“உலகுக்குத் தேவை குண்டுகள் அல்ல மருத்துவர்கள்”
கியூபா நாடு என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது புரட்சியாளர்கள் பிடல் காஸ்ட்ரோ மற்றும் சேகுவாரா. அதுபோன்று புரட்சி, கம்யூனிசம், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதே எல்லோருக்கும் நினைவுக்கு வரும்.
1960 ஆண்டு முதல் சோசலிச கியூபா நாடு கடைப்பிடித்து வரும் மருத்துவக் கொள்கைக்கு வித்திட்டவர் புரட்சியாளர் சேகுவாரா.
மருத்துவக் கல்வி பயின்று வந்த சே தனது சக மாணவருடன் அர்ஜென்டினா மற்றும் தென் அமெரிக்கா நாடுகள் பலவற்றிற்கு தனது இருசக்கர வாகனம் மூலம் பயணம் மேற்கொண்டார். தான் பயணித்த நாடுகளில் தொழு நோயாளிகளைச் சந்தித்தார். அவர்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்து ஊரை ஒதுக்கி வைக்கப்பட்டு இருப்பதும் அத்தோடு மருத்துவ வசதிகள் ஏதுமின்றி தவித்து வந்துள்ளதையும் சே கண்ணுற்றார்.
வறுமையாலும், பசியாலும், நோயாலும் பாதித்த மக்களைச் சந்தித்து மருத்துவம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார் சே. அவர்களுக்கான மருத்துவ உதவிகளை தன் சக தோழருடன் இணைந்து மேற்கொண்டார். அது போன்று சே அந்த நாட்டில் உள்ள மருத்துவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி நோயாளிகளுக்கு சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தினார்.
பயணத்தின் இறுதியில் பிடல் காஸ்ட்ரோவை சந்தித்தார் சே. அவருடன் இணைந்து கியூபாவின் விடுதலைக்கான போராட்ட பணியில் ஈடுபட்டார்.
இப் போராட்டங்களின் மூலம் கியூபா நாட்டின் விடுதலைக்கு வித்திட்டார் சே.
கியூபா நாட்டின் புதிய அரசியல் அமைப்பை பிடல் காஸ்ட்ரோ உடன் இணைந்து ஏற்படுத்தியதோடு இலவச மருத்துவத்தை அடிப்படை மனித உரிமை ஆக்கினார்.
கியூப நாட்டின் மருத்துவப் புரட்சி பெருநகரங்களை தாண்டி மருத்துவம் தேவைப்படும் கிராமங்களையும் சென்றடைந்தது என்பதே வரலாறு ஆகும்.
கியூபா அரசின் ஒருங்கிணைந்த மற்றும் திட்டமிடப்பட்ட முயற்சிகளால் எச் ஐ வி மற்றும் கொரோனா தொற்று காலங்களில் மிகச்சிறப்பாக செயல்பட்டு பாதிப்புகள் இன்றி மக்களை காப்பாற்றியது அரசு.
குறிப்பாக பாரம்பரிய மருத்துவ முறைகளையும் இணைத்து ஹோமியோபதி மருந்துகளையும் தயாரித்து இலவசமாக மக்களுக்கு வழங்கியது கியூபா அரசு.
கியூபா நாட்டு மருத்துவக் கல்வி ஹோமியோபதி மருத்துவ முறைகளையும் சேர்த்து தான் கற்றுக் கொடுப்பார்கள்.
கியூபா நாட்டின் மருத்துவ முறைகளை பல உலக நாடுகளைச் சென்றடைந்தது. பாதிக்கப்பட்ட பல நாடுகளுக்கு மற்ற நாடுகள் பண உதவி மட்டுமே செய்தனர்.
ஆனால் கியூபா அரசு மருத்துவர்களையும் செவிலியர்களையும் அனுப்பி நோயை கட்டுப்படுத்த பெருமளவு உதவியது.
கொரோனா காலத்தில் கியூபா நாடு 4 லட்சம் மருத்துவ பணியாளர்களை 164 நாடுகளுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் மூலம் பல நாடுகள் மருத்துவம் பயில கியூபா நாட்டிற்கு தாங்கள் நாட்டில் உள்ள மாணவர்களை அனுப்பும் சூழல் ஏற்பட்டது.
பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை தங்கள் நாட்டிற்கு வரவழைத்து மருத்துவ சிகிச்சை அளித்தது கியூப நாடு.
ஆண்டு கணக்கில் சிகிச்சை எடுத்து குணமடைந்து சென்றவர்கள் பல்லாயிரக்கணக்கான ஆவார்கள்.
ஒரு நோயை திறம்பட சமாளிக்க பின் கண்ட முறைகளை கையாண்டது கியூபா நாட்டின் அரசு.
நோயால் பாதிக்கப்பட்டவர்களை தகுந்த சோதனைகள் மூலம் கண்டறிவது.
நோயை குணப்படுத்த உதவும் சிகிச்சை முறைகள்
தொற்றைத் தடுக்கும் தடுப்பூசிகள்
இதுபோன்ற எளிய அணுகுமுறைகள் மூலம் பெருமளவு நோய் தொற்றை தடுத்தது கியூபா நாட்டின் அரசு.
கியூபா நாட்டின் மரபணு பொறியியல் மற்றும் உயரிய தொழில்நுட்ப மையம் பல்வேறு நோய்களுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்து மலிவான விலையில் உலகுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த மருந்துகளுக்கு உரிமம் பெற்றுக்கொண்டு அதிக விலையில் விற்பதை கியூபா நாட்டின் அரசு எப்போதும் ஆதரித்தது இல்லை.
மருத்துவத்துறையில் கியூபா மருத்துவக் குழுக்கள் கொண்டிருக்கும் நேர்மையான அக்கறை பிற நாடுகளின் சுகாதார அமைப்புகளில் இல்லை என்பதை உண்மை.
இக்கட்டான காலங்களில் கியூப நாட்டின் மருத்துவர்களை நம்பி பல நாடுகள் உள்ளது என்பது வரலாறு.
மருத்துவ உதவிகள் செய்யும் போது அந்த நாட்டின் அரசியல் சூழலில் தலையிடாது கியூபா அரசு.
கியூபா நாட்டின் பிரதிபலன் பாராது சேவை செய்யும் மனப்பான்மை நாடுகளைக் கடந்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது.
எனவே உலகுக்கு தேவை குண்டுகள் அல்ல மருத்துவர்கள் தான் என்பதை உலகறியச் செய்தது கியூப நாடு.
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை கொடுத்தாலும் கியூபா நாடு மருத்துவத்துறையில் உள்ள உலக அளவில் முன்னணியில் உள்ளது என்பதை இந்த நூலில் வாயிலாக அறியலாம்.
குறிப்பாக பெரும் தொற்று காலங்களில் கியூபா நாட்டின் மருத்துவத்துறை தங்களது ஆராய்ச்சிகள் மூலம் பல்வேறு நோய் தொற்றுக்கான மருந்துகளை கண்டறிந்து உலகிற்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இந்த நூலினை கொண்டு வந்துள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மத்திய சென்னை தோழர்கள் மிகுந்த பாராட்டுக்கு உரியவர்கள்.
அனைவரும் அவசியம் வாசித்து அறிய வேண்டிய நூல் இது.
நூலின் தகவல்கள்
நூல் : “கியூபாவின் மருத்துவப் புரட்சி”
தொகுப்பு : மத்திய சென்னை, த மு எ க ச
விலை : ரூபாய் : 70/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
நூல் அறிமுகம் எழுதியவர்
MJ. பிரபாகர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
சே மக்கள் மருத்துவராக
இருந்ததனாலேயே
கியூபாவின் மருந்துக்கொள்கைககள்
இவ்வாறு அமைந்ததோ.
நூலை படிக்கதூண்டிடும்
அறிமுகம். சிறப்பு MJPக்குவாழ்த்துக்கள்.