rajesh sankarapillai kavirthaikal இராஜேஷ் சங்கரப்பிள்ளை கவிதைகள்
rajesh sankarapillai kavirthaikal இராஜேஷ் சங்கரப்பிள்ளை கவிதைகள்

இராஜேஷ் சங்கரப்பிள்ளை கவிதைகள்

என்னை
கடந்து போகவே
பல வருடங்கள்
எடுத்துக் கொள்கிறேன்.

ஆனால்
உன்னை கடந்து போக
எத்தனை யுகங்கள்
ஆகும் …?

சில நேரங்களில்
இப்படித்தான்
பல புதிர்களுக்கு
விடையாகின்றேன்.

காலைலே…..
இருந்தே மனம்.

‘பதக் , பதக்…

என்னவோ
தெரியவில்லை.

வீட்டில் முன்னடையில்

அழகிய
மல்லிகை கொத்து
வதங்கிய படி
என்னைப் பார்த்து
சிரித்தது.

சிறு வருத்தம்

நேற்று அவள்
கூந்தலில்
வருடிய மல்லிகை கொத்து
இப்படி அனாதையாய்.

ஆனாலும்
கடந்தேன்.

வாழ்க்கை இப்படித்தான் என ….

வரும் வழியில்
அதே போல்….

பறந்து திரிந்த
குருவி குஞ்சு….

குருதி நாற்றத்தில்
குமைந்து கிடந்தது.

மனம்
திரும்பவும் கடர முடியாமல்
தரித்தது.

சில நிமிடங்கள்
வரை ….

சிறு தானிய பதர்களிலும்
மரக்கிளைகளிலும்
வானம் பாடியாய்
திரிந்த குருவி….

கடைசி நிமிடங்கள்
கடர முடியாமல்
பாடம் சொன்னது.

அப்படியே,

காலையில் ஒரு நண்பர்
முகம் வாடிய நிலையில் நின்றார்.

ஏன் இப்படி என்றேன்.

சார்….

தம்பி, விபத்தில்
காலத்தை முடித்துக் கொண்டார்
என பதறி கடந்தார்.

என்னவோ,

இயல்பு

கால வர்ணங்களை
பல விதங்களில் தீட்டி கலைகிறது.

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *