The title of the book reminds the popular proverb *Action speaks more than words* it’s really well portrayed here with more meaningful incidents of the author.. Hats off to the emerging author for the wonderful masterpiece which helps and motivates million throughout the world..
Raj Shamani discussed nearly 39 essays.. Each has its own uniqueness that’s appreciatable
👏🏻👏🏻👏🏻👏🏻
சிறுவயதில் வர்த்தகத்தின் தூசியும், வாழ்க்கையின் கசப்பும், விதியின் சுமையும் தோளில் படிந்தவராய்
புத்திசாலி என்ற சொல்லை யாரும் தனது பெயருடன் இணைக்காத நிழலின் கீழ் அவரது கனவுகள் மட்டும் மலர்ந்தது எப்படி?..
தன்னிடம் எதுவும் இல்லை என்ற உணர்விலிருந்து
எதையாவது உருவாக்குவேன் என்ற முயற்சி பல திசைகளில் பறக்கும் பட்டாம்பூச்சியைப் போல அவரது திறன்கள் வண்ணமயமாய் பரவின..
Raj Shamani கற்றது புத்தகப் பக்கங்களிலிருந்து மட்டுமல்ல,
வாழ்க்கையின் பள்ளங்களிலிருந்தே என்று திண்ணமாய் அறிய முடியும் புத்தகத்தை படிக்கும் பொழுதே
இன்று Raj Shamani
ஒரு தொழிலதிபர் என்ற பெருமையை தாண்டி,
இளைஞர்களின் கனவுகளில் நிற்கும்
நம்பிக்கையின் உருவம் என்ற பெருமையை வழங்கியது அவருக்கு இந்நூல்..
*Build ~Don’t Talk~* நம் வாழ்க்கை நடைபயணத்தில் கையை பிடித்துச் செல்கின்ற ஒரு நம்பகமான தோழனைப் போல, *செயலின் சக்திக்கு மதிப்பளிக்கத் தெரியாதவர்களுக்கு இது ஒரு திசைமாற்றம்*,
*தொடங்கத் தயக்கம் உள்ளவர்களுக்கு இது ஒரு மென்மையான உந்துதல்*,
*ஓய்ந்து நிற்கும் கனவுகளை தட்டி எழுப்பும் நம்பிக்கைக் கரம்*

அதனால் தான் அவர் சொல்வது பல திறன்களை அறிதல் ஒரு சிதறல் அல்ல; அது மனிதனை முழுமையாக்கும் ஒரு அற்புத வடிவமைப்பு. “பேசாதே செய்” என்கிற அவரது மையக்கரு அவரது சொந்த தோல்விகள், தடுமாற்றங்கள், சிறு சிறு வெற்றிகளின் மணல் துகள்களால் உருவான மண் கோட்டையாக நின்றுத் தனது அனுபவத்தில், “Jack of all trades” என்பது குறையல்ல; அது வாழ்க்கையின் பல கதவுகளைத் திறக்கும் அற்புதத் திறவுகோல் என்றும்,
Don’t focus in your goals
Just stop overthinking,
Stop innovating start copying
போன்ற தலைப்புகளை
வாசிக்க ஆரம்பித்தவுடன் நாம் ஒரு கோணத்தில் சிந்திக்க ஆசிரியர் கூறும் வார்த்தை மாயாஜாலம் நம்மை வேறு திசையில் திருப்பி வித்தியாசமான அணுகு முறையில் சிந்திக்க வைக்கிறது..
இன்றைய இளைஞர்களின் கனவுகளும், அவர்களை திசைதிருப்பும் டிஜிட்டல் சத்தங்களும் நிறைந்த நேரத்தில், இப்புத்தகம் ஒரு தெளிந்த வழிகாட்டிக் குரலாக திகழ்கிறது. பேசுவதிலும் திட்டமிடுவதிலும் நேரத்தை வீணாக்காமல், சிறிய செயல்களின் வழியாக பெரிய மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படை உண்மையை ஆசிரியர் நேர்மையாக முன்வைப்பது சிறப்பு..
ராஜ் ஷாமானி தன் வாழ்வில் சந்தித்த தடைகளையும், அவற்றைக் கடக்க முயன்ற மனவலிமையையும் பகிரும் போது நம்மை அந்த அனுபவங்களுக்குள் அவரது எழுத்து இழுத்துச் சென்று ‘எனது வாழ்க்கை எப்படி மாறும்?’ என்ற அடிப்படை கேள்விக்கு சிறு வழிகாட்டுதல்களாக விடைகள் தருகிறது..
நம்மிடம் பயிலும் மாணவர்களுக்கு இந்த புத்தகத்தை வாசிக்க பரிந்துரைக்கலாம் ஏனென்றால் படிப்பிலும் , திறன் வளர்ச்சியிலும் தொடர்ந்து கவனம் செலுத்த உதவும் மேலும் தன்னம்பிக்கையை வளர்க்கும் சிந்தனை முறையை உருவாக்கும்,
எதிர்காலத்தை கட்டமைக்கும் நடைமுறை வழிகளை வழங்கும், வாழ்க்கை இலக்குகளை திட்டமிட்டு அடைய உதவும்.
We ll use this punch to trap them
*Mute your mouth and unmute your action else your life will be dilute*
பேச்சுக்கு likes வரும்…
build பண்ணினா life வரும்!!
If we delays to build *நாம announce பண்ணுறதுக்குள்ள… மற்றவன் launch பண்ணிடுவான்*
இதில் என்னை மிகவும் கவர்ந்த தலைப்பு, *How to come up with a Business idea..*
*We can build a business in every field if we are good in that field*
இத்தலைப்பில் ஆசிரியர் தனது அனுபவத்தை முத்திரையிட்டு நமக்கு நமது தளத்தை தேர்வு செய்ய அறிவுறுத்தும் திறன் அருமை…
இப்புத்தகம் எனக்கு அறிவுறுத்திய சில வழிமுறைகள் இங்கே..
மாணவர்களின் எதிர்கால கனவை வடிவமைக்க அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதோடு நில்லாது அவர்களது வடிவத்தை அவர்களாகவே வடிவமைப்பதற்கேற்ற உந்து சக்திகளாக மாறுவது என்ற சிறந்ததொரு யுக்தியை கற்றுக் கொண்டேன்..
School taught us specific subjects but we weren’t taught,
*How to build relationship*
*How to negotiate challenges*
*How to network*
*How to deal with personal finance* and much more
For that it’s a must read 📕
Kindly try🤝
📘📘📘📘📘📘📘📘📘📘
நூலின் விவரங்கள்:
நூல் : Build, Don’t Talk: Things You Wish You Were Taught in School
ஆசிரியர் : ராஜ் சமானி (Raj Shamani)
விலை : ரூ.250
பதிப்பகம் : Penguin Books
எழுதியவர்:
✍🏻 – அ.சுகிர்தா
நெல்லை
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

