பேராசிரியர் ஜோஹன் சீசிக்கே உடன் ராகுல் காந்தி நடத்திய உரையாடல்  (தமிழில் தா.சந்திரகுரு)

 

உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள பொது சுகாதார நிபுணரான ஆஷிஷ் ஜா மற்றும் பிரபல ஸ்வீடன்  தொற்றுநோயியல் நிபுணரான ஜோஹன் சீசிக்கே ஆகியோருடன் ராகுல் காந்தி 2020 மே 27 புதன்கிழமையன்று உரையாடினார். இதற்கு முன்பாக உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரான ரகுராம் ராஜன் மற்றும் நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி ஆகியோருடன் ராகுல் காந்தி உரையாடி இருக்கிறார்.

ஜோஹன் சீசிக்கே

ஸ்வீடன் மருத்துவர் மற்றும் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தில் கௌரவப் பேராசிரியர்.

https://www.youtube.com/watch?v=saFTjRUG3SQ

உரையாடலின் முழுமையான எழுத்தாக்கம்

ராகுல் காந்தி: பிற்பகல் வணக்கம் பேராசிரியர் ஜோஹன் சீசிக்கே

ஜோஹன் சீசிக்கே: பிற்பகல் வணக்கம்

ராகுல் காந்தி: என்னுடன் பேச ஒப்புக்கொண்டதற்கு மிக்க நன்றி. நீங்கள் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதை நான் அறிவேன்

ஜோஹன் சீசிக்கே: எந்தப் பிரச்சனையும் இல்லை. எனக்கு நேரம் இருக்கிறது.

ராகுல் காந்தி: உங்களுடைய நேர்காணல் ஒன்றை நான் பார்த்தேன், அங்கு நீங்கள் சில வித்தியாசமான யோசனைகளைப் பரிந்துரைத்திருந்தீர்கள். அது என்னுடைய ஆர்வத்தைத் தூண்டியது. நீங்கள் ஒரு தொற்று நோய் நிபுணராக இருந்து வருகிறீர்கள். ஸ்வீடன் மற்றும் ஐரோப்பாவிலிருந்து இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

ஜோஹன் சீசிக்கே: இது காட்டுத்தீ போன்று உலகம் முழுவதும் பரவி வருகின்ற நோயாகும், உலகில் கிட்டத்தட்ட அனைவருக்கும் இந்த தொற்று ஏற்படும். ஆனால் இது மிகவும் கடுமையான நோய் அல்ல. பாதிக்கப்பட்டவர்களில் 99% பேருக்கு மிகக் குறைவான அறிகுறிகள் இருக்கும் அல்லது அறிகுறிகள் எதுவுமே இருக்காது. எனவே இப்போது நாம் பார்த்துக் கொண்டிருப்பது இந்த தொற்றுநோயின் 1% மட்டுமே ஆகும். உண்மையான பெருந்தொற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நாம் அதை உண்மையில் அறிந்திருக்கவில்லை.

We are entering the age of pandemics, expert tells Rahul

ராகுல் காந்தி: ஆனால் நோய் குறித்த பார்வை அவ்வாறு இருக்கவில்லை.. இந்தியாவில் கூட அந்த நோய் பற்றிய பார்வை, அது மிகவும் ஆபத்தான நோய் என்பதாகவே இருக்கிறது. பார்வையில் இந்த முரண்பாடு ஏன் வருகிறது? இந்த முரண்பாட்டை உருவாக்கியது எது?

ஜோஹன் சீசிக்கே: ஏனென்றால் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், ஏராளமானோர் இறந்து கொண்டிருக்கிறார்கள்… அது விரைவாக நடக்கிறது. ஆனால் இறுதியில் மிகச் சிறுபான்மையினரே (வயதான அல்லது அனைத்தும்) நோயின் அறிகுறிகளைக் கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்.  பெரும்பாலான மக்கள் முற்றிலும் எந்த அறிகுறியில்லாமல்தான் இருப்பார்கள்.

ராகுல் காந்தி: இந்திய கண்ணோட்டத்தில் இந்த உத்தியை எவ்வாறு பார்ப்பீர்கள்? மிகப்பெரிய நாடு, நூறு கோடிக்கும் அதிகமான மக்கள், பெரிய அளவிலான புலம்பெயர்வு, குறிப்பாக நீரிழிவு நோய், இதய நோய், நுரையீரல் நோய் கொண்டிருக்கும் மக்கள். இந்திய நிலைப்பாட்டிலிருந்து இந்த நோயைப் பற்றி நீங்கள் என்ன  நினைக்கிறீர்கள்?

இப்போது நாங்கள் பொதுமுடக்கத்தில் இருக்கிறோம், நீங்கள் எவ்வாறு இந்த பொதுமுடக்கத்திலிருந்து  வெளியேறினீர்கள்? பொதுமுடக்கத்திலிருந்து வெளியே வர சிறந்த உத்தி எது? ஏனென்றால் இப்போது பொதுமுடக்கம் என்ற உளவியல் யதார்த்தம் உண்மை என்று இருக்கிறது. நீங்கள் அதை விட்டு எப்படி வெளியே வந்தீர்கள்? அதிலிருந்து வெளிவருவதற்கான, சுகாதாரப் பார்வையில் எளிதான, புத்திசாலித்தனமான வழி என்ன?

ஜோஹன் சீசிக்கே: இது ஒரு நல்ல கேள்வி. ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பு பொதுமுடக்கத்தை அமல்படுத்திய ஐரோப்பாவின் அனைத்து நாடுகளும், அந்த நேரத்தில் அதிலிருந்து வெளியேறுகின்ற உத்தி பற்றி நினைத்தார்களா? இந்த பொதுமுடக்கத்தை நாம் அமல்படுத்துவோம், இந்த பள்ளியை மூடுவோம், இந்த எல்லையை மூடுவோம், உணவகங்களை மூடுவோம் என்று எந்த ஒரு நாடும் சொன்னதாக நான் நினைக்கவில்லை. அதிலிருந்து எப்படி வெளியேறுவது என்று அவர்கள் நினைத்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் இப்போது அனைவரும் இதிலிருந்து நாம் எப்படி வெளியேறுவோம் என்று ஒரே கேள்வியைக் கேட்கிறார்கள்.

இது படிப்படியாக நடக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். இந்தியாவில் அனைத்து கட்டுப்பாடுகளையும் விதிக்கிறீர்கள். பின்னர் ஒன்றை முற்றிலுமாக எடுத்து விடுகிறீர்கள். மற்றொரு கட்டுப்பாட்டை தளர்வு செய்கிறீர்கள். 2-3 வாரங்கள் காத்திருந்து என்ன நடக்கிறது, நம்மிடையே நோய் பரவுகிறதா என்று பார்க்கிறோம். ஆம், அதிகமாக நோய் பரவி இருக்கிறது என்றால், சரி, இப்போது ஒரு படி பின்வாங்கி, மற்றொரு தடையை ஏற்படுத்துகிறோம். எனவே பொதுமுடக்கத்திலிருந்து வெளியே வர மாதங்கள் ஆகும் என்று நினைக்கிறேன். இதற்குப் பதிலாக, ஒரு நேரத்தில் ஒரு கட்டுப்பாட்டை மட்டும் செய்ய வேண்டும், அதற்குப் பின் என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும்.

India will ruin its economy very quickly if it had severe lockdown ...

ராகுல் காந்தி: இவை அனைத்திலும் பரிசோதனையின் பங்கு என்னவாக இருக்கிறது? பரிசோதனையைப் பயன்படுத்துவது குறித்து ஒருவர் எவ்வாறு சிந்திக்க வேண்டும்?

ஜோஹன் சீசிக்கே: ஒன்று மருத்துவரீதியாக. மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை அறிய விரும்புகின்ற நீங்கள் நாடு முழுவதும் இன்னும் கொஞ்சம் அந்த தொற்றுநோயைப் பின்பற்றிச் சென்று படிக்கலாம். குறிப்பிட்ட புவியியல் அல்லது குறிப்பிட்ட நபர்கள் யாராவது நோயுடன் இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். இது குறித்து கொஞ்சம் திட்டமிடலாம்.

நீங்கள் அறிந்திருக்கும் புதிய சோதனைகள் எங்களிடம் இருந்தன. எங்களிடம் பழைய சோதனை – பி.சி.ஆர் பரிசோதனையும் இருந்தது. அந்த பரிசோதனை நீங்கள் இப்போது பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதைக் காட்டுகிறது, அதாவது உங்களுக்கு இப்போது நோய் இருக்கிறது என்று காட்டுகிறது.

உங்களுக்கு நோய் ஏற்கனவே இருந்ததா என்பதைக் காட்டுகின்ற புதிய ஊனீரியல் (சீராலஜி) சோதனை உள்ளது. யாருக்கு நோய் ஏற்கனவே இருந்தது, இப்போது யார் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர் என்பதைப் பார்ப்பதற்கு அது பயனுள்ளதாக இருக்கும்.

ராகுல் காந்தி: பொருளாதார பாதிப்பிற்கும், சுகாதார சேதத்திற்கும் இடையில் உண்மையான தாக்கமும், சமநிலையும் உள்ளது. இந்த இரண்டு அம்சங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஜோஹன் சீசிக்கே: அதில் இருப்பது ஒரு கடினமான சமநிலை. ஸ்வீடனில் நாங்கள் அதைச் செய்த விதம் எப்படியென்றால், வயதானவர்களையும், பலவீனமானவர்களையும் பாதுகாப்பதையே முக்கிய விஷயமாக எடுத்துக் கொண்டோம். நோயிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நினைத்தோம். . மற்ற அனைத்தும் இரண்டாவதாகவே வந்தன.

எனவே நாங்கள் செய்திருப்பது என்னவென்றால், நாங்கள் நாட்டை முழுவதுமாக மூடிவிடவில்லை. பல பணியிடங்கள் இன்னும் திறந்திருக்கின்றன. பலர் தங்களால் முடிந்தால் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள். எங்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் இருக்கவில்லை. நீங்கள் வெளியே சென்று, அங்கே மற்றவர்களைச் சந்திக்கலாம். அது உங்கள் வீட்டிற்குள் இருப்பதை விட மேலானது. ஆனால் சில சமயங்களில், இந்தியாவைப் பற்றி எனக்குத் தெரியாது. பல ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் உள்ள தொற்று நோய் மையத்திற்கு ஒரு முறை சென்றிருக்கிறேன். கடுமையான பொதுமுடக்கத்தின் மூலம். நல்லதை ஏற்படுத்துவதைவிட விரைவில் தீங்கையே விளைவிப்பீர்கள் என்றே நான் கருதுகிறேன்.

ராகுல் காந்தி: அது பொருளாதார கண்ணோட்டத்தில்?

ஜோஹன் சீசிக்கே: பொருளாதார மற்றும் மனிதாபிமான பார்வையில்

ராகுல் காந்தி: பொருளாதார பக்கத்துக்கும், சுகாதார பக்கத்துக்கும் இடையே நிச்சயமாக ஒரு தொடர்பு உள்ளது, ஏனெனில் இந்த பொதுமுடக்கத்தைச் செய்யும்போது, கோவிட் வார்டுகளில் மருத்துவமனைகளையும் நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இந்தியாவில் மருத்துவமனைகளில் உள்ள சிறிய இடத்தை கோவிட்டுக்காகப் பராமரிக்கப் போவதாக முடிவு செய்திருக்கின்றனர். அதனால் பிற நோய்களால் பாதிக்கப்பட்ட ஏராளமான நோயாளிகள், அந்த மருத்துவமனைகளை அணுக முடியாது

COVID-19: Rahul to interact with renowned health professionals ...

ஜோஹன் சீசிக்கே: இந்தியாவைப் பொறுத்தவரை நீங்கள் மிகவும் தீவிரமான பொதுமுடக்கத்தால், உங்கள் பொருளாதாரத்தை மிக விரைவாக அழித்துவிடுவீர்கள் என்றே நினைக்கிறேன். இவ்வாறு செய்வது நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதாவது பொதுமுடக்கத்தைத் தவிர்த்து விட்டு, வயதானவர்களையும், பலவீனமானவர்களையும் நன்கு கவனித்துக் கொள்ளுங்கள், மற்றவர்களுக்கு தொற்று ஏற்படட்டும். பெரும்பாலான மக்கள் நோய்வாய்ப்பட மாட்டார்கள். தங்களுக்கு நோய் வந்திருப்பதைக்கூட அவர்கள் கவனிக்க மாட்டார்கள்.

நோய்க்கும் பொருளாதாரத்திற்கும் இடையில் இருக்கும் சமநிலையைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

ராகுல் காந்தி: சரி, எங்களுக்கு ஒரு முழுமையான பொதுமுடக்கம் கிடைத்திருக்கிறது. ஒட்டுமொத்த பொதுமுடக்கம் குறித்து எனக்கு சந்தேகம் இருக்கிறது. பகுதியளவிலான  பொதுமுடக்கத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். முழு பொதுமுடக்கம் சேதம் விளைவிக்கும் என்றே நான் கருதுகிறேன். அந்த சேதம் அதிவேகமாக அதிகரிக்கிறது. பொதுமுடக்கத்திலிருந்து விரைவில் வெளியேறுவதே நல்லது

ஜோஹன் சீசிக்கே: இந்த நோய் ஏற்படுத்துவதைவிட, அதிக இறப்புகளை தீவிரமான பொதுமுடக்கத்தின் மூலம் நீங்கள் உருவாக்கி விடக்கூடும்.

ராகுல் காந்தி: சரியாகச் சொன்னீர்கள். இந்தியாவில் பிரச்சனை என்னவென்றால், எங்களிடம் ஒரு மத்திய அரசும், ஏராளமான மாநில அரசுகளும் உள்ளன, இந்த இரண்டிற்கும் இடையே ஒரு பதற்றம் நிலவுகிறது. மத்திய அரசுக்கு ஒரு பார்வை இருக்கிறது, மாநில அரசுகளுக்கு மற்றொரு பார்வை இருக்கிறது. அந்த வகை வித்தியாசம் விவாதங்களைக் குறைக்கிறது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை, இதுவரையிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகும். குடிசைப்பகுதிகளில் வசிக்கின்ற ஏராளமானவர்களே புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக இருக்கிறார்கள், எனவே அனைத்தையும் மூடியவுடன், அவர்களால் கிராமப்புறங்களில் உள்ள தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல முடியவில்லை. அது மிகுந்த கவலையை உருவாக்கியுள்ளது. உணவு ஒரு கடுமையான பிரச்சினையாக மாறப்போகிறது, ஏனென்றால் அன்றாட ஊதியத்தை நம்பியிருக்கும் ஏராளமான உழைப்பாளிகள் எங்களிடம் இருக்கின்றனர். அவர்கள் ஏற்கனவே சிக்கலில் உள்ளனர், ஏனெனில் அவர்களுக்கு இதுவரை பெற்று வந்த ஊதியங்கள் கிடைக்கவில்லை. அவர்களுக்குத் தேவையான அளவில் உணவு வழங்குவது இந்திய அரசாங்கமும், மாநில அரசுகளும் எதிர்கொள்கின்ற மிகப்பெரிய சவாலாகும்

ஜோஹன் சீசிக்கே: இப்போது உங்களுக்காக, இந்தியா இருக்கின்ற நிலைமையில், கூட்டாட்சி மாநிலங்கள் மற்றும் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, ஒரு மிதமான பொதுமுடக்கம் மட்டுமே உங்களுக்கு வேண்டும் என்று நினைக்கிறேன். முடிந்தவரை மிதமானது.

ராகுல் காந்தி: நான் உங்களை மேலும் காத்திருக்க வைத்திருக்க விரும்பவில்லை.

ஜோஹன் சீசிக்கே: என்னுடைய கணினியில் உங்களைப் படம் எடுத்துக் கொள்ளலாமா?

ராகுல் காந்தி: தாராளமாக என்னைப் படம் எடுத்துக் கொள்ளலாம்.

உங்களுடன் பேசியது மிகவும் அருமையாக இருந்தது.  மிக்க நன்றி

நேசனல் ஹெரால்டு பத்திரிக்கை 2020 மே 27

https://www.nationalheraldindia.com/india/watch-rahul-gandhi-in-conversation-with-experts-in-healthcare-social-sciences

தமிழில்

தா.சந்திரகுரு