இராஜேஷ் சங்கரப்பிள்ளை கவிதை rajesh sankarappillai kavithai
இராஜேஷ் சங்கரப்பிள்ளை கவிதை rajesh sankarappillai kavithai

இராஜேஷ் சங்கரப்பிள்ளை கவிதை

எப்போதும்
மனிதர்கள் …..
பார்த்த பிறகு தான்,
சிரிப்பார்கள்.

அவர்கள்
எப்போது
பார்க்காமல் சிரிப்பார்கள்
என யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.

சரி….

நீங்கள்
கண்டவுடன்
கேட்டவுடன்
பார்த்தவுடன்

‘சிரிப்பீர்களா….?’

ஆம் ,

இன்று காலையில் கூட

என் முற்றத்து
நந்தியாவட்டை
பூத்து சிலிர்த்தது….

ஏனோ .
எனக்கு வெட்கம் படர்ந்தது.

நானும்,
பார்க்கிறேன்,
மலர்கள் ஒரு போதும்
வெட்கப்பட்டு பார்த்ததேயில்லை.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *