இராம. பெருமாள் ஆச்சி கவிதை

இராம. பெருமாள் ஆச்சி கவிதை



இயற்கை மயமானவர்கள்
இயந்திரமென உழைப்பவர்கள்..
இறுகிய தோள்களை உடையவர்கள்
இளகிய மனங்களாகப் பூப்பவர்கள்.
மண்ணைக் கிளறுபவர்கள்
விண்ணை நம்புபவர்கள்..
அரசியல் ஆழமறியாதவர்கள்
அரையாடை மனிதர்கள்..
அழுக்கு முகங்களின் அழகர்கள்..
வழக்கு வாழ்வியலின் அச்சாணிகள்..
உழைப்பைத் தவிர ஒன்றுமறியாதவர்கள்..
பிழைப்பைப் பிறருக்காக அர்ப்பணிப்பவர்கள்..
நிலமகளின் நேரடி வாரிசுகள்..
நலவிரும்பிகளின் நட்சத்திரங்கள்.
நெற்றி வியர்வையில் முத்துகளை விளைவிப்பவர்கள்
வெற்றி கோப்பையில் விளைச்சலை நிறைப்பவர்கள்..
விருப்ப ஓய்வுகளை விரும்பாதவர்கள்..
விதைகளின் வினையூக்கிகள்
பயிர் வளர்க்கும் பண்பாளர்கள்
உயிர் உணவூட்டும் அன்னைகள்..
கலப்பையைத் தெய்வமாகத் தொழுபவர்கள
களைப்பை விரும்பாத கடிகார முட்கள்
களையடுக்க தயங்காதவர்கள்
விளைச்சலுக்காக அரசியலிலும்..
இராம. பெருமாள் ஆச்சி.



Show 1 Comment

1 Comment

  1. பா.சே.ஆதவன்

    உண்மைகளின் ஊர்வலக் கவிதை..!! மிகச் சிறப்பு சகோதரி.
    காலக் கண்ணாடி கவிஞன் என்பதை நீங்கள் மெய்ப்பித்திருக்கிறீர்கள்.
    உழவர் உலகம் வெல்க!
    உண்மை உலகம் மலர்க..!!
    இதய வாழ்த்துக்கள்..💐💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *