வானவில் மலைகள் - ஏற்காடு இளங்கோ - Rainbow Mountain - Yercaud Elango - China - Mountains - bookday - https://bookday.in/

  வானவில் மலைகள் – ஏற்காடு இளங்கோ

  வானவில் மலைகள் – ஏற்காடு இளங்கோ

 மலைகள் என்றால் தாவரங்கள் மற்றும் மரங்கள் வளர்ந்து பச்சை பசேல் நிறமாகக் காணப்படும். சில மலைகள் பனியால் போர்த்தி வெண்மையாகக் காட்சி தரும். ஆனால் சீனாவில் ஒரு மலைத்தொடர்  வானவில்லைப் போல் பல நிறங்களைக் கொண்டுள்ளது. இது வானவில் மலைகள் (Rainbow Mountains) என அழைக்கப்படுகிறது.

இது சீனாவின் கன்சு மாகாணத்தில் ஜாங்கியே டான்சியா (Zhangye Danxia) தேசியப் புவியியல் பூங்காவில் அமைந்துள்ளது. இது உலகின் புவியியல் அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது 2009 ஆம் ஆண்டு யுனோஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இது ஒரு சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த தேசிய பூங்கா 322 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் உருளும் மலைகளும் (Rolling hills) மற்றும் பாறை அமைப்புகளும் இயற்கையாக வர்ணம் பூசப்பட்டதைப் போலவே காட்சி தருகிறது.

China’s Rainbow Colored Mountains Zhangye Danxia Landform Geological Park | by Fatima Karim | Medium

இந்த அற்புதமான நிறங்களின் காட்சி அனைவரையும் மயக்கும் வண்ணம் உள்ளது. சுமார் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு யூரேசிய தட்டுக்குள் இந்திய தட்டு மோதியது. இதனால் மலைகள் தோன்றின. அப்போது பூமியின் மேற்பரப்புக்கு கீழே மறைந்திருந்த வண்டல் பாறைகள்  வெளிவந்தன. மணற்கல் மற்றும் தாதுக்கள் ஒன்றோடொன்று 24 மில்லியன் ஆண்டுகளாக அடுக்கி வைக்கப்பட்டன.

This unique geological sight is known as Danxia landform. The Danxia landform refers to various landscapes found in southeast and southwest China that “consist of a red bed characterized by steep cliffs”. [960x677]

மணல், வண்டல் இரும்பு மற்றும் தாதுக்கள் படிந்து அடுக்குகள் உருவானதால், தெளிவான கோடுகளுடன் கூடிய வண்ணங்கள் தெரிகின்றன. சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் நீல நிறங்கள் டயஜெனெடிக் மற்றும் கனிமவியல் செயல்முறை மூலம் உருவாகின. இரும்பு ஆக்சைடுகள் அடர் சிவப்பு நிறமியை வழங்குகின்றன. மேலும் ஆக்ஸைடுகள் வெவ்வேறு வண்ணங்களை உருவாக்குகின்றன.

Una Mirada - 😉📚✏️ El Geoparque Nacional Zhangye, ubicado... | Facebook

ஆக்ஸிஜனேற்றம் அடைந்த லிமோனைட் பழுப்பு அல்லது மஞ்சள் நிறத்தையும், இரும்பு சல்பைடு உலோக மஞ்சள் நிறத்தையும், குளோரைட் பச்சை நிறத்தையும் கொடுக்கின்றன. இரும்பு மற்றும் பிற கனிமங்களின் வேதியியல் கலவையின் விளைவாகவே வானவில்லின் ஏழு நிறங்கள் தெரிகின்றன. மழை பெய்த பிறகு சூரிய ஒளி மலையின் மீது படும்போது வண்ண நிறங்கள் மிகவும் பிரகாசமாகத் தெரியும்.

கட்டுரையாளர் :
    

 Rainbow Mountain article by Yercaud Elango

 – ஏற்காடு இளங்கோ

  அறிவியல் எழுத்தாளர்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



                                   

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *