எங்குமே இருள் இருள்… – இராஜ்பாரத் விவண்ணத்தில் இருள் கருப்பு.

அதுவே யாம் காணாது காணும் வண்ணமும் யாம் பெற்ற வரமும்.

 

எண்ணங்களும் சிந்தையும்
யாம் கற்பனையிலும் காணும் வண்ணம் எவ்வண்ணம் யாரறிவார்…

தாயின் உயிரொலியே எனது முதலொலி.

ஆம் எனது செவிகளுக்கும் எனது உணர்வுகளுக்கும் உயிரே அவ்வொலியே.

உணர்வீர்காள் வளரும் பருவம், அறிவும், பருவமும், கல்வியும்
எனது பாதையின் வொளியூடகமாயின,

பொருளும் வடிவமும் தன்மையுமே எனது வெளிச்சமாய்…

வெளிச்சமே எனது காட்சி
வாழ்நாளும் இருளிலே வெளிச்சத்தை உற்பத்தி செய்து
இருண்ட வெளிச்சத்தில் இருளை கடந்து கடைந்து பசியாற்றியவர் நாங்கள்.

 

எங்களுக்கும் கர்வமேதுமில்லை
காட்சியும் தேவையில்லை.
இருளின் பிரபஞ்சத்தை, பருகிப் பருகி
வாழ்வைக் கடக்கும் இந்த பிரகாச வாழ்வே வரம்.

குருடர்களல்ல நாங்கள்
பரந்த உலகை அடையாளம் கண்டு இயங்குபவர்கள்.
குருடனுக்கு இலக்கணம் அறிவீர்களோ!
கண்ணிருந்தும் இல்லாதது போல்
கண்மூடித்தனமாக வாழும் அறிஞர்களே குருடனென உணர்வீர்கள்!

 

இராஜ்பாரத் வி.
மாரியம்மன் கோயில் தெரு,
அப்புக்கல் (அஞ்சல் & கிராமம்),
அணைக்கட்டு(வழி & தாலுகா),
வேலூர் மாவட்டம் – 632101.

FB ID : இராஜ்பாரத் வி

Whatsapp No: 9655021505.