ஏஞ்சாமி நீ….. ஏன் வெளியில நிக்கையின்னு மனசிலாச்சு.
உனக்கு தீட்டுமில்லை உனக்கு பாட்டுமில்லை
உனக்கு படைப்புமில்லை உனக்கு ஓட்டமுமில்லை
உனக்கு நடையுமில்லை உனக்கு ஆகமுமில்லை
உனக்கு மந்திரமுமில்லை உனக்கு சிறப்பு தரிசனமுமில்லை
உனக்கு காணிக்கை பொட்டியுமில்லை…… எப்பவும் தொட்டுக்கலாம்.
ஏன்னா….. எனக்கு நீ தான்,
‘ஏஞ்சாமி’
••••••••••••
கும்மிருட்டு, விலாசம் தேடி வீதிகளில் அவர்கள் கண்ணும் மனமும் பேசின…
அவர்கள் அவர்களில்லை என்றது மனம்.
திரும்பவும் நடை…. அள்ள முடியாத சிரிப்பொலிகள்.
மனம் கேவி அழ முயற்சித்தது. என்ன இது…
இவர்கள் ஏன்…. ஒவ்வொரு இரவும் சிரித்துக் கொண்டே தான் கடப்பார்களா?
என அடுத்த கேள்வி மறுதலித்து வளைந்து நின்றது.
திரும்பவும் அதீத ஒலி அப்படியே சிலையானேன்.
‘திசை தெரியாமல் ‘