நூல் அறிமுகம்: சுப்ரபாரதிமணியன் “ரேகை நாவல்”- மதுராந்தகன்

நூல் அறிமுகம்: சுப்ரபாரதிமணியன் “ரேகை நாவல்”- மதுராந்தகன்



 மனித இனம் தோன்றியது முதல் ஆண்-பெண் கைகளில் மூன்று ரேகைகள் இருந்தே தீரும் , ஆயுள் ரேகை புத்தி ரேகை இருதய ரேகை என்று  பெயரிட்டுள்ளார்கள்.vaவளர வளர்  கைகளில் அவரவர் எண்ணத்த்திற்கேற்ப புதிதாகத் தோன்றும். கைரேகை சாஸ்திரம் நன்கு படித்தவர்கள் இந்த ரேகைகளைக் குணாம்சத்தை மிகச்சரியாக கூறுவார்கள். அது ஏறக்குறைய சொன்னபடி நடக்கும்.பலருக்கு நம்பிக்கை உண்டு. இண்றூ இது பெரிய வியாபாரம்

 இந்த நாவலைப் பொறுத்தவரை ஒரு கிராமத்தில் வாழுகின்ற பலதரப்பட்ட மனிதர்களின் குணாம்சங்களை யதார்த்தமாக சுப்ரபாரதி மணியன் அவர்கள் எழுதி இருப்பது அருமை நிறைய .மனிதர்கள் வாழ்ந்த கிராமம் காலப்போக்கில் கரைந்து கொஞ்சம் கொஞ்சம் குடும்பங்கள் சிதறிப்போக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இதை மிக இயல்பான எழுதியிருக்கிறார் .இந்த கிராமத்து மனிதர்கள் இயல்பாக பேசிக்கொள்வது பாராட்டுக்குரியது. குறைவான குடும்ப அளவில்  வாழும் கைத்தறி நெசவாளர்கள் சப்பரம் எடுப்பதில் தகராறு செய்வதும் பிறகு அவர்களை சமாதானம் பேசி தீர்வு காண்பதும் நல்ல முடிவு. சில குடும்பங்கள் ஜோதிடத்தை தொழிலாக கொண்டு வாழ்கிறார்கள். ராசியுள்ள ஜோதிடராக சிலரும் வெளியூர் சென்று ஜோதிடம் சொல்கிறவர்களும் ஆற்றிலே படத்திற்காக அந்த ஊர் மக்கள் பேசிக் கொள்வது இயல்பாக உள்ளது விபச்சாரத்தை தொழிலாக கொண்டு வாழ்கின்ற பரமேஸ்வரி.குடிகார கணவனை நம்பாமல் குழந்தைகளை படிக்க வைக்க வீட்டு வேலை செய்பவர் .குறும்படம் எடுக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு உலகம் இளைஞன் என பலதரப்பட்ட மனிதர்களை நம் கண்முன்னே உலவ விடுகிறார் பரவாயில்லை என்ற படி பலர்.

மானுட விடுதலை: நூல் வெளியீட்டு அரங்கு

ஒருவகையில்  வெளிப்பாட்டில் பின்நவீனத்துவ நாவல் என்பதால் சற்று குழப்பமடைய செல்கின்றது. ஆனாலும்  சரியாக விளங்கிக் கொண்டால் இந்த நாவலின் மையத்தை அறிந்து கொள்வார்கள் வாசகர்கள். நாவலின் இடையிடையே திரைப்படங்களை ஞாபகமூட்டும் அரசியல் தலைவர்களைப் பற்றி நினைவூட்டல். மிகவும் அருமை. பொதுவாக இந்த நாவல் ஒரு நல்ல திரைப்படம் எடுக்கின்ற அளவுக்கு கதையோட்டம் இருப்பதால் தாராளமாக எடுக்கலாம் சுவாரசியமாக இந்த நாவல் திரைப்படமாக ஆனாலும் வெற்றி பெறும் வெற்றி பெறும் இந்த எதார்த்த நாவலை அதன் வேறு வெளிப்பாட்டு  படைத்த சுப்பிரபாரதி மணியனுக்கு பாராட்டுக்கள்.

ஜோசியம் பார்க்க்கும் குடும்ப மனிதர்களின் வாழ்வியலோடு பல  குடும்பக்களின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல். பல பரிமாணங்களைக் கொண்டது. ஜோசியம் , கடவுள் போன்ற கட்டமைவுகள் பற்றிக் கட்டுடைத்தல் படைப்புகளில் சுப்ரபாரதிமணீயன் எப்போதும் அக்கறை செலுத்துவார். மெல்லச்சிரித்தபடி அவற்றை நான் அங்கீகாரம் செய்வேன்.



 (ரூ.130/ பொன்னுலகம் பதிப்பகம் திருப்பூர்)

மதுராந்தகன்

முகவரி: 8/.33 94, பாண்டியன் நகர் வடக்கு

தாய்த்தமிழ்ப் பள்ளி அருகில்,  திருப்பூர் 641 602.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *