிகம் தேவைப்படும்.. அழ.வள்ளியப்பா- ஆயிஷா. இரா. நடராசன்
♻️நூல் அறிமுகம்: அம்பா: இந்தோனேசியா மண்ணில் கம்யூனிஸ்டுகளின் கண்ணீரை, தன் காதலோடு பேசுகிறாள் – சுரேஷ் இசக்கிபாண்டி
♻️ நூல் அறிமுகம்: அயல் மொழியில் அம்பேத்கர் – ப்ரதிபா ஜெயச்சந்திரன்
♻️ அஞ்சலி: தோழர் ப. துரைராஜ் – சிவகுரு
♻️ கட்டுரை: சோசலிசத்தை உரக்கப் பேசுங்கள்! – என்.குணசேகரன்
♻️ வாசிப்பு ரசனை வாழ்க்கை 12: வாசிப்பில் பெண்ணியம் – எஸ். வி. வேணுகோபாலன்
♻️ நேர்காணல்: மகாத்மா காந்தியின் ஆரம்பகால வாழ்க்கை கோபாலகிருஷ்ண காந்தியுடன் – பிரணாய் ராய் தமிழில்: சந்திர குரு
♻️ நூல் அறிமுகம்: போர்சூழ் மண்ணில் பெண் – முனைவர் இரா. செங்கொடி
♻️ நூல் அறிமுகம்: வல்லாண்மையின் தோட்டாக்கள் – ஸ்ரீதர் மணியன்
♻️ நூல் அறிமுகம்: படைப்பாளிகள் முகமும் அகமும் ஜெயகாந்தன் முதல் பாரதியின் கொள்ளுப்பேத்தி வரை – நிகழ் அய்க்கண்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
புத்தகம்: புதிய புத்தகம் பேசுது- நவம்பர் இதழ்
பதிப்பகம்:பாரதி புத்தகாலயம் பக்கங்கள்:64
விலை:20
தலையங்கத்தில் வாசிப்பின் நம்பிக்கையை பள்ளிகளில் விதைப்போம் என்ற மிக முக்கியமான அவசியத்தை குறிப்பிட்டு இருப்பது சிறப்பு. இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற தான்சானியா புதின எழுத்தாளர் அப்துல் ரசாக் குறித்தான கட்டுரை நன்று.
சிறப்புக் கட்டுரையாக வெளியாகியுள்ள அழ.வள்ளியப்பா அவருடைய நினைவுகள் அருமை. “அணிலே அணிலே ஓடி வா” “மாம்பழமாம் மாம்பழம்” “நிலா நிலா ஓடி வா” “ஞாயிற்றுக்கிழமை பிறந்த பிள்ளை நன்றாக பாடம் படிக்கும்” போன்ற எண்ணற்ற பல சிறுவர் பாடல்களை எழுதியவர் இவர்தான் என்பது அறிந்து மகிழ்ச்சியுற்றேன். அனைத்து பாடல்களுமே சிந்தனையை தூண்டும் எளிமையான பாடல்கள்.
“அம்பா” என்ற நூல் அறிமுகமும் அதன் மதிப்புரை வழங்கிய சுரேஷ் இசக்கி பாண்டி பாராட்டுக்குரியவர். அயல் மொழியில் அம்பேத்கர் குறித்தான பார்வை விளக்கும் மற்றும் ஒரு நூல் அறிமுகம் அருமை. சோசலிசத்தை உரக்கப் பேசுங்கள் என்ற தலைப்பில் என்.குணசேகரன் எழுதிய கட்டுரை மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கமும் பொதுவுடமை தத்துவத்தையும் குறிப்பிடுவதாக இருந்தது அருமை.
“எனது நூலகம் எனது பெருமை” என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான நூல்களின் பரிந்துரைகள் சிறப்பு. மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் கோபாலகிருஷ்ண காந்தியின் நேர்காணல் காந்தியின் ஆரம்பகால வாழ்க்கையையும்,அவரை பண்படுத்த உதவியது அவரது ஆரம்பகால வாழ்க்கையும் தென் ஆப்பிரிக்காவும் முக்கிய பங்கு வகிப்பதை காணமுடிகிறது. அவருடைய மனைவி கஸ்தூரிபாய் மற்றும் வள்ளியம்மை குறித்து குறிப்பிட்டுள்ளது மற்றும் அவருடைய வீரம் மற்றும் திடமான நகர்வும் பெண்களை மட்டுமல்லாமல் அனைவரையும் பெருமை கொள்ளச் செய்கிறது. மற்றொரு நூல் அறிமுகத்தை ஈழத்துப் பெண் தில்லை அவர்கள் எழுதிய “விடாய்” என்னும் தலைப்பில் வெளியாகியுள்ள கவிதைகள் மெய்சிலிர்க்க வைக்கிறது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையோடு தொடர்புடைய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்களை மையமாக கொண்டவயாக மனதை கனக்க வைக்கும் கவிதைகளாக உள்ளன.
“வாஷிங்டன் தோட்டாக்கள்” குறித்த நூல் அறிமுகம் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் நூலை நினைவுபடுத்துகிறது. வல்லரசு நாடான அமெரிக்கா தொடர்ந்து கையாண்டு வரும் தந்திரங்களை அவர்களால் சிதறுண்ட நாடுகளைப் பற்றிய சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது வியப்பு ஒன்றும் இலலை. படைப்பாளிகளின் முகமும் அகமும் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள மற்றுமொரு நூல் அறிமுகத்தில் பல்வேறு எழுத்தாளர்களான கார்த்திகேசு சிவத்தம்பி, கவிக்கோ அப்துல் ரகுமான், டொமினிக் ஜீவா, வல்லிக்கண்ணன், எஸ்.பொ, ஜெயகாந்தன், தி.க.சி போன்றவர்களைப் பற்றிய பல்வேறு குறிப்புகள் இடம் பெற்றுள்ளது சிறப்பிலும் சிறப்பு. அடுத்த மாத இதழுக்கான காத்திருப்புடன்..
https://bookday.in/puthagam-pesuthu-november-magazine-2021-synopsis/#respond
ராஜேஷ் நெ.பி
சித்தாலப்பாக்கம், சென்னை