ரஜினிகாந்த்தின் ஜெயிலர் 2 - திரைப்பட விமர்சனம் | Rajinikanth's Jailer 2 Tamil Movie Review | www.bookday.in

ஜெயிலர் 2 (Jailer 2) – திரைப்பட விமர்சனம்

ஜெயிலர் 2 – திரைப்பட விமர்சனம்

பார்த்தாலே போதும்!

முன்னாள் ரஜினி ரசிகர்களை மீண்டும் சிலிர்த்தெழச் செய்து, புதிய ரசிகர்களைக் கட்டிப்போட்டு, நிரந்தர ரசிகர்களை எப்படியெல்லாம் மகிழ்விக்க முடியுமோ அப்படியெல்லாம் நூறு சதவீதம் செய்து காட்டியிருக்கிறது ஜெயிலர் 2!

படம் முழுக்க மெல்லிய நகைச்சுவை இழையோடுகிறது. எந்த இடத்திலும் படத்தின் வேகத்தையோ சுவாரசியத்தையோ அது தடை செய்வதில்லை.

நமோ நாராயணா & கோ — அட்டகாச ஆட்டம்!

பழைய யோகிபாபு அவ்வப்போது எட்டிப் பார்க்கிறார். நிறைவாகவும் ரசிக்க வைக்கிறார்!

நிறைய நல்லவர்கள் படத்தில் இருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கைக்கு ஈடாக வில்லன்களும்!

விநாயக்கின் ‘யாக்கை’ நடனம், சுராஜின் யதார்த்தம், சூர்யாவின் அறுசுவை, மிதுன் சக்கரவர்த்தியின் உணர்ச்சிகளைக் காட்டிக்கொள்ளாத வில்லத்தனம் என ஒவ்வொன்றும் தனித்துவம்.

ஆனால், இவர்கள் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறார் வித்யா பாலன்! அதோடு, ஜெயிலர் 3 படத்துக்கு லீடும் கொடுத்துவிடுகிறார்!

ரம்யா கிருஷ்ணன், மருமகள், பேரன் மூவரும் முதல் பாகத்தை அப்படியே தொடர்கிறார்கள் — சோகப்பூச்சுடன்.

என்ன, அந்தச் சின்னப் பையனுக்கு மட்டும் கொஞ்சமாய்ப் பூனைமீசை வளர்த்திருக்கிறார்கள்!

கேமியோ ரோலுக்கு வருபவர்கள் அனைவரும் அதிகம் பேசாமல், வாங்கிய சம்பளத்துக்கு மகிழ்வூட்டிவிட்டுச் செல்கிறார்கள்!

இன்றைய பல திரைப்படங்களைப் போலவே, நூற்றுக்கணக்கானவர்களின் மரணங்கள் படத்துக்கு விறுவிறுப்பூட்டப் பயன்படுத்தப்படுகின்றன. சில இடங்களில், அது திரைப்படத்தைவிட வீடியோ கேம் விளையாடும் உணர்வையே தருகிறது.

நெல்சனின் திரைக்கதைக்கு அடுத்து முக்கியமாகக் கவனிக்க வேண்டியது BGM!

திரையில் உருவாகும் ஒவ்வொரு கூஸ்பம்ப்ஸ் தருணத்தையும் ரசிகர்களிடம் நூறு சதவீதம் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார் அனிருத்!

நெல்சனின் திரைக்கதை அட்டகாசம்! கதையையும், நடிகர்களின் நிறை குறைகளையும் தெளிவாகப் புரிந்துகொண்டு, அவற்றைச் சரிவிகிதத்தில் கலந்து ஒரு சுவாரசியமான படைப்பாகக் கொடுத்திருக்கிறார்.

ஐம்பதாண்டு கால சூப்பர் ஸ்டாரின் படத்தை இன்றைய காலத்திலும் ஹிட்டாக்க மேற்கண்ட அத்தனை அம்சங்களும் தேவைப்படுகின்றன!

அதை உணர்ந்து, நிறைய விட்டுக்கொடுத்து நடித்திருக்கிறார் தலைவர். அவர் விட்டுக்கொடுத்த இடங்களையெல்லாம் அப்படியே கேட்ச் செய்திருக்கிறார் நெல்சன்!

ரஜினியின் உடலுக்கு வயதாயிருக்கலாம்.

அவரது ஸ்டைலுக்குப் புதிய பரிமாணங்கள் தேவைப்பட்டிருக்கலாம்.

ஆனால், அந்தக் கண்களுக்கு வயதாகவில்லை!

அந்தக் கண்களில் தெரியும் இளமையும் நம்பிக்கையும் நெல்சனுக்குப் பக்கபலமாக இருந்திருக்கின்றன. அந்த நம்பிக்கை வசூலாகவும் மாறியிருக்கிறதா என்பதைப் பாக்ஸ் ஆபீஸ் சொல்லும்!

எழுதியவர் : 

அ. சீனிவாசன்

 

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *