1
இந்த பூக்கள்
மட்டும் எப்படி ?
நல்லது, கெட்டதுக்கு
என
இரு வாசனையை
கொடுக்க முடிகிறது ?
2
அந்த வளர்பிறையைச்
சுற்றி
வரையப் பட்டிருக்கும்
மேகக் கூட்டங்கள்
நிலாவுக்கான பின்புலத்தை
ஏதோ ஒரு வகையில்
அழுத்தமாகத் தான்
காட்டுகிறது,
3
சுழன்றடிக்கும்
அந்த எதிர்க் காற்றை
எதிர்த்து
தென்னை மரத்தின்
கீற்றுகள் அனைத்தும்
ஒற்றுமையாக தான்
போராடுகிறது,
என்னே
இத்தனைப் பெரிய வானம்
வெறும் வேடிக்கை மட்டும்
தானேப் பார்க்கிறது ?
4
ஜன்னலுக்கு வெளியே
நின்று கண்ணாடியைக்
கொத்தும் பறவையொன்று
தான்
தொலைத்தக் காட்டைப்
பற்றியக் கவிதையொன்றை
எழுதி விட துடிக்கிறது,