இந்துத்துவா என்றால் என்ன? – பாசிசக் கோட்பாடுகளை வீழ்த்தும் 100 கேள்வி-பதில்கள்
சமூகத்தில் பேராபத்தாக உருவெடுத்துள்ள ஒரு கருத்தியலை ஆழமாக எதிர்கொள்ள, அதன் தத்துவப் பின்னணியை முதலில் துல்லிய மாகப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில், மதங்களின் தோற்றுவாய் எது என்ற கேள்வியில் தொடங்கி, வகுப்புவாதத்தை முறி யடிப்பது எப்படி என்பது வரை 100 சுருக்கமான வினா-விடைகள் மூலம் ஆர்.எஸ்.எஸ்-இன் சதித்திட்டங்களை அம்பலப்படுத்துகிறது மார்க்சிய ஆய்வாளர் இரா. சிசுபாலன் எழுதிய ‘இந்துத்துவா என்றால் என்ன?’ என்னும் நூல்.
தொன்மைக்காலத்தில் இயற்கைச் சக்திகளைக் கண்டு அஞ்சிய மனிதன், தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தொடங்கிய வழிபாடே பிற்காலத்தில் அமைப்பு ரீதியான மதமாக மாறியது. அப்படி உருவான மதத்தைத் தங்களின் அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்தும் அமைப்பே ஆர்.எஸ்.எஸ் ஆகும். இந்துத்துவா என்பது ஒரு மதமல்ல, அதுவொரு பாசிச அரசியல் திட்டம் என்பதை ‘ஜென்டில்மேன்’ வாஜ்பாய் துவங்கி ‘விஸ்வ குரு’ மோடி வரையிலான அவர்களின் பல்லாயிர முக மூடிகளைத் தோலுரித்துக் காட்டுவதன் மூலம் நூல் விளக்குகிறது. பாசிசத்திற்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் உள்ள பொதுத்தன்மைகள், இருதேசக் கோட்பாட்டின் உண்மை வரலாறு, மனுவாதம், வேத கால நாகரிகமும் ஹரப்பா நாகரிகமும் ஒன்றா போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளுக்கு இந்நூலில் அழுத்தமான பதில்கள் உள்ளன.
ஆர்.எஸ்.எஸ்-இன் சித்பவன் பார்ப்பனத் தலைமை, சர்சங்கசாலக் கட்டமைப்பு மற்றும் அதன் வஞ்சகமான பொய்ப் பிரச்சாரங்களை நூல் ஆதாரங்களுடன் முறியடிக்கிறது. “பாசிசம் என்பது நிதி மூலதனத்தின் படு பிற்போக்கான, இனவெறி கொண்ட ஏகாதிபத்தியவாதிகளின் பயங்கரவாதச் சர்வாதிகாரம்” என்ற ஜார்ஜ் டிமிட்ரோவின் புகழ்பெற்ற வரையறைப்படி, அன்றைய நாஜி ஜெர்மனிக்கும் இன்றைய இந்தியாவுக்கும் உள்ள ஒற்றுமை-வேற்றுமைகளை விவாதிக்கும் இப்புத்தகம், இதனை முறியடிப்பதற்கான மாற்று வழிகளையும் முன்வைக்கிறது. ஒரு மணி நேரத்தில் வாசித்து முடிக்கக்கூடிய 32 பக்கங்கள் கொண்ட இந்நூல், இந்துத்துவா பாசிசத்திற்கு எதிராகக் களம் காண்பவர்கள் கையில் ஏந்த வேண்டிய கூர்மையான தத்துவ ஆயுதமாகும்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | இந்துத்துவா என்றால் என்ன? |
| ஆசிரியர்: | இரா. சிசுபாலன் |
| வெளியீடு: | |
| விலை: | ₹30.00 மட்டுமே |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 எஸ். பாலா |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

