இந்திய விஞ்ஞானி தப்பாலா ராஜகோபால் (Renowned Robotics and Artificial Intelligence Scientist Dabbala Rajagopal @ Raj Reddy)

 இந்தியாவின் புகழ்பெற்ற ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறை விஞ்ஞானி தப்பாலா ராஜகோபால்!

 இந்தியாவின் புகழ்பெற்ற ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறை விஞ்ஞானி தப்பாலா ராஜகோபால் (Dabbala Rajagopal @ Raj Reddy)
தொடர் 89: இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

தப்பாலா ராஜகோபால் ரெட்டி என்றும் ராஜ் ரெட்டி என்றும் அறியப்படும் விஞ்ஞானி தப்பாலா ராஜகோபால் (Dabbala Rajagopal @ Raj Reddy) அலன் டூரிங் விருது பெற்ற இந்திய சேர்க்கை நுண்ணறிவின் ஆரம்ப முன்னோடிகளில் ஒருவர். இந்தியாவில் ராஜிவ் காந்தி அறிவு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நிறுவன தலைவராகவும் இருந்தார். தற்போது ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கார்னகி மெலன் ஏனும் உயர்ந்த தலைமை ஆய்வு பணிகளில் ரோபோட்டிக்ஸ் துறையில் இயக்குனராக இருக்கிறார்.

விஞ்ஞானி ராஜகோபால் சார்ந்திருக்கும் துறை ரோபோட்டிக்ஸ் துறை ஆகும். 1937 ஆம் ஆண்டு சென்னையில் காட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர் அவர். கிண்டியிலுள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் தொடங்கிய அவரது கல்வி ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்திலும்மாக அமைந்தது. அவரை பொறுத்தவரையில் மூன்று மிக முக்கியமான கண்டுபிடிப்புகளின் சொந்தக்காரர்.

இந்திய விஞ்ஞானி தப்பாலா ராஜகோபால் (Renowned Robotics and Artificial Intelligence Scientist Dabbala Rajagopal @ Raj Reddy)

டேட்டா செயன்ஸ் என்று தற்போது அழைக்கப்படும் பிக் டேட்டா துறையில் கோவிட் 19 காலத்தில் உலக அளவிலான பல்வேறு தரவுகளை கண்காணிக்கின்ற ஒரு முக்கிய சென்சார் அமைப்பை கண்டுபிடித்து வழங்கினார் விஞ்ஞானி தப்பாலா ராஜகோபால் (Dabbala Rajagopal @ Raj Reddy). இவருடைய பிக் டேட்டா துறையின் இரண்டு கோட்பாடுகள் உலகெங்கிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. கணினி அறிவியலில் SPEECH RECOGNITION என்கிற ஒருவருடைய குரலை சென்சார் கருவி தானே கண்டுபிடித்து கட்டளைகளை ஏற்கிற தரவு இவரால் கணினி யுகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது செயற்கை நுண்ணறிவு துறையில் இவருடைய பங்களிப்பை பறைசாற்றுகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துறையில் பல்வேறு கண்டுபிடிப்புகளை தொடர்ந்து அவர் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்

கரும்பலகை மாதிரி என்று அழைக்கப்படுகின்ற BLACK BOARD MODEL வகையைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு கற்றல் கற்பித்தல் சாளரத்தின் கண்டுபிடிப்பாளர்களில் இவரும் ஒருவர்.

இவருடைய பங்களிப்புகளிலேயே மிகவும் போற்றப்படுவது ரோபோட்டிக்ஸ் துறையில் இவர் அடைந்திருக்கும் உச்சகட்ட சாதனை ஆகும். ரோபோட்டிக்ஸ் என்பது ரோபோட் என்றழைக்கப்படும் மனிதர்களை போன்ற இயந்திரங்களின் வடிவமைப்பு கட்டுமானம் செயல்பாடு மற்றும் பயன்பாடு ஆகியவற்றின் ஒரு கூட்டுக் கலவை ஆய்வுத்துறை. இயந்திர பொறியியலில்.. ரோபோட்டிக்ஸ் என்பது ரோபோக்களின் இயற்பியல் கட்டமைப்பு வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் குறித்த கல்வியாகும். கணினி அறிவியலில் ரோபோட்டிக்ஸ் என்பது ரோபோட்டிக் ஆட்டோமேஷன் அல்காரிதம் குறித்த தனி துறையாக விளங்குகிறது. மனிதர்களுக்கு உதவக்கூடிய இயந்திரங்களை வடிவமைப்பது ரோபோட்டிக்ஸ் என்னும் துறையின குறிக்கோள்.

