ரா. சண்முகவள்ளியின் கவிதைகள்
💖 இரக்கமற்ற இந்த இரவுகளை
என்ன செய்வது?
உன்னோடு இருக்கையில்
மாரத்தான் ஓட்டம் ஓடுகிறது
நீயில்லா இரவுகளில்
மரணதேவன் வாகனமாய்
நகர்கிறதே!
💖 ஆம்
நான் சற்று சுயநலவாதி தான்
அவனின் மீதான
என் காதலை
அவனிடம்சொல்லாது
என்னோடு வைத்துக் கொண்டாடி
மகிழும் சுயநலவாதி நான்
ஏனெனில்
மழை ஒருபோதும்
சொல்லிக்கொண்டு வருவதில்லையே
என் காதலும் அப்படித்தான்
💖 இப்பொழுதெல்லாம்
குடுகுடுப்பைக்காரன்
எங்கள்தெருவுக்கு வருவதேயில்லை
அவள் எங்கள்தெருவுக்கு
குடிவந்த நாள் முதல்
நல்ல காலம் பிறந்ததென்று
💖இன்று கவிதை தினமாம்
ஆண்டாள் இயற்றிய
திருப்பாவை போல
எனக்கும் உன் பொருட்டு
கவி இயற்ற ஆசைதான்
என்ன செய்வது
உன் பெயர் எழுதிய பின்
வேறு கவி எழுத மறுக்கிறதே
என் பேனா
கவிதைத் துளிகள்
1
இப்பொழுதெல்லாம்
அதிகமாக யோசிக்கிறேன்
நீ என்னைப் பற்றி
என்ன
யோசிப்பாய என்று!
2
காதலில் இறுகப்பற்றுதல்
என்பது வெறும் காமம்
அதையும் தாண்டி
உனக்காக நான் இருக்கிறேன்
என்பதன் வெளிப்பாடாக கூட
இருக்கலாம்
அந்தப்பற்றுதலில்
கரையாதோர் உண்டோ?
3
என்னவன் ரசிக்கும்
அழகியெனும்
கர்வம் மின்னச் செய்யும்
என்னை இன்னும்.
4
இரை என்று
தெரிந்தும் பசிக்காமல்
புசிக்காத புலிகூட
புத்தரின் சாயல்
5
நிலாச்சோறாய் ஆனதடா
உன்பிம்பம் இரவு மட்டும்
பசியாற எனக்கென்று
ஒரு நிலவு
உன் முகச்சாயலில்
6
அன்பென்ற
அங்குசம் போதும்
களிறின் துதிக் கையில்
ஊஞ்சல் ஆட
7
முத்தம்
ஊடலின்முடிவு
கூடலின் தொடக்கம்
8
நின் எச்சில் கொண்ட
முத்தங்களைச்
சிந்தாமல் சிதறாமல் உள்வாங்க
ஏதுவாக என் கன்னக்குழி
கவிதை எழுதியவர்:
ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்
தென்காசி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.