ரமாகாந்த் ரத் கவிதைகள் – மொழிபெயர்ப்பு வசந்ததீபன்
அவரவர் வழி
*****************
இந்தத் தேநீருக்கும் பிறகு
போவாய் நீ உன்னுடைய வீடு
தலை மீது முந்தானை போட்டு
இழுத்தபடி உனது உடல்
அம்மா அல்லது பாட்டியாக்க.
இந்த தேநீருக்குப் பிறகு
நான் திரும்பிப் போவேன்
எனது அலுவலகம்
ஃபைல்களில் எடுப்பேன் பல நிச்சயித்தல்
ஏற்படாமலிருக்கலாம் அவற்றில்
ஏதோவொரு விஷயத்தை மாற்றுவது அல்லது
அந்த சில மாறிக் கொண்டிருக்கிறது
அவற்றை நிறுத்துவதில் உயிர் மூச்சு.
இந்த வாழ்விற்குப் பிறகு
என்னுடைய நுரையீரல் கேன்சரால்
என்னுடைய மரணம் ஏற்பட்ட பிறகு
அதன் சில நாட்களுக்கு முன்னால் அல்லது
பிற்பாடு
கண்கள் முத்தமிடுவதில்
இருளின் கடலாகலாம்
நாம் அதில்
சின்னஞ்சிறு மீன்களைப் போல
எங்கேயாவது வாழ்ந்து கொண்டிருக்கலாம்
சமுத்திரத்தில் எங்கே நான் இருப்பேன்
அங்கே உன்னுடைய அழகு
மறுபடி தோன்றும்
நீ இருக்கும் இடத்தின்
கறுப்பு சுவர்கள் சரிந்துபோகும்,
தாரின் சூட்டில் எனது ஞாபகசக்தி
மிதந்து போய் நிற்கும்
பிரிவின் தொலைவில்
எல்லையோர கிராமத்தில்
இந்த தேநீருக்குப் பிறகு
இந்த வாழ்விற்குப் பிறகு
உலகின் வளைந்த சாலைகளில்
மற்றும் அழுக்கான வீடுகளில்
கோடிக்கணக்கான மக்களின் குடியிருப்புகள்
வாழ்வது மற்றும் இறப்பிற்குப் பிறகு
என்ன கேட்கப்படுகிறதா?
என்ன காணப்படுகிறதா?
முடிந்த துன்பியல் நாடகத்தின்
இறுதிக் காட்சியில்
நாயகன் நாயகியின் உரையாடல்
மற்றும்
சாத்தியமற்ற குளிர் காலத்தின் அதிகாலையில்
கண்ணீரால் முழுதும் நனைந்த
ஒரு நீலஅல்லி குளத்தில்.

மரணத்தின் முகத்திலிருந்து
*********************************
அமைதி ஏன் ஏற்பட்டது?
கணக்கற்ற நட்சத்திரங்களைப் பார்த்து
ஏன் என்னுடைய வாயிலிருந்து வெடித்த பேச்சில்லை
மலையின் அடிவாரத்தின் வழியே செல்லுகிற நேரம்
மலையோடு ஒன்றிப்போவதின்
அபிலாசைகள் புரியாமல் நான் ஏன்
வெறுமனே அதன் வலிமை நோக்கி வாழ்கிறேன்?
அப்படித்தான் ஏதாவது வந்து கொண்டு இருக்கிறது
கத்தி, வாள், ஈட்டி அல்லது பிஸ்டலுக்காக
என்னைக் கொலை செய்வது
நான் அது போல மெளனம், பயம் போல
ஒளிக்கிறேன் எனது உணர்வு
ஏற்றுக் கொள் உண்மையில் பின்னே பின்னே

போய்க் கொண்டிருக்கிறேன்
பிறந்ததிலிருந்து முன் காலத்தில்
அடைந்து பார்ப்பேன் எனது முழு கடந்த
காட்சி போல வைத்துக் கொண்டிருக்கிறது முன்னே
அந்தக் காட்சியிலிருந்து
எனது கையால் செய்த
மற்றொரு எதிர் காலத்தின் பக்கம் இச்சையின்படி
போகக் கிடைத்தால் நல்லது ஏன்
இன்று இருக்கிற நீ காலையிலிருந்து காலை வரை
தூண்டுதல்கள் தற்கொலைக்காக?
ஆன்மாவின் நீர்வாழ் பேச்சு

இயலாமையில்
பிரதிபிம்பம் தொட முடியுமானால் நான் உன்னை
இழுக்கிறேன் எனது குழந்தைப் பருவத்திலிருந்து தூரம்
இன்றைய ஆயுட்காலம் பச்சதாபத்தில்
ஆனால் விசாரிக்கிறது என்ன?
என் மூலமாகவே என்னை
தாமதமின்றி நச்சரிக்கிறது
உனக்காக நோக்கம் ஒவ்வொரு இகழ்ச்சியில்
என்னுடைய முழு வரலாறு வர்ணனை செய்கின்றது
இன்று உன்னுடையதும் என்னுடையதும் இவ்வளவு தான் உறவு இருக்கிறது
நான் தலைமறைவு புரட்சிக்காரன் மற்றும் அதற்குப் பிறகு கைதி
அடிமையாக இருக்கிறேன், உனக்கு முன்பாக
சிறிதும் விலகுவது என்னுடைய வலிமையிலிருந்து அப்பால் இருக்கிறது
நீ என்னுடைய
அதிகார உரிமையுடையவள்
அதிகமாக இம்ஸித்தே போவாய்
உனது இரக்கத்தை பிச்சை கேட்காதவரை
கேள் கேள் ( நான் சொல்ல முடியும் அல்லது சொல்ல முடியாது) ,
இப்போது கை குவித்து நிற்கமாட்டேன்
உறுதியான பிரதிக்ஞை செய்து இருக்கிறேன் நான்
உனது இரக்கத்தின் காரணமாக
எது கொஞ்சம் குறைந்து முடிந்திருக்கிறது அது எப்போதும் மறுபடி
தேய்வதில்லை தனியாக.
நீ நினைக்கிறாய் என்று அடம் பிடிப்பாயானால் இந்த முறை
இப்போதோ அந்த நேரமும் கழிந்து போயிருக்கிறது
அதே சமயம் இந்த நாட்கள் உன்னுடைய முகம்
சாந்தமும் புன்னகையும் நிரம்பி இருக்கிறது
இருந்தும் உன் மீது வெறுப்பு எனக்குக் குறையாமலிருக்கலாம்
இந்த உருவம் இருந்ததாலோ என்னுடைய நிகழ் காலம் அதை
முழுமையும் வீணாயிருப்பது வரை ரகசியமாக ஏன் வைத்தது?

ஸ்ரீ ராதா
***********
நீ வந்து இருக்கிறாய் தெரிந்து விட்டது
அதற்குள் நாள் முடிந்து போய் இருந்தது
பசுத் தொழுவம்
எப்போதிருந்து திறந்து இருந்தது
அதிகமாக மனிதன் போய் இருந்தான்
வேலையில், பெண்கள் வழங்கிக்
கொண்டிருந்தனர் குளிப்பதற்குப் பள்ளத்தாக்கு போவதற்கு
தெரியவில்லை ஏன் நன்றாக மெளனம்
இருந்தனர் எல்லா ஆண்களும்
பெண்களும் அர்த்தமற்றுத் தாமதமாக ஆக்கிக் கொண்டிருந்தார்கள்
பாதை சுற்றியலைந்து வந்திருந்தனர்
பாதை சுற்றியலைந்து போய் இதை அறிந்தும்
எப்படிப் போவார்கள் இங்கே தான் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்,
உண்மை ஏற்றுக் கொள் உன்னுடைய வருகையின் செய்தி
கேட்பதற்கு முன்பு மிகவும் தெளிவற்று
நீ வந்து இருக்கிறாய் இது அறியப்பட்டு இருந்தது
அந்த நாள் காலையிலிருந்து நதி மற்றும் கரையின் மணல்
மரம் செடிகள் ஆகாசம் _ மலை _
சில மற்றவைளை காட்டி, உண்மை ஏற்றுக் கொள் அவைகள்
அமைந்து இருக்கின்றன ஏதாவதொரு எதிர்காலத்தில்
எங்ககோ தடுமாறுகின்றன _
தடுமாற்றத்தில் போகின்றவையின் இன்னல்கள் அழிந்து போகின்றன
எங்ககோ ஓய்வின், மறு சந்திப்பின்
ஒளிரும் சுகம் வாழ்கிறது
அந்த நாள் காலை, நான் நதியில் குளிக்கும் நேரம்
தண்ணீரில் பார்த்தோம் எங்களது பாதங்கள்
தொடர்ந்தது , இந்த பாதங்கள் என்னுடைய பாதங்கள் இல்லை,
இந்த உடல் என்னுடையது இல்லை
எதுவும் என்னுடையது இல்லை
கணவன், வீடு வாசல்
பசுக்களின் கூட்டம், எதுவும் இல்லை என்னுடையது
இந்த உயிர் என்னுடையது இல்லையானால்
மரணமும் என்னுடையது இல்லை
நான் என்றென்றும் பசிப்பிணியால் வாடுகிற
விண்வெளி வரை
விரிகிறது என்னுடைய இரண்டு எல்லையில்லா தோள்களில்
நான் கடுமையான இடமாக இருக்கிறேன்
சூன்ய இடமாக இருந்து போவது மட்டும்
யாரோ ஒருவரின் விதியில் இருக்கிறது.

இந்த நதிக்கரையில்
**************************
இந்தப் பள்ளத்தாக்கின் இருளில்

சாலை கரைகளில் குவியலாய் பூக்கள் உதிர்ந்து போகும்,
ஆகையால் நீ அவசியம் வா.
நான் உன்னைத் தொடுவேன்,
மேகம் வெடித்து மழையாகிறது
அப்போது வருவது நீ என்னருகே,
நான் உன்னுடைய காதுகளில்
எனது துக்கத்தின் நூற்றாண்டுகளின் செய்திகளைச் சொல்வேன்
தேவிகளுக்குப் புரியும் மொழியில்.

ஹிந்தியில் : ரமாகாந்த் ரத் ( ஒரியா கவிஞர்)
தமிழில் : வசந்ததீபன்

ரமாகாந்த் ரத்
இவர் கட்டாக் (ஒரிசா) எனும் நகரில் 13 , டிசம்பர் 1934 ல் பிறந்தார். தனது முதுகலை (இலக்கியம்) கல்வியை ராவண்ஷா கல்லூரி (ஒரு) யில் படித்து விட்டு இந்திய ஆளுமைப் பணியில் 1957 ல் சேர்ந்து ஒரிசா அரசின் தலைமை செயலர் பதவியில் பணி செய்து ஓய்வு பெற்றார். மத்திய அரசில் பல முக்கிய பதவிகளை வகித்தார். 1977 ல் சாஹித்ய அகாதமி விருது பெற்றார். 1992 ல் சரஸ்வதி ஸம்மான் , 1990 ல் பிஸ்ஸூவா ஸம்மான் மற்றும் மூன்றாவது உயர் குடிமகன் மரியாதை பெற்றார். 2006 ல் பத்மபூஷன் விருது பெற்றார். 1993 முதல் 1998 வரை துணைத் தலைவராகவும், 1998 முதல் 2003 வரை தலைவராகவும் சாஹித்ய அகாதமி _ புதுதில்லியில் பதவி வகித்தார். பிப்ரவரி 2009 ல் இவருக்கு சாஹித்ய அகாதமியின் ஃபெல்லோஷிப் மத்திய அகாதமியில் வழங்கப்பட்டு 5 வது ஒரியக் கவிஞராக கெளரவிக்கப்பட்டார். இவரது கவிதைகள் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.