அதிலும் குறிப்பாக குறிப்பிட்ட பணிகளுக்காக தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்படும் ரோபோ வடிவமைப்பு என்பது விஞ்ஞானி ராஜகோபாலின் தனி சிறப்பு. இவை ஹெவி ட்யூட்டீ ரோபோட்கள் என்று அழைக்கப்படுகின்றன. அசெம்ப்ளி ரோபோக்கள் என்கின்ற வகையை சார்ந்த இவை மனிதனுக்கு மிக கடினமாக இருக்கும் வெல்டிங் துறையிலும் நுணுக்கமான அறுவை சிகிச்சைகளிலும் பயன்படுகின்றன. ரோபோட்டிக் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் எனும் அமெரிக்க நிறுவனத்தின் தரவுகளின்படி இன்று உலகில் இயங்கிக்கொண்டிருக்கும் ரோபோட்களில் 12 சதவிகித ரோபோட்டுகளை உருவாக்கியதிலோ அல்லது அதன் பயன்பாட்டிலோ தொடர்புடையவர் விஞ்ஞானி தப்பாலா ராஜகோபால் (Dabbala Rajagopal @ Raj Reddy).

இந்திய விஞ்ஞானி தப்பாலா ராஜகோபால் (Renowned Robotics and Artificial Intelligence Scientist Dabbala Rajagopal @ Raj Reddy)

தற்போது விமானம் தன்னியக்க பைலட் மற்றும் ஓட்டுநர் அல்லாத நான்கு சக்கர வாகனங்கள் தன்னாட்சி போக்குவரத்து என்னும் துறையில் அறிமுகமாகி உள்ளன. சமீபத்தில் இந்தியன் ரயில்வே ஓட்டுநர் இல்லாத ரயில்களை ரோபோட்டிக் முறையில் இயக்கி பார்த்து இருக்கிறது. இந்த முக்கியமான கண்டுபிடிப்பின் பின்னணியில் ராஜகோபால் அவர்கள் வழங்கிய நேவிகேஷன் ரோபோ குறித்த ஆட்டோமேஷன் கோட்பாடு உள்ளது.

மிக கடினமான தங்கம் மற்றும் கரி சுரங்கங்களில்,மனிதர்களுக்கு பதிலாக ரோபோட்களை பயன்படுத்திகின்ற தானியங்கி சுரங்க ரோபோட்டுகளை வடிவமைத்தவர் ராஜகோபால். மருத்துவ ரோபோக்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளில் உடனிருந்து உதவும் வடிவமைக்கப்பட்ட கிளினிக் ரோபோட்டுகள். துல்லிய விவசாயம் என்று அழைக்கப்படுகின்ற DRON பயன்பாட்டு விவசாய ரோபோட்டுகள் என இவருடைய கண்டுபிடிப்புகள் உலகெங்கிலும் இன்று பயன் தருவதாக உள்ளன.

தப்பாலா ராஜகோபால் இந்தியாவில் ராஜிவ் காந்தி அறிவு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை உருவாக்கி நம்முடைய நாட்டில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் துறையின் ஆய்வுகளுக்கு வித்திட்டவர். கிண்டி பொறியியல் கல்லூரியில் தன்னுடைய இளம் கலை பொறியியல் பட்டம் பெற்ற பிறகு அவர் ஒரு பயிற்சியாளராக ஆஸ்திரேலியா சென்றார். நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த பொழுதே அவர் எலெக்ட்ரிக் யூஸ் மார்க் II கணினி ஒன்றை தானே வடிவமைத்து பயன்படுத்த தொடங்கினார். 1963 ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்தார். ஜான் மெக்காத்தியின் கீழே செயற்கை நுண்ணறிவு குறித்த உலகின் முதல் முனைவர் பட்டத்தை பெற்றவர் நம் இந்தியாவின் பெருமைக்குரிய கணினி விஞ்ஞானி தப்பாலா ராஜகோபால் (Dabbala Rajagopal @ Raj Reddy).

இந்திய விஞ்ஞானி தப்பாலா ராஜகோபால் (Renowned Robotics and Artificial Intelligence Scientist Dabbala Rajagopal @ Raj Reddy)

தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும், அலெக்ஸா போன்ற தானியங்கிகள் நம்முடைய குரலை அடையாளம் கண்டு நாம் இடும் கட்டளைகளை தெளிவாக அமல்படுத்துவதை பார்க்கிறோம். இந்த கட்டமைப்பை உலகிற்கு அறிமுகம் செய்த முதன்மை விஞ்ஞானிகளில் ஒருவர் ராஜகோபால். உலகெங்கிலும் உள்ள பல செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகங்களுக்கு தொடர் விஜயங்கள் மேற்கொண்டு அங்கு செயற்கை நுண்ணறிவு துறைகளை உருவாக்குவதில் பேருதவியாக இருந்தவர். சமூகத்தின் சேவையில் தொழில்நுட்பத்தின் பங்கு என்பது குறித்த தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவர் கிராமப்புற மருத்துவ விநியோகம் கணினிமயமாக்கப்பட்ட வகுப்பறைகள் இவற்றை உலகெங்கிலும் எடுத்துச் செல்வதில் தொழில்நுட்பத்தின் பங்கை நிலைநாட்டியவர்களில் ஒருவர்.

