ராஜு ஆரோக்கியசாமி கவிதைகள்

Raju Arokiyasamy Kavithaigal ராஜு ஆரோக்கியசாமி கவிதைகள்

சலனமற்ற நதியாய்
ஓடப் பார்க்கிறேன்
நான் வேண்டி விரும்பாமலே
சேரும் சுயநல சாக்கடைகள்

எல்லாவற்றையும் மீறிய
ஆத்ம திருப்தி
அந்தப் புள்ளியில்
செல்லாமல் போகும் பணம்

பொய்மையில் சிக்கியழியும்
நீர்க்குமிழியல்ல நான்
உண்மையோடு உருண்டாலும்
மணலாகி மகிழும் பாறை

கீறி ஆற்றுகிறேன்
ஆறாப் புண்
நீ கிழித்த
என்மனக் கடிதங்கள்

உன் ஞாபகங்களைத்
துடைத்து எறிகிறேன்
அழுக்கு நீரில்
ஆயிரம் செந்தாமரைகள்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.