வால்காவிலிருந்து கங்கை வரை வரலாற்று நூலா? என ஒருகணம் யோசித்து கையில் எடுத்த நூலை நேசிக்க வைத்தது எனது வாசிப்பு பயணம்.. First of all I would like to express my deepest gratitude to our CEO sir for such a precious stone (the historical book) he has been added one more pearl bead in my treasure🙏🏻🙏🏻🙏🏻.. Thank you sir
இப்புத்தகம், சோவியத் நாட்டின் வால்காவிலிருந்து தொடங்கி இந்தியாவின் கங்கை வரை செல்லும் கால பயணத்தைப் பற்றி விவரிக்கிறது.
வால்காவிலிருந்து கங்கை வரை 1943 ஆம் ஆண்டு ஹிந்தி மொழியில் எழுதப்பட்டது 1949 இல் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வரலாற்றோடு புனைவதை தத்துவ கண்ணோக்கிலும் கதை மாந்தர்களின் வாயிலாகவும் பேசப்படும் நூலாக இதை படைத்துள்ளார் நூலாசிரியர்.
கதை தொடங்கும் காலம் எப்போ அப்படின்னு பார்த்தோம்னா ரொம்ப வியப்பாவே இருக்கு ஏன்னா அது கி.மு. 6000 முதல் கதை முடியிற காலம் எப்போ அப்படின்னு கேட்டீங்கன்னா 1942 ஆம் வருஷம் வரைக்கும் அழகா கோர்வையா கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.. அப்ப நம்மளே கணக்கு போடலாம் கிட்டத்தட்ட 8000 வருடங்களுக்கான கதைகளை இருபதே chapter ல என்ன அழகா தத்ரூபமா ஆசிரியர் கொடுத்திருக்கிறார்னு… அதுமட்டுமில்ல அந்தக் காலகட்டத்தில் மனிதர்கள் கொண்டிருந்த உணவு பழக்க வழக்கங்கள்ல தொடங்கி அவங்களுடைய பழக்கவழக்க நெறிமுறைகள்ல எப்படி முன்னேற்றத்தை அடைஞ்சாங்க, குறிப்பா சொல்லனும்னா இயற்கை சூழல் எப்படி இருந்துச்சு சமூகம் சார்ந்த வளர் நிலைகள் எப்படி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துட்டு போச்சு அப்படிங்கிறத கதை போற போக்கிலேயே ஆசிரியர் தெளிவா சொல்லிட்டு வராரு..
இந்தோ ஐரோப்பிய காலத்தில் வால்கோ நதிக்கரையின் அருகே ஆரம்பிச்சு தொகுக்கிறார் ஆசிரியர்..
அங்கு கூறப்பட்டுள்ள மானுடர்களின் வசிப்பிடமோ பனிக்குகை தான், குடும்பம் குடும்பமாக ஒவ்வொரு குகையில தங்கி வாழ்ந்துட்டு இருக்காங்க அதுல அவர்களுடைய உணவு அப்படின்னா அங்கு கிடைக்கிற தான மிருகங்கள வேட்டையாடி சாப்பிடறது குறிப்பா ஓநாயினுடைய ஈரல் ரொம்பவே பிடிச்ச உணவு வேட்டையாடும் அந்த மனித இனத்துக்கு. சந்தோஷம் என்று வந்தால் அனைவரும் சேர்ந்து கூத்தடிப்பதும் அதே சமயத்தில் துக்கம், துன்பம் நோய்வாய்ப்பட்டு இருக்கும் பொழுது அதிலும் தாயின் கருணையுள்ளத்தை எட்டாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே காண முடிகிறது ஏனென்றால் இப்போதைய நிலையைப் போல் அல்லாது தங்களை வழிநடத்தி செல்லும் leader அங்க யாரு அப்படின்னு கேட்டீங்கன்னா தகப்பன் கிடையாது *தாய்* தான் இது அவங்க யாருட்ட இருந்து கத்துக்கிட்டாங்க அப்படின்னா மிருகங்கள் கிட்ட இருந்து தான்..
இதில் முதல் கதையாக நிஷா தாயாக உருவெடுக்கிறாள் அவள் எவ்வாறு அந்தக் கூட்டத்தை வழிநடத்தி செல்கிறாள்.. பனிக்காலகட்டத்தில் மிருகங்களை வேட்டையாடி அதை தங்கள் உணவாகக் கொண்டு சேமித்து வைத்து கொள்ளும் பழக்கம் அப்போவே ஆரம்பித்து விட்டது, பனிக்காலம் முடிந்து வசந்த காலம் ஆரம்பித்து அவளது வழிநடத்துதல், கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கு அவளுக்கு போட்டியாக வந்த அவளுடைய மகள் லேகாவின் வீர தீர செயல்கள் , மலை ஏறுவதிலிருந்து தேன் எடுக்கும் நுட்பங்கள் வரை அனைத்திலும் தேரியவளாக இருக்கும் லேகாவின் மீது தாய் நிஷாவுக்கே பொறாமைப்படும் காலகட்டம். . *பொறாமை கொண்டவன் வாழ்வையே இழப்பான்* என்ற பழமொழிக்கிணங்க லேகாவின் உயிரை பறிக்கும் எண்ணத்தில் செயல்படும் தாய் நிஷாவின் திட்டங்கள், மிருகங்களோடு அவர்களது வாழ்க்கை முறைமை, கொஞ்சம் விறுவிறுன்னு வித்தியாசமாத்தான் போகுது, இருவர் வாழ்வையும் கேள்விக்குறியாக்குவது கதையின் முடிவு. மனிதர்களிடம் மிருகத்தனமிக்க உணர்ச்சி வெளிப்பாடு அதிகம் பேசப்பட்டுள்ளது இங்கே.

அடுத்த தலைப்பு *திவா* இதில் வால்கா நதியோரம் திவா மற்றும் வர் இருவரின் சூழ்நிலைக்கேற்ப செயல்படும் அருமையான அன்பு பரிமாற்றத்தை காணலாம். வர் சூரனாகவும் அவனது உடல் கட்டமைப்பு பற்றிய விவரணைகளும் மற்றும் காட்டுப்பன்றியை பிடித்து சூறையாடும் அவனது கையே தன் அன்பு திவாவுக்காக பூக்களை மென்மையாக பறிக்கும் பக்குவ குணம் கொண்டதை கண்டு வியக்கும் தீவாவின் மன அலசல்களை மெல்லிய பூக்களின் இதழ்களின் நறுமணத்தோடு இந்நூலில் சூடியுள்ளார் ஆசிரியர்…
அடுத்த தலைப்பு *அமிர்தாஷ்வன்* இதில் நிஷா மற்றும் உஷா இரு குடும்பங்களின் வாழ்க்கை நெறிமுறைகள் மனிதன் எவ்வாறு அடுத்த கட்டத்திற்குள்ளாக நகர்ந்து செல்கிறான் என்பதை ஆசிரியர் விவரிக்கிறார் அதாவது கற்களை கொண்டு வீடு கட்டும் உஷாவின் குடும்பத்தாரும், மரங்களை வெட்டி நெருப்பு மூட்டி அதன் மூலமாக தங்கள் வாழ்க்கையை அடுத்த கட்ட நகர்விற்குள்ளாக தள்ளும் நிஷாவின் குடும்பமும் மற்றும் அவர்கள் வேட்டையாடும் மிருகங்களை பின்பற்றி அவர்களது அடுத்த நகர்வுகளும், அங்கே சொல்லப்பட்டுள்ளது.. எப்படின்னா வேட்டையாட செல்லும்போது மிருகங்கள பிடிக்கிறது மட்டுமில்லாம அந்த மிருகங்கள் எங்கெல்லாம் போகுது, எப்படி போகுது அப்படிங்கிறத கண்காணிச்சு அதை பின்பற்றி அந்த வழியிலேயே சென்று அடுத்த பாதையை கண்டுபிடிக்கிறது இங்கு சுவாரசியமான விஷயம் இன்னும் என்ன அப்படின்னா பானைகள் செய்ய ஆரம்பிக்கிறாங்க, அப்புறமா மிருகங்களோட மண்டை ஓட்ட பாத்திரங்களா use பண்றாங்க, சூரிய நமஸ்காரம், ரகசியத்தை கையாளுதல், குழுக்களாக பிரிந்து சண்டையிடுதல், போர் கொடி தொடுத்தல் என அவர்களது அடுத்த அடுத்த கட்ட நகர்வுகள் இங்கு மிக அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது..
குறிப்பா வளர்ச்சில என்று சொல்லனும்னா, கல் பொருள் என்பது எக்கு பொருளாகவும் அது பின்னர் தாமிர பொருளாகவும் மாற்றம் கண்டு பின்னர் ஈட்டி, அம்பு மற்றும் போர்க்கருவிகள் likewise they are upgrading their weapon structure too hence the war got introduced inbetween. கால்நடைகள் அவர்களது உணவுக்காக என்று கருதிய காலம் கடந்து அதனை பராமரிக்கும் காலமாக மாறி குறிப்பா குதிரை இனங்களை ஒரு இடம் விட்டு இன்னொரு இடம் செல்வதற்கு மிகுந்த தூரம் பயணம் செய்வதற்கு பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. முக்கியமா ஆரியர்கள் வால்காவில் இருந்து கங்கை வரை அவர்களது இன பெயர்வுகள் பற்றி அலசி ஆராய்கிறார் ஆசிரியர்..
சொல்லப் போனா இனக்குழுக்கள் பிரிக்கப்படுகின்றன, பந்தமாற்று ஆரம்பிக்கப்பட்டு போருக்கு அதிக பலமான ஆயுதங்களை வைத்திருந்தவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது அதன் மூலம் ஆரியர்கள் அடுத்த மைல்கல்லை நோக்கி அடியெடுத்து வைக்கிறார்கள். ஆச்சு அப்படின்னு பார்த்தோம்னா கால்நடைகளை பராமரிப்பதற்காக பெண்களும் குழந்தைகளும் வீட்டுக்குள்ளாக கிடத்தப்படுகிறார்கள் வெளில போய் போர் புரிவதற்கு ஆண்களின் அதிகாரத் தோனியும் அவர்களது வலுவான உடல்வாகும் சமூக மாற்றத்தை முன்னெடுக்கிறது.

கைபர் கால்வாய் வழியாக இடம் பெயர்ந்து வந்த ஆரியர்கள் திராவிட சமூகத்தை பார்த்து ரொம்பவே ஆச்சரியப்பட்டு போறாங்க எதை பார்த்து அப்படின்னு ஒரு கேள்வி எழும்புதுல என்னன்னு பார்த்தீங்கன்னா *என்னடா இது மாடர்ன் லுக் ல இருக்கு நகர அமைப்பு ல வச்சிருக்காங்களே* அப்படின்னு ஆரியர்கள் வியந்து பாக்குறாங்க பெண்களுடைய ஆபரணங்கள், பட்டுத்துணிகள், நமது வீட்டின் அமைப்பு முறைகள் ஆங்காங்கே இருக்கும் அழகான தோட்டங்கள், இயற்கை ரகசியங்கள், கடல்சார் வணிகங்கள், மொழிகள் இவை அனைத்தும் பார்த்து மிகவும் ஆச்சரியத்துக்குள்ளாகுறாங்க ஆரியர்கள்.. அவர்களிடமிருந்து அதை பறிப்பதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்த ஆரியர்கள் இரண்டாகப் பிரிகிறார்கள், ஒன்று அரசர் வட்டம் மற்றொன்று புரோகிதர்கள் வட்டமாகவும் பிரிந்து இப்படியாக அரசு மக்களை ஆட்சி செய்யும் முறை எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது ஆசிரியர் தெள்ளந் தெளிவாக ஆதாரங்களுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார்..
மக்களை ஆட்சி செய்ய அரசு அமைத்தலை தொடர்ந்து வேதங்கள் உருவாக ஆரம்பிக்கிறது, அதனை தொடர்ந்து சாதி அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. என சாதி பாகுபாடுகள் துளிர்க்க ஆரம்பிக்கிறது..1922 முதல் இரண்டாம் உலகப்போர் காலம் வரையிலான இந்திய சுதந்திரப்போராட்ட நிகழ்வுகளின் மீதான விமர்சனங்களையும், மகாத்மா காந்தியின் போராட்டமுறைகளையும் விமர்சிக்கிறார். இரண்டாம் உலகப்போரின் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் இக்கட்டான நிலையையும், பாசிச, நாசிசத்தால் ஏற்படப்போகும் ஆபத்துக்களையும், பொதுவுடைமை மட்டுமே இவை எல்லாவற்றுக்கும் தீர்வாக அமையும் எனவும் என ஆசிரியரின் தொலைநோக்குப் பார்வை இங்கு பிரம்மிப்பூட்டுகிறது..
அதைத்தொடர்ந்து பூத மதம் நுழைகிறது.. சாதியவாதத்தில் உள்ள சமத்துவமற்ற கட்டமைப்பிற்கு எதிராக சமத்துவத்தை நடைமுறைப்படுத்த.. பின்னர் இஸ்லாமும், கிறிஸ்தவமும் படிப்படியாக உள்ளே நுழைய ஆரம்பித்தன, ஆங்கிலேயர்கள் கிறிஸ்தவத்தை பரப்புவதற்கு மட்டுமல்ல, வர்த்தகத்தையும் தங்கள் ஜமீன்தாரி முறையை மேம்படுத்தவும் உள்ளே நுழைகிறார்கள். தொழிலாளர்களுக்கு உள்ளாக புரட்சியை உருவாக்கி தொழில் புரிவோரின் நிலை அடுத்த கட்ட நகர்விற்கு உள்ளாக தள்ளப்படுகிறது, விஞ்ஞான வளர்ச்சி என்பது அடித்தள தொழில் புரிவோரை விவசாயத்தை விட்டு தன்னிச்சையாக தொழில் புரிவோராக மாறுகிறது.. அதன் பிறகு உரிமைப் போக்கு வருகிறது.. இங்கு மனிதகுலத்தின் ஒவ்வொரு நிலையின் மாற்றத்தையும் ஆசிரியர் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்..
*ஆரியர்களின் பயணம் வால்காவிலிருந்து கங்கை வரை என சொல்வதை விட காலப்பயணம் மனிதனை எவ்வாறு மாற்றி அமைத்தது* கிட்டத்தட்ட 8,000 ஆண்டுகளாக மனிதனின் நிலைப்பாட்டில் உள்ள மாற்றத்தை அதாவது வேட்டையாடும் மனித சமூகம் முதல் முதலாளித்துவம் மிக்க அவனது முன்னேற்றம் இருபதே அத்தியாயங்களில் நம் கண்முன் படம் பிடித்து காட்டி சென்றுள்ளார் ஆசிரியர்.. தொடுத்தவை சில தகவல்களே வாய்ப்பிருந்தால் நீங்களும் வாங்கி வாசித்து பயனடையுங்கள்…
நூலின் தகவல்கள் :
நூல் : வால்காவிலிருந்து கங்கை வரை
ஆசிரியர் : இராகுல சாங்கிருத்தியாயன்
தமிழில் : முத்து மீனாட்சி
விலை : ரூ . 450
வெளியீடு :பாரதி புத்தகாலயம்
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/valkavilirunthu-kangai-varai/
எழுதியவர் :
அ.சுகிர்தா குணசீலி,
நெல்லை
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