1990 ஆம் ஆண்டு தப்பாலா ராஜகோபால், யுனிவர்சல் டிஜிட்டல் லைப்ரரி ப்ராஜெக்ட் என்கிற ஒன்றை அறிமுகம் செய்தார். இசை வீடியோ ஓவியம் புத்தகங்கள் இவையாவுமே ஆக்கபூர்வமான படைப்புகளாக ஆன்லைன் அணுகலின் மூலம் அனைவருக்கும் கிடைக்கச் செய்கின்ற முக்கியமான தரவு ஒன்றை இணையத்தில் அறிமுகம் செய்தார் ராபர்ட் தி பேடோ, கார்பனால், மைக்கல் ஷோமோஸ் ஆகியோருடன் இணைந்து. 2001 ஆம் ஆண்டு ஒரு பிரம்மாண்ட மில்லியன் புத்தகத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இன்றைக்கு இணையத்தில் பெரிய அளவில் அது பயன்படுத்தப்படுகிறது.

உலக பிரசித்திபெற்ற ரோபோட்டிக்ஸ் கல்வி நிறுவனம் அமெரிக்காவின் பென்சில்வேனியா பிராந்தியத்தில் இருக்கும் கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டது. இதனை உருவாக்கியவர் விஞ்ஞானி தப்பாலா ராஜகோபால் (Dabbala Rajagopal @ Raj Reddy). முதன் முதலில் இந்த பல்கலைக்கழகம் தான் உலக அளவில் ரோபோட்டிக்ஸ் துறையில் முனைவர் பட்ட ஆய்வுகளை 2012 தொடங்கியது. இதன் தொடக்கம் அமெரிக்காவில் அமைந்திருந்தாலும் உலகங்களும் இந்த கல்வி நிறுவனத்திற்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன அவை ஃபீல்ட் ரோபோட்டிக்ஸ் மையங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் சென்னை உட்பட மூன்று இடங்களில் ரோபோட்டிக்ஸ் ஆய்வுகளை தொடர்வதற்கு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கணினி அறிவியலின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் டூரிங் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. கணினி நிரலாக்கத்தின் தந்தை ஆலன் பெர்லிஸ் தொடங்கி, மர்வின் மின்ஸ்கி, ஜான் மிக்கர்தி, ஸ்டீபன் குக், கென் தாம்சன் போன்ற மிகப் பிரபலமான செயற்கை நுண்ணறிவு விஞ்ஞானிகள் பெற்ற உயரிய டூரிங் விருது 1994 ஆம் ஆண்டு ராஜ் ரெட்டி என்று உலகெங்கும் புகழ்பெற்ற தப்பாலா ராஜகோபால் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளர்:

கோட்பாட்டு இயற்பியலாளர் வெங்கட்ராமன் பாலகிருஷ்ணன் - V.BalakrishnanIndian theoretical physicis - ayesha era natarasan - https://bookday.in/

ஆயிஷா இரா. நடராசன்

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகம் போற்றும் இந்திய உலோகவியல் நிபுணத்துவ விஞ்ஞானி தீபங்கர் பானர்ஜி (Prof. Dipankar Banerjee)


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 2 Comments

2 Comments

  1. HariKrishnan S

    AI ல் முதல் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரிய விஞ்ஞானி D.Rajagopal அவர்கள்.

    இவருடைய Big Data science கொராணா காலத்தில் கல்விப் பணியில் உள்ளவர்களுக்கு பேருதவியாக இருந்தது.

    அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் இந்தியன் ரயில்வே ஓட்டுநர் இல்லாத ரயில்களை ரோபோட்டிக் முறையில் இயக்கி பார்த்து இருக்கிறது. இந்த முக்கியமான கண்டுபிடிப்பின் பின்னணியில் ராஜகோபால் அவர்கள் வழங்கிய நேவிகேஷன் ரோபோ குறித்த ஆட்டோமேஷன் கோட்பாடு உள்ளது எனும் பொழுது நம்நாடு பெற்றிருக்கும் தவப்புதல்வர்களில் இவரும் ஒருவர். இவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

    இவரை அறிமுகம் செய்து இவர் சாதனைகளை நம் மக்கள் அறியும் வண்ணம் சிறப்பாக எழுதியுள்ள முனைவர். ஆயிஷா நடராசன் ஐயா அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன். 🙏🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *