வான நிழல் – ஹிந்தியில்: ராம்ரதன் அவஸ்தி | தமிழில்: வசந்த தீபன்

Writer Ramratan Awasthi Hindi Poetry Translated Poet Vasanthadeepan in Tamil. Book Day is Branch of Bharathi Puthakalayam.வான நிழல்
————

நீர் அலைகளில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது படகு
வாழ்க்கையை விடவும் பெரியதாக இருக்கிறது வான நிழல்.

ஆகாயம், நட்சத்திரம்…. நினைக்கிறாய்,

பறித்துக் கொண்டு வருவாயா?

நிலவொளி சிதற முடியுமா?

பூமியின் மீது எல்லா இடங்களிலும்….
ஆனால்

திரிசங்கு சொர்க்கம் , அந்தரத்தில் ஆடுகிறது ஏன்?
கிளையிலிருந்து முடிந்து போனது, ஏதோவொரு நிர்பந்தமான குரங்கு என.

நகரத்தைப் பெற வேண்டும் என்ற பேராசையில்

கைவிடப்பட்டது கிராமம்
வாழ்க்கையை விடவும் பெரியதாக இருக்கிறது வான நிழல்.

‘நான் நான் அல்ல’ ஆனால் நீயும் ‘நீ’ அல்ல
மனிதத்தன்மையின் பகட்டில், தொலைந்து போனது வால்
விஷயம் கசப்பானது, ஆனால் புரிந்து கொள் அது உண்மை,

யுத்தம் செய்வது உன்னுடையது,

உன் வயது பக்குவப்படாமல்.
எங்கே அடைக்கலத்தைத்

தேடிப் பெறுவாய் ?
வாழ்க்கையை விடவும் பெரியதாக இருக்கிறது, வான நிழல்.

பாதைகள் எண்ணற்றவை, ஆனால் இலக்கு எப்போதும் ஒன்றாகும்
அந்த இடத்தை அடைந்து , எது தீரமுள்ள மற்றும் நல்லதாக இருக்கிறது
மக்கள் சிலர், ஒப்புக் கொள்கிறார்கள், சுயமாக காரியங்கள் செய்பவர்,
தடை எப்படி தோற்க முடியும்? , எதிர்ப்புகளை அபகரிப்பவன் ?
வீணாகிப் போகும், சகுனி போன்று சூதாட்டத்தில் கொட்டிய

உன்னுடைய பணம்
வாழ்க்கையை விடவும் பெரியதாக இருக்கிறது, வான நிழல்.

ஹிந்தியில் : ராம்ரதன் அவஸ்தி
தமிழில் : வசந்த தீபன்இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.