1969 ராஜாஜி அவர்கள் எழுதிய அன்னையும் பிதாவும் என்ற சிறுகதை பற்றி இரண்டு நாட்களுக்கு முன்பு கலை இலக்கிய விமர்சகர் ஐயா இந்திரன் Indran Rajendran அவர்கள் முதல் தலித் சிறுகதை இது குறித்து விமர்சனம் எழுதுங்கள் என்று முகநூலில் வாசகர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் அவர் குறிப்பிட்டு இருந்ததைப் போல இணையத்தில் சென்று அந்த சிறுகதையை வாசித்தேன்
அந்தச் சிறுகதை ஒரு பறையர் சிறுவன் ஒருவன் ஹிரிஜன சேவா சங்கத்தின் அங்கமாக இருக்கும் ஒரு நபரால் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவனுக்கு நல்ல கல்வி அறிவு கொடுக்கப்பட்டு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது அங்கிருந்து பதவி உயர்வு பெற்று பெங்களூருவிற்கு வந்து பணியில் அமரும் அந்த இளைஞன் நியாயமாகவும் நேர்மையாகவும் நல்ல அழகு அறிவு நிறைந்தவனாகவும் இருக்கின்றபடியால் அந்த இடத்தில் உயர் அதிகாரியாக இருக்கின்ற ஒரு பிராமணர் தன் தங்கையை திருமணம் செய்து கொள்ள கேட்கிறார் அந்த பறையர் தன் சாதி குறித்து யோசித்து அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள தயக்கம் காட்டுகிறான் அதற்கு அந்தப் பெண் மற்றும் அந்த உயர் அதிகாரி இருவரும் சாதி எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்கிறார்கள் இருந்த போதும் அவன் தன் சாதியை மறைத்து முதலியார் என்று சொல்லி வைத்திருப்பதால் தன் உண்மையான சாதியை சொல்லிவிட வேண்டும் என்று நினைக்கிறார் ஒரு கட்டத்தில் நாமே ஏன் அதை வெளிப்படுத்தி சிக்கலுக்குள்ளாக வேண்டும் என கருதி மறைத்து விடுகிறான்
அவனுடைய குடும்பத்தை அறிமுகம் செய்து வைக்கச் சொல்லும் போது சாக்கு போக்கு சொல்லி தவிர்த்து விடுகிறான் இதற்கிடையில் அவன் என் குடும்பம் நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகிறது அவன் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் குற்றவுணர்ச்சியில் துறவி ஆகி அவன் சொந்த ஊருக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு கல்வி கற்பிக்கிறார் இப்படியாக அந்த கதை முடிகிறது
இதில் ராஜாஜி அவர்கள் கையாண்டிருக்கும் நுண் அரசியல் என்பது தலித்துகளை மீட்டெடுப்பதற்காக ஹரிஜன சேவா சங்கம் போன்ற தலித்துகள் பங்குபெறாத அமைப்பு பெரும் பணியாற்றியுள்ளது என்பதை நிறுவ முயல்கிறார்
சில இடங்களில் சில தலித்துகள் தங்களின் சாதியை மறைத்து வாழ்கின்ற சமூகச் சூழல்தான் இன்னும் கூட நிலவுகிறது அந்த காலகட்டங்களில் அப்படி சாதியை மறைத்து ஒரு பறையர் வாழ்ந்தார் என்பது ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை அதேபோன்று ஒரு பார்ப்பனர் சாதியை கடந்து நல்ல குணங்களுக்காகவும் நன்னடத்தை களுக்காகவும் சிறந்த பொருளாதாரத்திற்காகவும் திருமண உறவு வைத்துக் கொள்வதற்கு தயங்குவதில்லை சாதியை கடந்து முற்போக்காக சிந்திப்பது என்றாலும் சாதியை தூக்கிச் சுமந்து பிற்போக்காக சிந்திப்பது என்றாலும் பார்ப்பனர்கள் முதலியாரையும் பறையர்களையும் அதாவது பார்ப்புணர்களுக்கு கீழே இருக்கின்ற அனைத்து சாதிகளையும் ஒரே தட்டில் தான் வைத்துப் பார்க்கிறார்கள் என்பது உத்திரம் அதைத்தான் இந்த கதையில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது
பார்ப்பனர்களின் குணத்தை முற்போக்காக பெருமை மிகுந்ததாக வடிவமைக்கப்பட்ட இந்த சிறுகதையில் எவ்வளவுதான் கல்வி அறிவு பொருளாதாரம் வளர்ந்து இருந்தாலும் அவர்களின் குடும்பச் சூழல் அசுத்தம் நிறைந்ததாக இருக்கும் என்று இழிவு படுத்துகிறார்
இதை படிக்கும்போது ஊர்த்தெரு பூனை கவிதை தொகுப்பில் நான் எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வந்தது
நடுவீதிவரை பாயும் நாற்றமடிக்கும் சாக்கடையில்
நடந்த இழிவை பேசுவிர்கள்
நாங்களோ வாசலில் மல்லாந்து படுத்து
நட்சத்திர கூட்டங்களுக்குள்
சுற்றுலா போய் வந்ததை ரசித்துக்கண்டிருப்போம்
என தொடங்கும் அந்தக் கவிதை
எப்போதும் சேரியை காணும்
உங்களின் பார்வை வேறு தான்
எங்களின் பார்வை வேறு தான் என்று முடியும்
அழகிலும் உடல் வலிமையிலும் நன்னடத்தையிலும் நேர்மையிலும் சிறந்து விளங்கினாலும் ஒரு பறையர் பார்ப்பன பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக தன் குடும்பத்தில் உள்ள அனைவரும் இறந்து போய்விட வேண்டும் என்று எதிர்பார்பதைப் போல ஒரு மோசமான கருத்து உருவாக்கத்தை விதைக்கிறார்
ஒரே வயதை ஒத்த பறையர் பார்ப்பனர் எனும் இரண்டு நபர்களை இந்த கதையில் குறிப்பிடும் போது எழுத்தாளர் ஒருவரை அவன் இவன் என்று ன் விகுதி போட்டு எழுதுகிறார் மற்றொருவரை அவர் இவர் என்று ர் விகுதி போட்டு எழுதுகிறார்
உயர் சாதி மனநிலையில் இருந்து எழுதப்படும் தலித் இலக்கியம் என்பது எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு சான்று .
📚எழுதியவர்:
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

