பிரயன் பில்ஸ்டன் எழுதிய ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கம் | ஏதிலிகள் - ஒரு தலைகீழ் பார்வை | தமிழ் கவிதைகள் - Tamil Kavithai

பிரயன் பில்ஸ்டன் எழுதிய ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கம்:- ஏதிலிகள் – ஒரு தலைகீழ் பார்வை

ஏதிலிகள் – ஒரு தலைகீழ் பார்வை

(பிரயன் பில்ஸ்டன் என்கிற கவிஞரின் ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கம்)

அவர்களுக்கு நமது உதவி தேவையில்லை.
வாழ்க்கை வேறுவிதமாக நிர்ணயித்திருந்தால்
இந்த சோக முகங்கள்
நமதாகவும் இருந்திருக்கலாம்
என்று சொல்லாதீர்கள்.
அவர்கள் உண்மையாக யாரென்று பார்க்க வேண்டும்.
சந்தர்ப்பவாதிகள், ஒட்டுண்ணிகள்,
சோம்பேறிகள், சுகபோகிகள்
ரகசியமாய் குண்டு வைத்திருப்பவர்கள்.
கழுத்தறுப்பவர்கள், திருடர்கள்.
அவர்களை நம் வரவேற்க இயலாது.
அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ
அங்கே செல்ல வைக்க வேண்டும்.
அவர்கள்
நமது உணவை பங்கிட முடியாது.
நமது இல்லங்களை பகிர இயலாது
நமது நாட்டில் பங்கெடுக்க முடியாது.
மாறாக,
அவர்களை புறத்தே வைக்க
ஒரு சுவரெழுப்புவோம்.
அவர்களும் நம்மைப் போன்ற மக்கள்தான்
என்று சொல்வது சரியல்ல.
ஒரு இடம்
அங்கே பிறந்தவர்களுக்கு மட்டுமே
சொந்தமாக இருக்க வேண்டும்.
உலகை வேறு விதமாக பார்க்கலாம்
என்று சிந்திக்கும் அளவிற்கு
முட்டாளாக இருக்காதே.

************

இவ்வளவு பிற்போக்குத்தனமான கவிதையா என்று கோபப்படாதீர்கள். இதை எழுதிய கவிஞர் தன்னுடைய ஆங்கிலக் கவிதையை கீழிருந்து மேலாக படிக்க சொல்கிறார். அப்படி படிக்கும்போது எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்று பாருங்கள்.

உலகை இன்னொரு விதமாகவும் பார்க்கலாம்.
அங்கே பிறந்தவர்களுக்கு மட்டும்தான்
அந்த இடம் சொந்தம் என்று சிந்திக்கும் அளவிற்கு
முட்டாளாக இருக்காதே.
இவர்கள் நம்மைப் போன்ற மனிதர்கள்தான்.
ஒரு சுவரெழுப்பி அவர்களை புறந்தள்ளு
என்று சொல்வது சரியாக இருக்காது.
மாறாக
நமது நாட்டை
நமது வீட்டை
நமது உணவை
அவர்களுடன் பகிர்ந்து கொள்வோம்.
எங்கிருந்து வந்தார்களோ
அங்கே அவர்களால் திரும்பப் போக முடியாது
நாம் அவர்களை இங்கே வரவேற்போம்.

அவர்கள்
கழுத்தறுப்பவர்களோ, திருடர்களோ
ரகசியமாக குண்டு வைத்திருப்பவர்களோ
சோம்பேறிகளோ, சுகபோகிகளோ அல்லர்.
அவர்கள் உண்மையிலேயே யாரென்று பார்க்க வேண்டும்.
வாழ்க்கை வேறுவிதமாக நிர்ணயித்திருந்தால்
இந்த துயர முகங்கள் நம்முடையதாக இருக்கலாம்.
ஆகவே
அவர்களுக்கு நமது உதவி தேவையில்லைஎன்று
என்று சொல்லாதீர்கள்.

******************************

பிரயன் பில்ஸ்டன் எழுதிய ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கம் | ஏதிலிகள் - ஒரு தலைகீழ் பார்வை | தமிழ் கவிதைகள் - Tamil Kavithai
Refugees

They have no need of our help
So do not tell me
These haggard faces could belong to you or me
Should life have dealt a different hand

We need to see them for who they really are
Chancers and scroungers
Layabouts and loungers
With bombs up their sleeves
Cut-throats and thieves

They are not

Welcome here
We should make them
Go back to where they came from
They cannot

Share our food
Share our homes
Share our countries

Instead let us

Build a wall to keep them out
It is not okay to say
These are people just like us

A place should only belong to those who are born there
Do not be so stupid to think that
The world can be looked at another way
(now read from bottom to top)

1970இல் பிறந்த ஆங்கிலக் கவிஞர் பால் மில்லிசீப், பிரயன் பில்ஸ்டன் என்கிற பெயரில் எழுதுகிறார். குறுகிய வரிகளில் நறுக்கு தெறித்தாற்போல் அதே சமயம் நகைச்சுவையாகவும் சமூக ஊடகங்களில் கவிதைகளை பதிவு செய்கிறார். அவற்றிற்கு நான்கு இலட்சம் பார்வையாளர்கள் உள்ளனராம். டுவிட்டரின் அரசவைக் கவிஞர் என வர்ணிக்கப்படுகிறார். பிரிவினைவாதம் தலை தூக்கியிருக்கும் இந்த காலத்தின் சிறந்த கவிஞராக கூறப்படுகிறார். மூன்று கவிதை தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். ‘அகதிகள்’ எனப்படும் இந்த தொகுப்பு சிறார்களுக்கான ஓவியப் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. கால்பந்து குறித்த அவரது ஒரு கவிதைப் புத்தகம் வெளிவந்துள்ளது.

பல விருதுகளின் குறும் பட்டியலில் அவர் நூல்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு நேர் காணலில் ‘குழந்தைகளுக்காக எழுதும்போது எல்லா தளைகளையும் களைந்து விடலாம். ஒரு குறிப்பிட்ட வகைமையை சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. அடிப்படையில் குழந்தைகள் பெரியவர்களை விட அதிக கற்பனையும் ஏற்பு தன்மையும் கொண்டவர்கள். அவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை கொண்டிருக்கிறார்கள்’ என்கிறார்.(விக்கிபீடியா)

எழுதியவர்:

இரா.இரமணன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *