ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் எழுதிய “அகத்தியர் ஒரு மீள்பார்வை” புத்தகம் | R.Balakrishnan IAS's Agasthiyar Oru Milparvai Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் எழுதிய “அகத்தியர் ஒரு மீள்பார்வை” – நூல் அறிமுகம்

“அகத்தியர் ஒரு மீள்பார்வை” – நூல் அறிமுகம்

அகத்தியர் தமிழ்நாட்டை விட
அதாவது, உருவான இடத்தை விட
சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பாக
வாழ்த்திருக்கிறார் என்றே தெரிகிறது. ஈரான், அஜர்பைஜான், ஜார்சியா மற்றும் வடநாடு எங்கும் அகத்தியம் பரவி நாறிக் கிடக்கிறது.

குடத்தில் பிறந்தார் என்று சொன்னார்கள்.அதனால், குடமுனி, கும்பமுனி, குறுமுனி என்றார்கள். அதெல்லாம் கூட பரவாயில்லை கும்ப யோனி என்றும் சொல்கிறார்கள். அவர் எப்படி ஒரு மண்பானையிலிருந்து பிறந்தார்? என்று நான் இப்போது கேட்க விரும்பவில்லை. ஏனென்றால் அவர்கள் எப்போதுமே மனித யோனியில் பிறக்க மாட்டார்கள்!

மகாபாரதத்தில் துரியோதனனின் 99 சகோதரர்களும் ஒரே ஒரு சகோதரியுமாக மொத்தம் 100 பேர் மண் கலயத்தில் தான் பிறந்தார்கள். இதில் என்னுடைய கேள்வி என்னவென்றால்?

அந்தக் கடவுள்கள் பிறப்பதற்கே மனிதனால் உருவாக்கப்பட்ட மண் பானை தேவைப் பட்டிருக்கிறது. ஒரு மண் பானையைக் கூட படைக்க முடியாதவன், மனிதனைப் படைத்தான் என்று சொல்வதை எப்படி ஏற்பது? கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள், வானம் ஏறி வையகம் போனார்கள் என்றால் எப்படி நம்புவது?. ஒன்று மண் கலயத்தில் பிறக்கிறார்கள். இல்லை என்றால், குதிரையோடு கூடி பிறக்கிறார்கள்! எனவே அவர்கள் மனிதனுக்கும் மனித யோனிகளுக்கும் பிறக்காதவர்கள் ஆகவே இருக்கிறார்கள்.

நம்ம ஊரில் கோவக்கார முனிவர் என்றால் அது துர்வாச முனிவர் என்றுதான் சொல்லப்பட்டு வந்தது ஆனால், வடக்கே அகத்தியர் என்று சொல்கிறார்கள் போல. எனவே கோபம் கொள்வதும் சாபம் கொடுப்பதற்கும் அவர்களுக்கு ஒரு முனிவர் தேவைப்படுகிறது.

இந்த துர்வாச முனிவர் யார் தெரியுமா அவர்தான். பஞ்ச பாண்டவர்களின் தாயாரான குந்தி தேவிக்கு வரம் கொடுத்தவர். குந்திதேவிக்கு என்ன வரம் கொடுத்தார் தெரியுமா? அப்போது குந்தி தேவிக்கு 8, 10 வயது தான். குழந்தை என்றால், என்ன கொடுக்கலாம்? பட்டாம்பூச்சிகளோடு பறந்தோடும் படியான ஒரு வரத்தைக் கொடுத்திருக்கலாம்.

உண்ணுவதற்கு உடுத்துவதற்கு அல்லது விளையாடுவதற்கான பொம்மைகளை கொடுத்திருக்கலாம். அல்லது நல்லதொரு கணவன் உனக்கு அமைவான் என்று வாழ்த்தி இருக்கலாம்.

ஆனால், இந்த துர்வாச முனிவர், தேவர்கள் யாரை வேண்டுமானாலும் அழைத்து நீ அவர்களோடு கூடி குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற வார்த்தைக் கொடுக்கிறார். குந்திதேவியும் அப்படித்தான் ஆறு தேவர்களை அழைத்து, கர்ணனோடு சேர்த்து ஆறு பிள்ளைகளை பெறுகிறாள். ஒரு பிள்ளை கூட கடவுளுக்கு பெறவில்லை. இதில் அவர்களுக்குள் வாரிசு சண்டை வேறு!

இப்படி எல்லாம் கற்பனையான பல பொய்களை நம் மண்டையில் ஏற்றி வைத்துவிட்டு.வாயில் பிறந்தான்,கையில் பிறந்தான் காலில் பிறந்தான் என்று. கஞ்சா போதையில் கற்பனை செய்து கண்டமேனிக்கு எழுதி இருக்கிறார்கள். அப்படி எழுதி புனையப்பட்ட கதைகளில் ஒன்று தான் கோவக்காரப் புலி அகத்தியரும்.

சந்தோசம் என்றால் வரம் கொடுப்பதும், சங்கடங்கள் என்றால், சாபம் கொடுப்பதும்! பெரிய கடவுள்கள் என்று நினைப்பு.

வானத்துல போற ஒருவன் தரையில் தவமிருக்கும் அகஸ்தியரின் தலையில் எச்சிலை துப்பி விடுகிறான். உடனே அவனுக்கு ஒரு சாபம்.

பாண்டிய மன்னன் விஸ்ணுவை நினைத்து தியானத்தில் இருக்கையில். வந்து நின்ற அகஸ்தியருக்கு ஒரு வணக்கம் வைக்காததால் அவனுக்கு ஒரு சாபம்.

மகாராஷ்டிராவில் இருக்கும் அவர் மனைவி லோப முத்திரையை. தன் சிஷ்யனான தொல்காப்பியரை அழைத்து வரச் செய்கிறார். அழைத்து வரும்போது நதி ஒன்று குறுக்கிட, தன் குருநாதரின் மனைவி ஆற்றோடு அடித்துப் போய்விடக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில், ஒரு மூங்கில் குச்சியை எடுத்து அதன் நுனியைப் பிடித்துக் கொள்ளும்மா என்று கரை சேர்த்து விடுகிறார். மனைவி பிடித்த குச்சியின் ஒரு பகுதியை அவன் பிடித்தானல்லவா, அதற்கு ஒரு சாபம்.

வானத்தில் போறவன் எச்சி துப்பினால். அது சரியான இலக்கை வந்தடையுமா? இரும்பினால் செய்த ஒரு குண்டைத் தூக்கி போட்டால் கூட அது குறிப்பிட்ட இடத்தில் விழ வாய்ப்பு இல்லை. சரி அது கூட பரவாயில்லை எச்சி துப்பியது தப்புதான் அவனுக்கு சாபம் கொடுக்கலாம். ஆனால்,

தியானத்தில் இருப்பவர்கள், நிஸ்டையில் இருப்பவர்கள், கண்ணை மூடித்தான் தவம் இருப்பவர்கள். கண்ணை மூடியிருப்பவருக்கு முன்னால் வந்து நின்று விட்டு, எனக்கு வணக்கம் வைக்கவில்லை என்று சாபம் கொடுப்பது என்ன நியாயம்.

சரி அது இருக்கட்டும். லோபோ முத்திரையும் தொல்காப்பியரும் ஒரு கொம்பின் இரு முனையைப் பிடித்துக் கொண்டு, அவர்கள் இருவரும் ஆற்றைக் கடந்தது, குற்றாலத்தில் இருக்கும் அகத்தியருக்கு எப்படித் தெரிந்தது? சரி, ஞான திருஷ்டியில் பார்த்தார் என்று வைத்துக் கொள்ளலாம்! இதில் என்னுடைய கேள்வி என்னவென்றால்?

இவ்வளவு சாபமும், வரமும் கொடுப்பவர், ஞான திருஷ்டியில் பார்க்கக் கூடிய வல்லமை படைத்தவர்! ஒரே ஒரு மந்திரம் சொல்லி தன் மனைவியை தன் முன்னால் வந்து டக்கென்று நிற்குமாறு ஏன் செய்யக்கூடாது? சரி அது செய்ய முடியவில்லையா! ஒரு புஷ்பக விமானத்தை தயாரித்து கொடுத்து இருக்கலாம் இல்லையா? சீதையை ராவணன் புஷ்பக விமானத்தில் கடத்திக் கொண்டு போனதாகத் தானே சொல்கிறார்கள்.

வீணை மீட்டி, பாட்டுப் பாடி அந்த ராவணையே வென்றவர் அல்லவா அகத்தியர்.

பல இசைக்கருவிகளை இயற்றுவதில் வல்லவன், அவன் வீணையைத் தொட்டால் போதும் சிவனே ஓடிவந்து அவன் வாசலில் நிற்பானாம். வீணை மீட்டுவதில் ராவணனை வெல்ல உலகத்தில் எவருமே இல்லையாம். புலி சிங்கம் என்று பொறிக்காமல் தன் கொடியில் வீணையை பொறித்து வைத்தவன். வீணையை தன் கொடியில் பொறித்தான் என்றால் கலை இலக்கியத்தில் அவன் எவ்வளவு உயிராக இருந்திருக்கிறான். கலை பத்தில் சிறந்தவன் என்பதால் தலைப்பத்து என்று ஆனவன். அப்படிப்பட்ட ராவணனையே வெற்றி கண்ட அகத்தியரால் ஒரு புஷ்பக விமானத்தை உருவாக்க முடியாதா? முடியவில்லை என்றால் ராவணிடமாவது வாடகைக்காவது எடுத்திருக்கலாம்.

பொய்யை அவர்கள் மூட்டையாக கட்டி வைத்திருக்கிறார்கள். அவ்வப்போது அவிழ்கிறார்கள் அது நாறித் தொலைக்கிறது

அகத்தியர் இலக்கணம் செய்தார் என்கிறார்கள். அகத்தியர் இலக்கணம் செய்திருந்தால், தொல்காப்பியருக்கு அவர் ஆசானாக இருந்திருந்தால், தமிழை நீச பாசை என்பார்களா?

பொய்யை, எந்த அளவுக்கு சொல்லலாம்? இல்ல எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்குல்ல. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லுடா என்பார்கள். அப்படி பொருத்தமே இல்லாத பொய்களின் உச்சம்! என்றால்?

எழுத்தில் ஆண்பால் பெண்பால்? என்பது.
உயிர் எழுத்து ஆண் பாலாம். நெடில் எழுத்து பெண் பாலாம். அது இரண்டும் சேர்ந்திருந்தால் அது அலியாம்.

பாரப்பா வாதத்தில் லட்சம் காப்பு பாடினேன், வைத்தியத்தில் 2 லட்சம் பாடினேன் என்கிறார் அகத்தியர். கபடி போட்டி கிரிக்கெட் போட்டி என்பது போல அவர்களுக்குள், பொய் சொல்வதிலும் போட்டி இருக்கும் போல, அண்ணாமலை ஐபிஎஸ் சொன்னார்லே 25 ஆயிரம் புத்தகங்களைப் படித்தேன் என்று. அவர்கலெல்லாம் அகத்தியத்தின் வாரிசுகள் தான் போல.

அகத்தியர் ஒரு குழந்தையைப் படைத்தார் என்கிறார்கள்! படைத்த குழந்தையை வளர்க்கச் சொல்லிக் கொடுக்கிறார். வளர்ந்த பிறகு அவரே வந்து திருமணம் செய்து கொள்கிறார்! பெற்றார் என்று சொல்வது தானே சரியாக இருக்கும். பெற்றார் என்று இருந்ததைத்தான் படைத்தார் என்று மாற்றியிருக்க வேண்டும். இதில் என் கேள்வி என்னவென்றால்?

ஒரு குழந்தையை படைக்கும் அளவு சக்தி இருக்கிறபோது அது ஏன் குழந்தையாக படைக்க வேண்டும்? படைக்கும் போதே அவளை குமரியாகவே படைத்திருக்கலாமே. பெற்றாலும் படைத்தாலும் ஒன்றுதானே! இவர்கள் பெரியாரை குற்றம் கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறதோ?

மேல் மேற்கு கீழ் கிழக்கு என்பதை தோழர் ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் கண்டுபிடித்ததாகவும், அது ஒரு புதிய கண்டுபிடிப்பு போலவும் பேசப்படுகிறது.

சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் வைகை வந்ததாக, ஆர் பாலகிருஷ்ணன் அவர்களின் ஆய்வு முடிவாக இருக்கிறது.

வேர்ச்சொல் ஆய்வில் உடன்பாடு இல்லை என்றும் பாலகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார்.

மேல் மேற்கு கீழ் கிழக்கு என்பது தமிழர்கள் வாழ்ந்த நிலத்தினுடைய இயற்கை அமைப்பு. சிந்துவெளி மனிதர்களின் மூதாதையர்கள் வாழ்ந்த நிலமும் மேல்புறம் உயர்ந்தும் கீழ் புறம் தாழ்ந்தும் இருந்திருக்க வேண்டும், என்பது ஆய்வாளர்களின் கூற்று. ஆகையால் தான் தாங்கள் வாழ்ந்த நிலத்திலும், இயற்கை அமைப்பு இல்லாவிட்டாலும் மேல் மேற்கு கீழ் கிழக்கு என்பதை கடைப்பிடித்திருக்க வேண்டும்.

இப்போதும், தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் மேற்கு திசையை மேடாக இருக்குமாறும். கிழக்குத் திசையை தாழ்வாக இருக்குமாறுதான் அமைக்கிறார்கள்.

கிழக்கு திசையில் தான் ஆழ்துளை கிணறு அமைக்கிறார்கள். மேற்குத் திசையில் தான் தண்ணீர் தொட்டி அமைக்கிறார்கள். ஆனால் இதையே அவர்கள் மனையடி சாஸ்திரம் என்கிறார்கள்.

மேற்கு மூலை மேடக இருக்க வேண்டும், அது குபேரன் மூலை. என்றும். அது மேடாக இருந்தால் தான் செல்வம் கொட்டும் என்று வாஸ்த்து சாஸ்திரக்காரனும் கூறுகிறான்.

தமிழில் திசையை குறிப்பதற்கு சொற்கள் இல்லை என்கிறார்கள்.திஸ், திஸா என்ற வடமொழிச் சொல்லில் இருந்தே திசை என்ற தமிழ்ச்சொல் திரிந்ததாகக் கூறுகிறார்கள். இது உண்மை என்றால்! வானியலையும், கடல்செலவையும் இந்த உலகிற்கு அளித்த தமிழன் திசை என்ற சொல் அறியப்படாமல் அவற்றை எவ்வாறு உணர்த்தினான். திக்கும் திசையும் வட சொற்கள் என்றால் அதற்கான தமிழ்ச்சொல் என்ன?டைரக்ஷன் என்ற பொருளைத் தரும் சொல் தமிழில் இல்லை என வடமொழியாளர்கள் கூறுகிறார்கள்.

வேர்ச்சொல் ஆய்வில் ஈடுபடாமல், திசையைக் குறிக்கும் திசை என்ற சொல் தமிழ் தான் தமிழில் உள்ளது என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?

தமிழில் திசைச் சொல் எப்படிப் பிறந்தது?
தமிழர்கள் மேடான இடத்தையே மேல் திசை என்றார்கள். பள்ளமான பகுதியை கீழ் திசை என்றார்கள்.

மேல் + கு, மேற்கு என்றானது. கீழான திசை கிழக்கு திசையானது. கீழ், கிழக்கு எனப்பட்டது. தென்னிந்தியாவின் நில அமைப்பே அப்படித்தான் உள்ளது. ஒரு பக்கம் உயர்ந்தும் ஒரு பக்கம் தாழ்ந்தும். தமிழ்நாட்டின் மேற்கே தான் மேற்கு தொடர்ச்சி மலையும் உள்ளது. தமிழ்நாட்டின் முக்கியமான நதிகள் அனைத்தும் கிழக்கு நோக்கித்தான் செல்கிறது.

தேம் திசை என்பதே தென் திசையானது. தேம் என்றால் இனிமையான, சுவையான, அல்லது வளங்கள் நிறைந்த திசை என்று பொருள். தேம்+ காய் – தேங்காய். தென் திசையில் செழித்து வளர்ந்த மரங்கள் தென்னை மரங்கள் எனப்பட்டன. தெற்கு என்ற சொல்லுக்கு வேர்ச் சொல் தேம் என்பதே. தேம் என்பதே தென் திசையானது.

வடுத்தல் என்பதற்கு விரிதல், நீளுதல் என்பதே பொருளாகும். தமிழகத்தின் வட பகுதி வடுத்திருந்ததால் அது வடுநாடு அல்லது வடுக நாடு எனப்பட்டது. வடபகுதியைச் சேர்ந்த ஆந்திர மக்களை வடுகர் என்று சொல்லப்பட்டது. தமிழகத்தில் அவர்கள் குடியேறிய சில கிராமங்கள் இப்போதும் வடுகபட்டி என்ற பெயரிலேயே இருக்கிறது.

எனவே தோழர் ஆர் பாலகிருஷ்ணன் அவர்களின் ஆய்வுகள் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். சிந்துப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு இருக்கு என்பதையும் ஒத்துக்கொள்ளலாம் ஆனால், சிந்து வெளியிலிருந்து தமிழர்கள் தமிழகம் வந்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால்? அவருடைய ஆய்வு இன்னும் ஆழம் காண வேண்டும்.

ஆனாலும் தன் வாழ்வின் ஒரு பகுதியை, தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும், தமிழர்களின் தன்மானத்திற்காகவும் ஒதுக்கி உள்ளதை மனதார பாராட்டுகிறேன். மனதிற்கு ஏற்ப இல்லாததை கேள்விக்கு உள்ளாக்குகிறேன்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: அகத்தியர் ஒரு மீள்பார்வை
ஆசிரியர்: ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
வெளியீடு:
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
விலை: ₹.80
அறிமுகம் எழுதியவர்:  
எழுத்தாளர் பொன் விக்ரம்

******************************************************************************

புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு

2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை  49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது.  ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும்  ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும்,  புத்தக கண்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று மாலை 5.30 மணியளவில் நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும்.  இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன், உமர் பாரூக் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை  https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *