உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள பொது சுகாதார நிபுணரான ஆஷிஷ் ஜா மற்றும் பிரபல ஸ்வீடிஷ் தொற்றுநோயியல் நிபுணரான ஜோஹன் சீசிக்கே ஆகியோருடன் ராகுல் காந்தி 2020 மே 27 புதன்கிழமையன்று உரையாடினார். இதற்கு முன்பாக உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரான ரகுராம் ராஜன் மற்றும் நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி ஆகியோருடன் ராகுல் காந்தி உரையாடி இருக்கிறார்.

ஆஷிஷ் கே.ஜா

ஹார்வேர்டு உலகளாவிய சுகாதார நிறுவனத்தின் இயக்குநரான இவர், சமீபத்தில் பிரவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள பொது சுகாதாரப் பள்ளியின் புலத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=saFTjRUG3SQ

உரையாடலின் முழுமையான எழுத்தாக்கம்

ராகுல் காந்தி: வணக்கம்

ஆஷிஷ் ஜா: ஹே ராகுல், எப்படி இருக்கிறீர்கள்?

ராகுல் காந்தி: உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி

ஆஷிஷ் ஜா: இதை ஏற்பாடு செய்ததற்கு நன்றி. நான் இதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்

ராகுல் காந்தி: நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்

ஆஷிஷ் ஜா: நான் மிகவும் நன்றாக இருக்கிறேன். நன்றி

ராகுல் காந்தி: ஒரு விதத்தில், இந்தியாவில் இருந்து, சிறப்பாகச் செயல்பட்டு, மருத்துவத் துறையில் முன்னணியில் இருப்பதை, இந்தியாவில் உள்ள ஏராளமான இளம் குழந்தைகள் விரும்புகின்றவிதத்திலேயே நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் அந்த பயணத்தைக் கடந்துவிட்டீர்கள்.

Shri Rahul Gandhi in conversation with Prof. Ashish Jha & Prof ...

ஆஷிஷ் ஜா: நான் என்னாலானமுயற்சிகளைச்செய்தேன். அது ஒரு நல்ல பயணமாகவே இருந்தது. இந்த நாட்களில் எனது பெரும்பாலான நேரத்தை அமெரிக்காவைப் பற்றி சிந்திப்பதற்கு, உண்மையில் உலகளவில் சிந்தித்து வந்தாலும், உங்களால் பாராட்டக்கூடிய அனைத்து காரணங்களுக்காகவும் இந்தியா என் மனதிலும் என் இதயத்திலும் மிக முக்கியமான பங்கைக் கொண்டிருக்கிறது. இந்த மிகக் கடினமான காலத்தில், இந்தியாவிற்கு  உதவிகரமாக இருக்க முயற்சிப்பது மிகவும் முக்கியமானது. எனவே அந்த வகையில் என்னால் செய்யக்கூடிய அனைத்தையும்… நான் செய்து வருகிறேன்….

ராகுல் காந்தி: பொதுமுடக்கம் என்ற கருத்து குறித்த உங்கள் பார்வை என்னவாக இருக்கிறது? இந்த பொதுமுடக்கத்திலிருந்து ஒருவர் தன்னை எப்படி வெளியேற்றிக் கொள்வது, ஏனென்றால் நான் இப்போது அதை உணர்ந்து கொண்டிருக்கிறேன். ஏராளாமானோர், அது ஒரு உளவியல் மாற்றம் என்று சொல்கிறார்கள்.  நோயை வகைப்படுத்திக்கொண்டு, ​​நாம் இப்போது பொதுமுடக்கத்திற்குள் செல்லப் போகிறோம் என்றுகூறும்போது, ​​அது மிகவும் ஆபத்தான விஷயம் என்று நம்புகிற மக்களின், மக்களின் உளவியலை இப்போது மாற்றுகிறீர்கள். அது எதுவாக வேண்டுமானலும் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் அவ்வாறான சிந்தனையை அவர்களிடமிருந்து அகற்ற வேண்டும், அதை மிகவும் கவனமாகச் செய்ய வேண்டும். ஆனாலும் கதவுகளைத் திறந்து வைக்கவும் முடியாது. இந்த சிக்கலான இடத்தை எவ்வாறு ஒருவர் வழிநடத்துவது?

ஆஷிஷ் ஜா: அதில் இரண்டு அம்சங்கள் உள்ளன. அவை இரண்டும் அவசியம் பேசப்பட வேண்டியவை. பொதுமுடக்கம் ஏன், அதை எவ்வாறு விலக்குவது என்பது முழுக்க முழுக்க பொது சுகாதாரம் சார்ந்த அம்சம். மேலும் நீங்கள் விவரித்த உளவியல் அம்சமும் இருக்கிறது. அவை ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை கொள்கை வகுப்பாளர்கள் எப்போதும் புரிந்து கொள்வதில்லை என்றே நான் நினைக்கிறேன்.

எனவே அதன் பொது சுகாதார பகுதியிலிருந்து ஆரம்பிக்கலாம். பொதுமுடக்கத்தைச் செய்வதற்கான காரணம் என்னவென்றால், வைரஸின் பரவலை நீங்கள் குறைக்க முயற்சிக்கிறீர்கள். இந்த வைரஸ் ஒரு புதிய வைரஸ். மனித இனம் இந்த வைரஸை இதற்கு முன்பு பார்த்ததில்லை. அதாவது நாம் அனைவருமே எளிதில் பாதிக்கப்படுகிறவர்களாக இருக்கிறோம். நாம் அனைவருமே எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களாக இருக்கிறோம். கவனிக்காமல் விட்டுவிட்டால், இந்த வைரஸ் அதிவேகமாக வளரும். சராசரியாக இந்த வைரஸ் மேலும் மூன்று பேரைப் பாதிக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம். திடீரென்று இந்த மூன்றுபின்னர், 9, 27, 81 என்று அதிகரிக்கிறது. திடீரென்று பல லட்சக்கணக்கில் அதிவேக வளர்ச்சி அடைகிறது. அதைத் தடுப்பதற்கான வழி, பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து, அவர்களை பாதிக்கப்படாதவர்களிடமிருந்து பிரிப்பதே ஆகும்.

சரி அதை எப்படிச் செய்வது? உங்களிடம் இரண்டு தேர்வுகள் இருக்கின்றன. உண்மையிலேயே தீவிரமான பரிசோதனை, தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்தலை நீங்கள் செய்யலாம். அதை உங்களால் செய்ய முடியாவிட்டால், நீங்கள் எல்லாவற்றையும் முடக்க வேண்டும். பொதுமுடக்கத்தின் மூலமாக, வைரஸ் பரவலைக் குறைக்க முடியுமா? கண்டிப்பாக உங்களால் முடியும். ஆனால் அது நிச்சயமாக மிகவும் கணிசமான பொருளாதார விளைவுகளைக் கொண்டதாகவே இருக்கிறது. அந்த பொருளாதாரப் பிரச்சனைகளில் பெரும்பாலானவை குறித்து, என்னை விட பலருக்கு அதிக நிபுணத்துவம் இருக்கிறது. ஆனாலும் பிரச்சனை இருப்பது தெளிவாகவே உள்ளது.

நீங்கள் அந்த நேரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதே பொதுமுடக்கத்தைப் பற்றி நான் எப்போதும் கேட்கின்ற மற்றொரு கேள்வியாகும். பொதுமுடக்கத்தை விலக்கிக் கொள்ள நீங்கள் எவ்வாறு தயாராகிறீர்கள்?  பொதுமுடக்கம் சற்று அவகாசத்தைப்பெற்றுத்தரும்என்றாலும், பொதுமுடக்கத்தையே குறிக்கோளாக கொள்ள முடியாது.  பரிசோதனை, தடமறிதல், தனிமைப்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு ஆகியவற்றை உருவாக்குவதற்காக அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பலாம். மக்களுடன் தொடர்புகொள்வதற்கு அந்த நேரத்தைப் பயன்படுத்த விரும்பலாம்.. இப்போது நான் அந்த உளவியல் சிக்கல்கள் குறித்து சொல்கிறேன். பொதுமுடக்கம் முடிவடையும் போது, அந்த வாழ்க்கை மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். அது கடந்த ஆண்டு மே அல்லது ஜூன் மாத வாழ்க்கைக்கு திரும்பச் செல்வதாக இருக்காது. அடுத்த 6-12-18 மாதங்களில் இருக்கப் போகின்ற வாழ்க்கை மிகவும் வித்தியாசமாகவே இருக்கும். உண்மையில் அஃதகாலம்அனைத்தையும் திட்டமிடுவது பற்றி இருக்கும். தகவல் தொடர்பு மட்டுமல்ல, உண்மையில் சிந்தித்துப் பார்த்தால், பொது போக்குவரத்து எப்படி இருக்கும்? யார் மீண்டும் வேலைக்குச் செல்வார்கள்? பள்ளிகள் என்ன செய்யும்? பொதுமுடக்கத்தின் போது நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் ஏராளமாக உள்ளன.

இது குறித்து நான் கடைசியாகச் சொல்வது, உளவியல் சிக்கல்களைப் பற்றியதாக இருக்கிறது. பொதுமுடக்கத்தின் போது, நீங்கள் மக்களுக்கு அனுப்பும் தெளிவான சமிக்ஞை உள்ளது. இந்தியாவில் ஆங்காங்கே நோய் பரவல் அதிகமாக ஏற்பட்டுள்ளது. தேசிய அளவிலான பொதுமுடக்கத்தை நாம் ஒருபோதும் செய்ய வேண்டியதில்லை. எனவே தான் நீங்கள் இது வேறு என்று மக்களிடம் சொல்கிறீர்கள். இது மிகவும் மோசமானது, இதைச் செய்யாவிட்டால், மிகவும் அழிவுகரமாகிவிடும் என்று அவர்களிடம்சொல்கிறீர்கள். இப்போது பொருளாதாரத்தை மீண்டும் திறக்கும்போது, ​​ஒரு குறிப்பிட்ட அளவிலான நம்பிக்கையை நீங்கள் மக்களிடம் உருவாக்க வேண்டும். ஏனெனில் நம்பிக்கை இருக்கும் இடத்திலேயே பொருளாதாரம் நீடித்து இருக்கிறது. ஏனென்றால், மக்கள் பயந்தார்கள் என்றால், அவர்கள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள். எனவே நீங்கள் ஓரளவு நம்பிக்கையை அவர்களிடம் உருவாக்க வேண்டும். இது ஒரு சிக்கலான விஷயம். உலகில் எந்த நாடும் இதை நல்ல முறையில் செய்திருப்பதாகநான் பார்க்கவில்லை. ஆனால் எல்லோரும் இந்த வழியிலேயேதங்களுக்கான வழியை உருவாக்குகிறார்கள்.

ராகுல் காந்தி: வீட்டிற்குச் செல்லும் பயணத்தை மேற்கொண்டிருந்த சில புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் நான் பேசிக் கொண்டிருந்தேன், அவர்களில் சிலருடன் நான் பேசினேன். அவர்களில் ஏராளமானோர், நிச்சயமற்ற தன்மையே உண்மையில் தங்களைப் பயமுறுத்தும் விஷயம் என்று கூறுகிறார்கள். அவர்கள் குறைந்தபட்ச ஊதியத்தில் வாழ்கிறார்கள், அவர்கள் அன்றாடக் கூலியில் வாழ்கிறார்கள். மேலும் அவர்கள், ’பாருங்கள் நாளை என்ன நடக்கப் போகிறது என்பது எங்களுக்குத் தெரியாது’ என்று கூறினார்கள். அதுதான் இப்போது உண்மையான பிரச்சினை. இந்தப் பொதுமுடக்கத்தை மருத்துவ ரீதியான வழியில் நீக்குவது, அதன் மூலம் இந்த நிச்சயமற்ற தன்மையை எவ்வாறு குறைக்கலாம், இரண்டாவது முறையாக பொதுமுடக்கத்தை சந்திக்கும் ஆபத்து ஏற்படாது என்பதற்குஒருவர் என்ன செய்யலாம்? மருத்துவ ரீதியாக சிந்திக்க வேண்டிய விஷயங்கள் யாவை? பரிசோதனை உத்தி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஆமாம் நிறைய பரிசோதிக்க வேண்டும், பரிசோதனை செய்ய ஒரு குறிப்பிட்ட முறை இருக்கிறதா அல்லது நாம் பரிசோதிக்க வேண்டிய சில பகுதிகள் இன்னும் உள்ளனவா? பரிசோதனையை ஒரு உத்தியாக நாம் எவ்வாறு நினைக்கிறோம்?

ஆஷிஷ் ஜா: தென்கொரியா, தைவான், ஹாங்காங், உண்மையில் கிழக்கு ஆசிய நாடுகள் இதைச் மிகச் சிறப்பாக செய்திருக்கின்றன. இன்னும் சரியான பரிசோதனை உத்தி என்ன என்பதைக் கொண்டு வருவதற்கு மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும்நிச்சயமாக முயற்சித்து வருகின்றனர்.

இது குறித்த எனது பொதுவான அணுகுமுறை இதுதான்-பொதுவாகச்சொல்வதென்றால், எந்தவொரு அறிகுறிகளையும் கொண்டிருக்கும்எவரையும் நீங்கள்பரிசோதிக்க வேண்டும். நீங்கள் அனைவரையும் பரிசோதிக்க மாட்டீர்கள். ஏனென்றால் அறிகுறிகளே இல்லாதவர்கள் இருக்கிறார்கள். சுமார் 20% பேருக்கு அவர்களின் நோய்க்காலம் முழுவதும் எந்த அறிகுறிகளும் இருப்பதில்லை என்று நாங்கள் கருதுகிறோம், மேலும் 20-25% பேர் எந்த அறிகுறிகளும் ஏற்படுவதற்கு முன்பாகவே, இந்த நோயைப் பரப்புகிறார்கள். எனவே அறிகுறிகளுடன் உள்ள அனைவரையும் பரிசோதிக்க வேண்டும். அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளை கண்காணிப்பதற்கான ஒரு உத்தியைக்கொண்டிருக்க வேண்டும், பின்னர் அந்தஅதிகஆபத்து நிறைந்தபகுதிகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். இந்தஇடத்தில், உண்மையிலேயே தனிநபர்களைக்கணக்கில்எடுத்துக்கொள்ளவேண்டும்.

முதியவர்களுக்கானவிடுதிகள்அல்லது மருத்துவமனைகளைப்பற்றி நாம்அதிகம் பேசுகிறோம். நோய்பரவல்உள்ளஎந்தவொரு பகுதியிலும், எந்தவொரு காரணத்திற்காகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் பரிசோதிக்கப்பட வேண்டும் என்றேநான்கருதுகிறேன். பெரும்பாலும் மாரடைப்புஅல்லதுகால் உடைந்த நிலையில் வருகின்றஅறிகுறியற்ற நபரை நீங்கள் தவறவிட்டுவிடுவீர்கள். ஆனால் அறிகுறியற்றுஇருக்கின்றஅவர்கள்நோயைப்பரப்புகின்றனர். அவர்களால்30 சுகாதார ஊழியர்கள், 70 நோயாளிகளுக்குஇந்தநோயைப் பரப்பமுடியும்என்பதால், அது ஒரு பேரழிவாகவே இருக்கும். வயதானவர்களுக்கானவிடுதிகளில், அதிக ஆபத்து உள்ள பகுதிகளில் தீவிரபரிசோதனை உத்தி தேவைப்படும். பின்னர் முடியுமென்றால், அதிக அளவில்சமூக அளவிலான கண்காணிப்பைச் செய்யலாம். கண்டறியப்படாத நோயாளிகளைஇதுவரையிலும்காணவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்குஇதைச்செய்யலாம். இது உண்மையில் எல்லாவற்றின் கலவையாகும். மேலும் இதுஎந்தஅளவிற்குபரிசோதனைத் திறன் உள்ளது என்பதைப் பொறுத்தது.

Confident That COVID 19 Vaccine Will Be Available By Next Year ...

ராகுல் காந்தி: இந்தியர்களிடம்ஒரு தனித்துவமான அம்சம் உள்ளது. அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் அது இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது, நம்மிடம் நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ள பெரிய  எண்ணிக்கையிலான இளைஞர்கள் இருக்கின்றனர். மாசுபட்ட பகுதிகளில் பணிபுரியும் ஏழை மக்கள்நம்மிடையேஉள்ளனர். அவர்களுக்கு நுரையீரல் நோய் உள்ளது. எனவே பாதிக்கப்படக்கூடிய இளைஞர்கள் தொகுதி நம்மிடையே இருக்கிறது.

ஆஷிஷ் ஜா: மிகவும் நோய்வாய்ப்பட  அல்லது இறந்துபோவது போன்ற மோசமான விளைவை ஏற்படுத்துவதற்கான மிகப்பெரிய ஆபத்து காரணியாக வயது இருப்பதை நாம் அறிவோம். மேற்கு ஐரோப்பா, அமெரிக்கா அல்லது கிழக்கு ஆசியாவோடு ஒப்பிடும்போது இந்தியாவிற்கென்று சாதகமான அம்சம்இருக்கிறது. அதாவது இந்தியாவில் இளைய வயதுடைய மக்கள் தொகை அதிகமாக உள்ளது.

இந்த நோயால்ஆரோக்கியமான இளைஞர்கள் கூட, அவர்களில் சில சதவிகிதத்தினர் மிகவும் நோய்வாய்ப்படுகிறார்கள் என்பதை அதிக அளவில் கண்டுபிடித்து வருகிறோம். எனவே ஆரோக்கியமான இளைஞர்களைப் போலத் தோற்றமளிப்பவர்களிடம் நாம் கவலையற்று இருக்கக் கூடாது. நீங்கள் சொன்னது போல, நுரையீரல் நோய், இதய நோய், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களின் பிரச்சனையைஎடுத்துக்கொண்டால், அவர்கள்உண்மையில் அதிக ஆபத்திலேயே உள்ளனர். ஆனால் 75 வயதுள்ளவர்களைக் காட்டிலும் அதிகமான ஆபத்து அவர்களுக்கு இருக்கவில்லை. ஆனாலும் அவர்களில் பலர் மிகவும் நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறார்கள். அவர்கள் அனைவரையும் நாம் உண்மையில் பாதுகாக்க வேண்டும். அது உண்மையில் அதிக எண்ணிக்கையிலேயே சென்று முடிகிறது.

இதனால் தான் இந்தியா போன்ற இடங்களில் கூட்டுநோய் எதிர்ப்பு சக்திஏற்பட அனுமதிக்கலாம்; அதற்காக நூற்றுக்கணக்கான, லட்சக்கணக்கான மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படட்டும் என்று சிலர் கூறுகிறார்கள். அது ஒரு பயங்கரமான யோசனை என்றே நான் நினைக்கிறேன். அது பயங்கரமான யோசனையாக இருப்பதற்கான காரணம் என்னவென்றால், இந்த நோயுடன் இருக்கின்ற ஏராளமான இளைஞர்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும். அனைவரையும், குறிப்பாக வயதானவர்களையும், நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களையும் பாதுகாக்கின்ற உத்தியையே நாம் மேற்கொள்ள வேண்டும்.

ராகுல் காந்தி: ஆக, இந்த வாதங்களில் சிலவற்றை நீங்கள் ஏற்கவில்லை. வைரஸ் வெப்பமான சூழலில்உயிர்வாழாது; இந்தியர்கள் வைரஸிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள்; நம்மிடம் ஏற்கனவே உள்ள சில தடுப்பூசிகள் வைரஸிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும் என்பது போன்ற கருத்துக்களை நான் மிகவும் சந்தேகத்திற்குரியவையாகவே பார்க்கிறேன். இவ்வாறு கூறுவதைப் பற்றி எனக்கு சந்தேகம் இருக்கிறது. அது குறித்து உங்கள் பார்வை என்ன?

ஆஷிஷ் ஜா: அவற்றைப்பற்றி தனித்தனியாகப் பேசலாம்.

இந்தியர்கள் மற்றும் தடுப்பூசிகள் பிரச்சினையில்- நான் குழந்தையாக இருந்தபோது எனக்கு பி.சி.ஜி தடுப்பூசி போடப்பட்டது. மற்றும் பல இந்தியர்களுக்கும் அது போடப்படுகிறது. இந்தநோயின் தீவிரத்தைக் குறைக்க பி.சி.ஜி தடுப்பூசி உதவக்கூடும் என்பதற்கு சில சூழ்நிலைச் சான்றுகள் உள்ளன. ஆனால் என்னிடம் அதற்கான சரியான சான்று எதுவுமில்லை. ஆனாலும் நிச்சயமாக இந்தக்கருத்தின் அடிப்படையில் நான் இதற்கான கொள்கையை உருவாக்க மாட்டேன்.

இது ஒரு புதிய வைரஸ், புதிய சோதனைகள்நடக்கின்றன. புதிய ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அடுத்த இரண்டு மாதங்களில், நாம் இன்னும் பலவற்றை அறிந்து கொள்ளமுடியும். இப்போது சில சமவாய்ப்பு அடிப்படையிலான சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அடுத்த மூன்று மாதங்களில், இந்த தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கப்போகின்றனவா என்பது குறித்து நாம் அதிகம் அறிந்துகொள்ள முடியும் என்றே நினைக்கிறேன். பி.சி.ஜி தடுப்பூசி முக்கியமான இடையீட்டாளராக இருக்கும் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். எனக்குத் தெரியாது, ஆனால் விரைவில் நமக்குத் தெரிந்துவிடும். ஆனால் கொள்கை வகுக்க போதுமான ஆதாரங்கள் நிச்சயமாக இல்லை.

வெப்பமான வானிலை மற்றும் வெப்பநிலை பிரச்சனையில், வானிலை ஒரு தாக்கத்தைஏற்படுத்துகிறது என்பதற்கு மீண்டும் சில சான்றுகள் உள்ளன. உள்ளே இருப்பதை விட வெளியில் இருப்பதால், குறைவான பரிமாற்றம் இருக்கும்என்று நினைக்கிறோம். எனவே 15 நபர்களுடன் கூடிய வீட்டில், அனைவரும் ஒரேசிறிய அறையில் தங்கியிருப்பது மிகவும் எளிதான பரிமாற்றத்திற்கே வழிவகுக்கும். ஆனால் மக்கள் வெளியில் வந்துவிடும் போது, ​​காற்று மற்றும் அதெல்லாம் இருக்கிறது, அது கொஞ்சம் சிறப்பானதாக இருக்கும்.

ஆனால் வெப்பநிலை குறித்தசிக்கலைக் கொண்டுவரும் நபர்களிடம் நான் கேட்கும் கேள்வி என்னவென்றால், இது வைரஸைக் கட்டுக்குள் வைத்திருக்கப் போதுமானது என்று நினைக்கலாமா என்பது தான். எனக்குத் தெரிந்த யாருமே, இது போதுமானது என்று நினைக்கவில்லை. சராசரி நபர் அதை மூன்று பேருக்கு கடத்தினால், ஒரு வேளை அது 2.5 ஆக வேண்டுமானால் இருக்கலாம். 20% நன்மை கிடைக்கிறது. நல்லது அதைநான் எடுத்துக்கொள்கிறேன். ஆனாலும் இந்த நோயிலிருந்து நம்மை முழுமையாக வெளியேற்றுவதற்கு அது போதாது.

Congress, BJP spar over government's Covid strategy - india news ...

ராகுல் காந்தி: நீங்கள் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றைச் சொன்னீர்கள். அது இந்தியாவுக்கு மிகவும் பொருத்தமானது. ஆக, கூட்டு குடும்ப அமைப்பு, அதற்குள் வயதானவர்கள் வசிப்பது சிக்கலானது மற்றும் ஆபத்தானதுஎன்று நீங்கள் சொல்கிறீர்கள்.

ஆஷிஷ் ஜா:ஆமாம். நியூயார்க் போன்ற இடங்களில்இதுபோன்றுநடந்திருப்பதைநாங்கள் பார்த்திருக்கிறோம், அங்கேநோய்வாய்ப்பட்டு இறந்துபோன ஏராளமானவர்கள், வெளியே சென்று வேலை செய்யாதிருக்கின்றவயதானவர்கள். ஆனால் அடிப்படையில் நாம் நினைப்பது என்னவென்றால், அவர்களுடன்வாழ்ந்துவருகின்றஇளைஞர்கள் வெளியே சென்று வேலை செய்து, பின்னர்வீட்டிற்கு வருகிறார்கள். அதற்குப்பிறகு, குடும்பங்களுக்குள் நோய் பரவுகிறது என்றெ நினைக்கிறோம். எனவே அவ்வாறுநடக்கும் போது, அதுஒரு மிகப்பெரிய சவாலாகும். இந்தியாவைப்பொறுத்தவரை, மூன்று தலைமுறைகள் ஒன்றாக வாழ்வது என்பது இதுபோன்றுநடப்பதற்கானபொதுவான வழியாக இருக்கிறது. எனவே வயதானவர்களை நீங்கள் எவ்வாறு பாதுகாக்கிறீர்கள் என்பதேஉண்மையான சவாலாகஇருக்கும் – குறிப்பாக பொதுமுடக்கம்முடிந்துமக்கள் வேலைக்குச் செல்லும்போது.

பரிசோதனைகளைச் செய்தால் பிரச்சனைகள் தீர்க்கப்படும். அது நிறைய உதவும். சரியாக பரிசோதனகளைச் செய்ய முடிந்தால், அனைவரையும் உங்களால் பரிசோதிக்க முடியும், அதற்குப்பின்னர் நீங்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பீர்கள். மக்கள்தொகை எவ்வளவு பெரியது என்பதைப் பொறுத்தே, அனைவரையும் பரிசோதிப்பதுஇருக்கிறது. பரிசோதனைகளைஅதிகரிக்க பயன்படுத்தக்கூடிய உத்திகள் இருக்கின்றன… குழு பரிசோதனை முறை இருக்கிறது. வரையறுக்கப்பட்ட கருவிகளைக் கொண்டு, மிகப்பெரிய எண்ணிக்கையிலான மக்களைப் பரிசோதிப்பதற்கான அனைத்து வகையான விஷயங்களும் உள்ளன. இந்தியாவிற்கென்று பல சாதகமான அம்சங்கள் உள்ளன என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன். அவற்றில் ஒன்று மிகவும் மேம்பட்ட, மிகவும் துடிப்பான தொழில்நுட்பம். உயிரி தொழில்நுட்பம் ஏராளமான திறன் கொண்டது.

பரிசோதனை மற்றும் இந்தியாவின் பரிசோதனைத் திறனைஅதிகரிக்கும்போது,…இந்தியாவில் எந்த நிறுவனம் என்ன செய்ய முடியும் என்பதற்கான சரியான விவரக்குறிப்புகளில் நான் ஒரு நிபுணர் அல்ல. இந்தியாவைப் பற்றி எனக்குத் தெரிந்த அனைத்தும், பரிசோதனையைப் பற்றி எனக்குத் தெரிந்த அனைத்தும், அதுகுறித்துஎனக்குகொஞ்சம்மட்டுமேதெரியும்என்பதால், இப்போது செய்வதைவிடஅதிக பரிசோதனைகளை இந்தியாவால் செய்ய முடியாது என்று நான் நம்பவில்லை. அது ஏன் முடியவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. பரிசோதனையின்அளவுஇப்போதுமுன்னேறி வருகிறது. இப்போது ஒரு நாளைக்கு 80,000 – 100,000 பரிசோதனைகளைச் செய்து வருகின்றனர். அது நல்லது. ஏற்கனவே இருந்த இடத்திலிருந்து இது உண்மையான முன்னேற்றம் ஆகும். இன்னும் அதிகரிப்பதைத்தடுப்பது என்னவென்று எனக்குத் தெரியாது. அந்த அளவிலான திறனை நம்மால் பெற முடிந்திருந்தால், ஆம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளியேறுவதற்கு முன்பாக, நாம் அவர்களைப் பரிசோதித்திருக்க முடியும்.

ராகுல் காந்தி: பரிசோதனை எண்ணிக்கை ஏன் குறைவாக இருக்கிறது என்று சில அதிகாரிகளிடம் நான் கேட்டேன். அவர்களின் கருத்து என்னவென்றால், பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்தால், மக்களை மிகவும் பயமுறுத்துவதாகிவிடும். இன்னும் அதிகமாகப் பயமுறுத்துகின்ற கதைகளை உருவாக்குவதாகிவிடும். அதிகாரப்பூர்வமற்ற முறையில் இதைத்தான் அவர்கள் சொல்கிறார்கள். நோயை எதிர்த்துப் போராடுவது மிகவும் முக்கியமானது என்றே நான் நினைக்கிறேன், பரிசோதனைகளை முடிந்தவரை அதிகமாக்க வேண்டும்.

ஆஷிஷ் ஜா: சமூகத்தை இந்த வைரஸ் எவ்வாறு மாற்றப் போகின்றது என்பது நான் அதிகம் யோசித்து வரும் கேள்விகளில் ஒன்று. இப்போதிலிருந்து இரண்டு ஆண்டுகள் கழித்து, இந்தியாவில் சமூக விதிமுறைகள் மற்றும் தொடர்புகள்எப்படி இருக்கும்? வாழ்க்கை எவ்வாறு வித்தியாசமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நான் இதைப் பற்றி நிறைய யோசித்து வருகிறேன்.எனக்கு அதில் மிகுந்த ஆர்வம் இருக்கிறது.

ராகுல் காந்தி: எனவே இந்த நோய்க்கு ஒரெயொரு எதிர்வினை மட்டும் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்த நோய்க்கான சொந்த எதிர்வினை இருக்கும். சில மாநிலங்கள் அவற்றின் இயல்பு, வடிவமைப்பு, அரசியல் அமைப்பு ஆகியவற்றால் மற்ற மாநிலங்களை விட சிறப்பாகச் செயல்படுவதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அதிகாரம்பரவலாக்கப்பட்ட மாநிலங்கள், மக்களுக்கு அதிக அதிகாரத்தைஅளித்துள்ளமாநிலங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்ற உணர்வு என்னிடம் இருக்கிறது. அது என்னுடைய உணர்வு. பெரிய நகர மையங்கள் மிகமோசமாகப் பாதிக்கப்படுகின்றன என்று நான் நினைக்கிறேன். இந்த நோய் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, வெவ்வேறு மதங்கள், வெவ்வேறு சமூகங்கள், வெவ்வேறு சாதிகள், வெவ்வேறு பாலினங்கள் என்று இந்த நோயை எதிர்த்துப் போராட முடியாது என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வழிவகுக்கும் என்று நம்புகிறேன். சில வழிகளில் இங்கே ஒரு சாத்தியமான வாய்ப்பு இருப்பதாகவே நான் நினைக்கிறேன். இந்த நோயை எதிர்த்துப் போராடுவதில் நம்மால்ஓர்உரையாடலைத் தொடங்க முடிகிறது, இந்த நோயை எதிர்த்துப் போராடுவதற்கு அனைவரும் தேவை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது, இதிலிருந்து வெளியேற நாம் ஒன்றிணைந்து செயல்பட முடிகிறது. அதற்கான திறன் நம்மிடம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். குறிப்பிடத்தக்க வலியை ஏற்றுக்கொள்ளவும் நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும் வயதானவர்களைப் பற்றிநான் கவலைப்படுகிறேன், இந்த நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு மிக முக்கியமானவர்களாக இருக்கின்ற இளைஞர்களைப் பற்றியும் நான் கவலைப்படுகிறேன்.

உலக அளவில், வைரஸ் இரண்டு நிலைகளில் இயங்குகிறது என்று நினைக்கிறேன். ஒன்று அது சுகாதார மட்டத்தில் இயங்குகிறது, இரண்டு உலகமயமாக்கப்பட்ட கட்டமைப்பை அது தாக்குகிறது. பாதிக்கப்படக்கூடிய இடங்களைப் பார்த்தால், அவையனைத்தும் உலகமயமாக்கலின் நரம்பு மையங்கள். மேலும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பார்த்தால், அவர்கள் அனைவரும் உணவுச் சங்கிலியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதய நோய், குறிப்பிட்ட வகை உணவுகள், குறிப்பிட்ட வகையான நடத்தை, அனைத்தும் உலகமயமாக்கலில் இருந்து வந்திருக்கிறது வைரஸ் அவற்றைத்தாக்கியுள்ளது. இந்த வைரஸுக்குப் பிறகு ஒரு புதிய உலகம்பிறக்கும் என்று நான் நம்புகிறேன். எடுத்துக்காட்டாக, ஐரோப்பாவை அது மறுவடிவமைக்கப் போகிறது என்று நினைக்கிறேன். நான் சொல்வதை பலர் விரும்பவில்லைஎன்றாலும், ஐரோப்பா ஒன்றாக இருப்பது உண்மையில் சிரமமாகவே இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான அதிகாரச் சமநிலை மாறும் என்றும் நான் நினைக்கிறேன். நாம் நுழைகிறோம் என்று நினைக்கிறேன் … 9/11 ஒரு புதிய அத்தியாயமாக இருந்தது என்று மக்கள் கூறுகிறார்கள். இது ஒரு புதிய புத்தகமாக இருக்கிறது.

Confident that COVID-19 vaccine will be available by next year ...

ஆஷிஷ் ஜா: ஆம், அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எப்படியிருந்தாலும் வாழ்க்கை இப்போதிலிருந்து ஐந்து ஆண்டுகள், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்ததைப் போல எதுவும் இருக்காது. இதைக்கணிப்பது கடினமாக இருந்தாலும், அது தெளிவாகவேஇருக்கிறது. அதாவதுஐந்து ஆண்டுகளில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதில் நமக்குநிறைய பங்கு உள்ளது. முன்னேறிய பொருளாதாரம் யார், யாரிடம் இல்லை என்று நாம் பாரம்பரியமாக கூறி வந்ததற்கான மாதிரிகள் நிச்சயமாக நம்மிடம் ஏராளமாக இருக்கின்றன. இப்போது, அமெரிக்காவில் இருந்து கொண்டு தென்கொரியா, தைவான், ஹாங்காங் போன்ற நாடுகள் நன்றாக எதிர் வினையாற்றியுள்ளன; இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகியவை மோசமாக எதிர் வினையாற்றியுள்ளன என்று சொல்வது என்னைப் பொறுத்தவரை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஏற்பட்டிருக்கும் புதிய உலக ஒழுங்கை வரவேற்போம். நாம் விஷயங்களை ஒரு போதும் இது போன்று கற்பனை செய்திருந்தில்லை. இது நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும், ஆனால் அவை என்னவென்று எனக்குத் தெரியாது.

ராகுல் காந்தி:இப்போது சொல்லுங்கள். (ஹிந்தியில் உரையாடுகிறார்கள்) தடுப்பூசி எப்போது வரும்? வருமா அல்லது வராதா?

ஆஷிஷ் ஜா: இரண்டு, மூன்று தடுப்பூசிகள் இது வரையிலும் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஒன்றுஅமெரிக்கதடுப்பூசி, ஒருசீன தடுப்பூசி, ஆக்ஸ்போர்டிலிருந்து மற்றொரு தடுப்பூசி என்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் எது வேலை செய்யும் என்று எனக்குத் தெரியாது. ஒருவேளை அவையனைத்துமே வேலை செய்யலாம். ஒன்று வேலை செய்யாமல் போகலாம். அதுகுறித்து எனக்குத் தெரியாது. ஆனாலும் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன், அடுத்த ஆண்டு அவை வேலைசெய்யலாம். இந்தியாவிற்கு ஒரு திட்டம் இருக்க வேண்டும். ஏனென்றால் இந்தியாவிற்கு, உங்களுக்குத் தெரியும், 50 கோடி – 60 கோடி தடுப்பூசிகள் தேவைப்படும். (ஹிந்திஉரையாடல்முடிவடைகிறது). எனவே, தடுப்பூசிகிடைக்கஆரம்பித்தவுடன், இந்த அளவிற்கான தடுப்பூசி உங்களுக்கு எப்படி கிடைக்கும் என்பது குறித்து இந்தியாவிடம் ஒரு திட்டம் இருக்க வேண்டும்.. எனவே இது அதிக கவனம் செலுத்த வேண்டிய பகுதியாகும்.

ராகுல்,மற்றொருவிஷயம்மிகவும் முக்கியமானது என்று நான் சொல்வேன். நாம் தொற்றுநோய்களின் காலத்திற்குள்நுழைகிறோம். இதுவே இறுதியான பெரிய உலகளாவிய தொற்றுநோயாக இருக்காது என்றும் நான் நம்புகிறேன். அடுத்த 20 ஆண்டுகளில் நீங்களும், நானும்அதைப் பார்க்கப்போகிறோம்.

ராகுல் காந்தி: ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? நாம் தொற்றுநோய்களின் காலத்திற்குள் நுழைகிறோம் என்று ஏன் சொல்கிறீர்கள்? அதற்கான கட்டமைப்பு காரணம் என்ன?

ஆஷிஷ் ஜா: ஆமாம், நடந்திருக்கும்பல விஷயங்கள், இவ்வாறுசொல்லவைக்கின்றன. உங்களுக்குத் தெரியும், 2009 எச்1என் 1 பன்றிக் காய்ச்சல், அதிர்ஷ்டவசமாக மிகவும் மோசமாக இல்லை என்ற அளவில்முடிந்தது, அது உலகளாவிய தொற்றுநோய் என்று நினைத்தோம். 20 வருடங்களுக்கு முன்பு இருந்தைவிட, இப்போதுஎன்ன மாற்றம்இருக்கிறது? இவற்றில் பலவற்றை நீங்கள் உண்மையில் தொட்டுப்பேசியுள்ளீர்கள். உலகமயமாக்கல், இல்லையா? எனவே எங்கோ ஓரிடத்தில் தொடங்குகின்ற ஒரு வைரஸ், மிக விரைவாக உலகளவில் பரவுகிறது. இரண்டாவது பெரிய அளவிலான சுற்றுச்சூழல் மாற்றங்கள். சீனாவிலும், இந்தியாவிலும் மற்றும் பல இடங்களிலும் நீங்கள் காணுகின்றஇந்த பொருளாதார வளர்ச்சிகள் அனைத்தும், மக்களை வறுமையிலிருந்து உயர்த்துவதில் அருமையாக இருந்திருக்கின்றன. ஆனாலும்காடுகளைஆக்கிரமித்து, காடுகளைஅழிப்பது, அதிக விலங்குகள், பெரும்பாலான தொற்றுநோய்கள் உள்ள பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைவதும் நடந்துள்ளது. பெரும்பாலான தொற்றுநோய்கள், மனிதர்களுக்கு வருகின்றபெரும்பாலான நோய்கள், புதியவையாக விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு தாவியிருக்கின்றன, இல்லையா? வெளவால்களில் இருந்தஇந்த வைரஸின் மரபணுவில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டு, திடீரென்று அது மனித ஆதார உயிரிகளுக்குஏற்றதாக மாறியது. இவற்றில் பலவற்றை,பருவநிலை மாற்றம் இன்னும் மோசமாக்கும் என்றேநான் நினைக்கிறேன். பின்னர் பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்து நிகழ்ந்திருக்கும் மற்ற விஷயங்கள் என்னவென்றால், மக்கள் அதிக இறைச்சியை சாப்பிடுகிறார்கள், இதனால் விலங்குகள் மற்றும் மனிதர்களிடையே அதிக தொடர்புகள்ஏற்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் ஒன்றாக வைத்துப் பார்க்க வேண்டும்.

கடந்த 100 ஆண்டுகளைப் பார்த்தால், இந்த வகையான நோய்பரவலின்எண்ணிக்கைஅதிகரித்திருப்பதை உங்களால்காணமுடியும். நிச்சயமாக இந்த100 ஆண்டுகளில் இந்த நோய்மிகவும் மோசமானது, ஆனாலும் வரவிருக்கும் ஆண்டுகளில், நாம் இன்னும் ஏராளமானஉலகளாவிய தொற்றுநோய்களைக் காணப்போகிறோம் என்றே நான் நம்புகிறேன். எனவே, இதைக் கடந்து செல்லும்போது, அடுத்துவரப் போகின்ற நோயை எதிர்கொள்வதற்கு, எவ்வாறு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளப்போகிறோம் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

ராகுல் காந்தி: சரி மிக்க நன்றி.

ஆஷிஷ் ஜா: இந்த உரையாடல் மகிழ்ச்சியாக இருந்தது. பாதுகாப்பாக இருங்கள்.

இதற்கு அடுத்து ராகுல்காந்தி பேராசிரியர் ஜோஹன் சீசிக்கேக்குடன்உரையாடினார்.

நேசனல் ஹெரால்டு பத்திரிக்கை

2020 மே 27

https://www.nationalheraldindia.com/india/watch-rahul-gandhi-in-conversation-with-experts-in-healthcare-social-sciences

எழுத்தாக்கம்

தா.சந்திரகுரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *