ரத்திகா கவிதைதேசம் இப்போது ஒரு கண்ணாடித்தொட்டி
மக்கள் மீன்கள்
கண்ணாடித்தொட்டியைப் பாதுகாக்க
ஒரு தலைவன்…

கண்ணாடித்தொட்டியின்
நீர்மட்டம் குறைகிறது
மீன்கள் உயிர்வாயுவிற்காகப் போராடுகின்றன
‘துளி உயிர்வாயு…
துளி உயிர்வாயு…
துளி உயிர்வாயு….
நாங்கள் பிழைத்துக் கொள்வோம்…’

தலைவன்
கண்ணாடித் தொட்டியைக் காலால் தள்ளி உதைக்கிறான்
‘இனி உயிர்வாயுவிற்குப் பஞ்சமில்லை
எவ்வளவு வேண்டுமானாலும்
எடுத்துக் கொள்ளுங்கள்
நான் வள்ளல்
நான் தயாளன் …

தரையில் விழுந்த மீன்கள்
துள்ளுகின்றன
துடிக்கின்றன
மெல்ல மெல்ல
ஒவ்வொன்றாய் அடங்குகின்றன…

மீன்கள் விரைத்து வெகுநேரமாயிற்று
இனி
அவைகளுக்கு தேவையேதுமில்லை
மயானமும் கூட

தலைவன் தன் சொற்பொழிவை
இன்னும் நிறுத்தவில்லை
நான் ஏழைத்தாயின் …

ரத்திகா

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)