அட்டைப்படமே அசத்தலாக நம்மை ஒரு கிராமத்துக்குள் அழைத்துச்செல்கிறது.
புத்தக வெளியீடு என்றதும் சகோ எனக்கு ஒரு புத்தகம் என்றேன். முகவரி தாருங்கள் என்று முகவரி அனுப்பிவிட்டு சிரித்த வெள்ளந்தி மனிதர்.
ஏதோ 8ஆம் நூற்றாண்டுக்குள் நுழைந்த உணர்வு. அடடா இராஜாக்கமங்கலம் பெயரை இப்படி ஆரம்பித்து சொல்லும் போது சிறுவயதில் கதை கேட்ட ஞாபகம்.
இவர் எழுதிய இந்த கிராமத்து சாமியாட்டம் அதுவும் இந்த குலவையிடல் ஆட்டத்தின் வகைகள் மாறுபட்டகுலவைகள்.
ஆட்டம் மாறும்போது பயத்தோடு பார்த்ததை மீண்டும் எழுத்தாய் படிக்கும்போது நினைவுகள் மீளவில்லை.
வழக்கொழிந்த விளையாட்டுக்கள் அந்த இராஜாக்கமங்கலம் வழிநெடுகிலும் எழுத்துக்குள் பார்வையாளனாய் பயணிக்க வைக்கிறார் இராஜேஷ் சங்கரப்பிள்ளை. பூக்கள்,மாயன்கள் என இயல்பாய் இழுத்துச் செல்கிறார் எழுத்தில். ஆங்காங்கே சொற்களுக்கு விளக்கம் சங்ககாலம் வரை சொற்கள் ஆராய்ந்து இருப்பது அவர் உழைப்பைக்காட்டுகிறது.
இந்த அர்ச்சனை டிக்கெட், தேங்காய் பழச்சீட்டு, ஸ்பெஷல் தரிசன டிக்கெட் இதெல்லாம் இல்லாத கூரையில்லா மாடன்கள் தரிசனம் உண்மையான பக்தியின் வெளிப்பாடு அப்படியே உயிர்ப்பாய் உணர்வைத்தொடும் சிறப்பான எழுத்து.
இதுபோல் ஒரு வட்டார வழக்கு படித்து நீண்டநாளாகிறது. நன்றி இராஜேஷ் சங்கரப்பிள்ளை சார்.
கிராமத்து சிதறல்கள்
ஒவ்வொரு துளியும் அற்புதம்.
பார்வதி பாலசுப்ரமணியம்
நூல்: இராசாக்கமங்கலம் (கிராமத்து சிதறல்கள்)
ஆசிரியர் : திரு.இராஜேஷ் சங்கரப்பிள்ளை
வெளியீடு: ஜெயா பதிப்பகம்
அட்டைப் பட ஓவியம் : ஜீவா

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

