ரமாதேவி ரத்தினசாமி எழுதிய "16 வயதினிலே" புத்தகம் | Ramadevi Rathinasamy's 16 Vayathinile Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

ரமாதேவி ரத்தினசாமியின் “16 வயதினிலே” – நூல் அறிமுகம்

“16 வயதினிலே” பதின்பருவ சிக்கல்கள் குறித்த உரையாடல் – நூல் அறிமுகம்

எனக்கு எல்லாம் தெரியும் என்ற *விடலை* பருவத்தினரின் நினைப்பிருக்கும்…
உனக்கு ஒன்னும் தெரியாது என்ற *சமூகத்தின்* குற்றச்சாட்டுகளுக்கும் இடையேயான புரிதலற்ற நிலைப்பாடு பற்றிய விளக்கம் தரும் அருமையான நூல் இது.

ஒவ்வொரு மனிதரும் இந்த பருவ வயதை தாண்டி வந்திருப்போம் தான் . நம் காலகட்ட சூழல் வேறு, தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் வளரும் குழந்தைகளின் சூழல் வேறு….
இதை நாம் எவ்வாறு கையாள போகிறோம் என்பதை பற்றியதுதான்
*16 வயதினிலே*…

இதை 40 வயதில் படிக்கும் பொழுது நிறைய புரிதல்கள் கிடைக்கிறது. ஆமாம் ஆமாம் என்று உள்ளுக்குள்ளும் சத்தமும் கேட்கிறது.
உடல் சார்ந்த குழப்பத்தில் இருக்கும் விடலைப் பருவத்தினருக்கு *ஆரோக்கியமே அழகு* என்ற கருத்தை முதலில் ஆழப்புரிய வைக்க வேண்டும்.

தன் உடல் தனக்கு மட்டுமே உரிமையுடையது!… என்பதையும் *நல்ல தொடுகை*…
*கெட்ட தொடுகை*…
குறித்து விழிப்புணர்வு நிச்சயம் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும்.

தனக்கு பிடிக்காததை மறுக்கவும் அது குறித்து பெற்றோர்களிடம் வெளிப்படையாக பேசவும் ஊக்குவிக்க வேண்டும். பருவ வயதுக் குழந்தைகள் பெரும்பாலும் Terrific teen ஆக பெற்றோர்களுக்கு கண்ணுக்கு படுவார்கள். ஆனால் அது உண்மையல்ல !!
அவர்கள் Talented teen என முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஊக்க பானங்களால் நம் குழந்தைகளை வளர்ப்பது மட்டுமல்ல நம் வேலை… உற்சாகமூட்டி, திறனை வெளிக்கொணர்ந்து அறிவை வளர்த்தலும் நம் தலையாய கடனே..
என்று *ஆளும் வளரனும் அறிவும் வளரனும்* என்ற அத்தியாயத்தில் பதிவிட்டுள்ளார்.

துள்ளும் நிலைமையில் சுதந்திர பட்டமாய் வானில் பறக்க பருவ வயதினர் துடித்தாலும் பட்டத்து நூலை நமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து அவர்கள் பறக்க வேண்டிய திசையை தீர்மானிப்பதும் அவர்களுக்கும் அவர்களால் பிறருக்கும் எந்தவித தீங்கும் ஏற்படாமல் கண்காணிப்பதும் பெற்றோராய், ஆசிரியராய் நமது கடமை மட்டுமல்ல உரிமையும் கூட.
ஏனெனில் வளரிளம் பருவ மனதில் புயலும் எரிமலையும் சுழன்றடிக்கும் .
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வது ஒரு நிலையாகவும் வீட்டில் யாரோடும் பேசாமல் தனித்து நின்று வெறுத்து நோகுவது மற்றொரு நிலையாகவும் இருக்கும் பருவம் .இதை சிறப்பாக ஆளுமை செய்வதற்கான செய்திகளை ஆசிரியர் பதிவிட்டிருக்கிறார்.

*மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா* என ஆசிரியர் சொன்னது போல அந்த பாடல் நினைவுக்கு வருகிறது.
இந்த 16 வயதில் பிடிவாதமும் எதிர்த்து பேசுதலும் இயல்பாய் மாறுகிறது.
அறிவுரைகள் கூறும் அம்மாக்கள் வில்லியாக மாற உயிர்த்தோழிகள் உலகமாகிறார்கள் !!
வெற்றி பெற்றால் குதியாட்டம் போடுவதும் தோல்வியால் அழுவதுமான உணர்ச்சி பிழம்பாய் மாறுகிற விடலை வயதை நீரோடை போல நாம்தான் தெளிவாக்க வேண்டும்.

அவர்கள் உணர்வு சிக்கலில் மரபணுவும் முக்கிய பங்காற்றுகிறது.

அம்மையப்பனே உலகமென வளைய வந்தவர்கள் இப்போது என் *ஃபிரண்டை போல யாரு மச்சான்* என்ன கேட்க தொடங்கி விடுவார்கள்.

ஹீரோ அந்தஸ்திலிருந்து தந்தை எஸ்கலேட்டரையில் ராதாரவி போல் கீழிஇறங்க, நண்பர் ரஜினி போல் மற்றொரு எஸ்கலேட்டர் மனசுக்குள் மேலே ஏறிக் கொண்டிருக்கிறார்கள்.

தாங்கள் ராஜாவாக இல்லாவிட்டாலும் தன் பெண் குழந்தையை இளவரசியாக வளர்க்க விரும்பும் அப்பாக்கள் தங்கள் இயல்பை மாற்றிக் கொள்ள வேண்டிய தருணம் இது என *மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப்பா* என்ற தலைப்பில் பதிய வைத்துள்ளார் .
எங்கோ இருந்து கொண்டு டிஜிட்டல் தலை காட்டும் இன்ஸ்டன்ட் நடிகர்கள் முன்மாதிரியாக கொள்வதை விடுத்து, ரத்தமும் சதையுமாய் கண்முன் வரும் அப்பாவை ,அம்மாவை அண்ணனை, சித்தப்பாவை, அண்ணியை, முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளும் அளவுக்கு ஆரோக்கியமான குடும்பத்துடன் அமைத்துக் கொடுக்க வேண்டும் அதுதான் இந்த வயதினருக்கு தேவையான அருமருந்து…

*பதின்பருவ வலிகளும் வழிகளும்* என வழிகாட்டி இருக்கும் 16 வயதினிலே புத்தகத்தை வாசிக்க பரிந்துரைக்கும்….

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: 16 வயதினிலே
ஆசிரியர்: ரமாதேவி ரத்தினசாமி
வெளியீடு:
பாரதி புத்தகாலயம்
விலை: ₹.30
அறிமுகம் எழுதியவர்:  
யாழ்.மாரி, கும்பகோணம்

******************************************************************************

புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு

2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை  49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது.  ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும்  ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும்,  புத்தக கண்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று மாலை 5.30 மணியளவில் நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும்.  இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன், உமர் பாரூக் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை  https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *