விளையும் கனவு – ப.ராஜகுமார் சிவன்.

Image Credits: CNBC-TV18 Twitterவிளையும் கனவு
********************

தானிய கிடங்கு அருகே
தனியாக
தூங்கியவனுக்கு
அமோக விளைச்சல்….

வானொலி அறிவிப்பை
செவியில் கேட்கிறான்
மழைக்கு
வாய்ப்பு இல்லை…..

அறுவடைக்கு
ஆறு நாட்களே உள்ளது
டீசல் விலை
உயர்ந்து விடுமோ…..

நெல் கொள்முதல்
செய்வதற்கு
வரிசையாக
நிற்கின்றன எலிகள்…..

கோணிப்பைகளில்
பணக்கட்டுகளை
அடுக்கி வைத்து
மாட்டு வண்டி
வருகிறது….

இயற்கை விவசாயம்
எப்படியென கேட்க
தொலைக்காட்சி
நிருபர்கள்
நேரம் கேட்கிறார்கள்….

சொட்டு நீர்
பாசன முறையை
அறிந்து கொள்ள
பக்கத்து ஊர்
பண்ணையார்
கூப்பிட்டு உள்ளார்….

குளிருக்கு
விரித்து உறங்கிய
போர்வைக்குள்
அரவம் ஒன்று நுழைய
கலைந்த கனவில்
குலைந்து போனது
விளைந்த கனவு…..

ப.ராஜகுமார் சிவன்.