R Balakrishnan IAS in Sindhuveli Panpaattin Dravida Adithalam Book Review. Book day website is Branch of Bharathi Puthakalayam.



சிந்துவெளி பகுதியில் கிடைத்த எழுத்துகளைப் படித்தறிய முடியாத நிலையில், சிந்துவெளிப் பண்பாடு நிலவிய நிலப்பகுதியில் ஒரு காலத்தில் திராவிட மக்கள் வாழ்ந்தார்கள் என்பதைச் சான்றாதாரங்களுடன் நிறுவ முடியுமா? என்ற தேடலின் அடிப்படையில் நூலாசிரியர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவே இந்நூல்.

சிந்துவெளிப் பகுதியில் நிலவிய பண்பாட்டுக்கும், திராவிடப் பண்பாட்டுக்கும் இடையில் நிலவுகிற ஒற்றுமைகளை நூலாசிரியர் கண்டறிந்துள்ளார்.

சிந்துவெளியின் இன்றைய பகுதிகளான குஜராத், மகாராஷ்டிரா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய பகுதியில் உள்ள ஊர்களின் பெயர்களுக்கும், தமிழகத்தில் பல ஆண்டுகளாக உள்ள ஊர்களின் பெயர்களுக்கும் ஒற்றுமை இருப்பதை நூலாசிரியர் கண்டுபிடித்திருக்கிறார். கோட்டை, ஊர், கொற்கை, வஞ்சி, தொண்டி போன்ற பல ஊர்ப் பெயர்கள் சிந்துவெளிப் பகுதியில் இன்றும் உள்ளதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுகிறார்.

Buy Cinthuvelip Panpattin Tiravita Atittalam ...

சிந்துவெளி பண்பாட்டின் நகர அமைப்பில் மேல் – மேற்கு, கீழ் – கிழக்கு என்ற பாகுபாடு உள்ளது. தமிழ் உள்ளிட்ட திராவிட (Dravida) மொழிகளில் மேல் – மேற்கு, கீழ் – கிழக்கு என்று உள்ளது.

சிந்துவெளிப் பகுதியில் கிடைத்த முத்திரையொன்றில் சண்டை போடும் இரு சேவல்கள் உள்ளன. சங்க காலத்திலிருந்து இன்று வரை தமிழகத்தில் சேவல் சண்டை நடைபெற்று வருகிறது.

இப்படிப்பட்ட ஒற்றுமைகளை அறிவியல் ரீதியாகவும் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையிலும் விளக்கியிருக்கிற நூலாசிரியரின் கடும் உழைப்பு நம்மை வியக்க வைக்கிறது. அரிய நூல்.

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்
ஆர்.பாலகிருஷ்ணன் (
R. Balakrishnan IAS)
பக்கம் : 174
விலை : ரூ.150
வெளியீடு: பாரதி புத்தகாலயம், சென்னை-18; 044- 2433 2424.
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/sindhuveli-panpattin-thiravida-adithalam-9981/

– நன்றி தினமணி நாளிதழ் 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *