ஜீன்ஸ்: டெனிமின் சொல்லும் கதைகள்- நீதா தேஷ்பாண்டே | தமிழில் எஸ். சிந்து

கொரோனா பெருந்தொற்று காரணமாக புலம்பெயர் தொழிலாளர்களின் பயணம்” அகமதபாத்,, ஜூலை 1, 2020. நன்றி: படம் : Reutersஆடை என்பதை நாம் நம் கலாச்சாரத்துடன் பார்ப்பது எப்படியோ அப்படியே ஆடையை அந்த நபரின் நடத்தையுடன் பார்ப்பது தவறு. ஆடை மனித பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கம். தேவை, சூழ்நிலைக்கேற்ப  மாறி கொண்டேவரும் தன்மையுடையது. சமீபத்தில் உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வர் திரட் சிங் ராவத்  ஆடை குறித்துப் பேசி சர்ச்சையில் சிக்கினர். பெண்கள்  ஜீன்ஸ் அணிவது அடுத்த தலைமுறைக்கு மிக மோசமான வழிகாட்டுதல் என்ற அவரின் ட்வீட் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக உடனே பெண்கள் ஜீன்ஸ் அணிந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட, நான் ஜீன்ஸ் அணிவது பற்றிப் பேசவில்லை .நான் கிழிந்த ஜீன்ஸ் பயன்படுத்தும் பெண்களைத் தான் குற்றம் சாட்டுகிறேன் என்றார்.

ripped jeans.jpg
படம்: IND News 

இதே போன்று ராஜஸ்தானில் பல இடங்களில் பெண்கள் ஜீன்ஸ் போடுவது கலாச்சார கேடு என்பது போன்று ஒரு பிம்பத்தையும் ,தமிழ்நாட்டில் சமூக நிலையில் பின்தங்கிய ஆண்கள் ஜீன்ஸ்,குளிங் கிளாஸ் போட்டுக்கொண்டு இடைநிலை சாதியில் உள்ள பெண்களைக் காதல் நாடகத்தை நடத்துகின்றனர் என்று சாதிய தலைவர் ஒருவர் பேசியது என இது போன்று நிறையத் தருணங்கள் ஆடையுடன் ஒப்பிடுகிறார்கள். இது ஒரு வகையான ஆண் ஆதிக்க மனவோட்டத்தின் வெளிப்பாடு.

சமூகம் நாகரிக வளர்ச்சியை நோக்கிச் செல்லும்போதே சில நடத்தை விதிமுறைகளின் மூலம் பெண்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று வரலாறு முழுக்க ஆண்கள் அதற்கான வேலையைச் செய்து வந்துள்ளனர். பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும்,எந்தெந்த பொறுப்புகளைச் சுமக்க வேண்டும் என்று வரையறுத்துள்ளது. இது எல்லா சமூகங்களுக்கும் பொருந்தும். இதற்கு அந்த சுழலும், சந்தர்ப்பமும் பெண்களின் சக்தி மற்றும் கட்டுப்பாடு தனிப்பட்ட தேர்வாகிறது, சுய வெளிப்பாடு மற்றும் அடையாளத்தை வலியுறுத்துவது ஆகியவற்றுக்கு இடையிலான இந்த சிக்கலான பின்னணியில் ஆடையும் அடங்கும், இப்படி சர்ச்சையில் ஜீன்ஸின் வரலாறு விரிகிறது.

ஜீன்ஸ் பற்றிய வரலாறு இன்றைய இளைஞர்களோடு நிற்பது இல்லை அதனைக் கடந்து போராளிகள்,விடுதலை வீரர்கள், பழமை வாதிகள், நவீனவாதிகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என எல்லோருக்குள்ளும் பயணித்த நீண்ட பயணம் அது. உலகளாவிய ஜீன்ஸின் இந்த பயணம் வடக்கில் தொடங்கி தெற்கு வரை நீள்கிறது. இதில் நுகர்வோர், தொழிலாளர்கள், பணம் படைத்த முதலாளிகள் என எல்லோரும் அடங்குவோர். உற்பத்தி மேலை நாடுகளிலிருந்து வெளியேறி இந்தியாவில் குடிபெயர்ந்துள்ளதற்குக் காரணம் இந்தியாவில் அதன் தேவையும், உற்பத்தியும் அதிகரித்துள்ளதற்குச் சமகால நுகர்வோரின் தேவையின் நீட்சியே.

Denim used for blue jeans, with a copper rivet to strengthen a pocket. Photo: Marcos André, CC BY 2.0

ஜீன்ஸின் வரலாறு

இதன் வரலாற்றைச் சற்றே புரட்டினோமானால் மேலை நாடான ஐரோப்பாவில் உள்ள இத்தாலியில் முதன் முதலில் பருத்தி உற்பத்தியின் மூலம் ஆடையை அறிமுகப்படுத்தினார். இது (1200-1850) கி..பி 15 நூற்றாண்டிற்குப் பின் பருத்தி ஆடை லுகுரியாவில் மிகவும் பிரபலமானது. பருத்தி ஆடையைக் கொண்டு பலவிதமான ஆடையை வடிவமைத்தனர். பின் லுகுரியா அடையாளம் காணப்பட்டது. அதன் கனமான மற்றும் கரடுமுரடான துணிகளால் இழைகளை பின்னிபினைக்கும் டெனிம்கள் என அறியப்பட்டது. பின் கைத்தறி மற்றும் பருத்தியிலிருந்து நெய்யப்பட்ட குறுக்காக(Diagonal pattern) வடிவமைக்கப்பட்ட ஜவுளி ‘ஜீன்’ என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் இது ஜெனோவா துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டதே ஜீன் என்ற பெயர் வரக் காரணம் என்கின்றனர்.

இது நவீன டெனிமிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்திருக்கலாம், ஆனால் அது முற்றிலும் பருத்தியிலிருந்து தயாரிக்கப்பட்ட மூலைவிட்ட (diagonal) வடிவத்தில் பிணைக்கப்பட்டுள்ளது. ஜீன்ஸ் என்ற சொல் ஜெனோவாவிலிருந்து வந்தாலும், டெனிம் என்ற சொல் ‘செர்ஜ் டி நைம்ஸ்’ என்பதிலிருந்து வந்தது – இது பிரான்சின் நைம்ஸில் தயாரிக்கப்பட்ட மற்றொரு குறுக்காக வடிவமைக்கப்பட்ட ஜவுளி.

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஜீன் அதிகளவில் பருத்தியிலிருந்து தயாரிக்கப்பட்டது. பின் தொழில்துறை புரட்சியின் போது, ​​லங்காஷயரின் ஆலைகள் ஜீன் துணியின் மறுபிரவேசத்தையும் மற்றொரு வகையையும் அறிமுகப்படுத்தியது, அவற்றில் பெரும்பாலானவை இண்டிகோ நீலத்தில் ஜவுளிக்குச் சாயம் பூசப்பட்டது. தொழில்துறை புரட்சியில் இந்தியாவுடன் ஆழமான தொடர்பைக் கொண்டிருந்தது – அப்போது சாயமிடுதல் உள்ளிட்ட பருத்தி ஜவுளி பற்றிய அறிவு “உலகிற்கு மாஸ்டர் டையர்கள்” என்று கொண்டாடப்பட்ட இந்திய கைவினைஞர்களிடமிருந்து பெறப்பட்டது.

ஆனால் ஜீன்ஸின் உண்மையான வரலாற்றின் தொடக்கம் அமெரிக்காவில் தான். இப்படி எல்லோராலும் விரும்பும் இந்த ஆடை கடினமான வேலை செய்பவர்கள் உடுத்தும் ஆடையாக இருந்து வந்துள்ளது. பின் 1873 ஆம் ஆண்டு தொழிலதிபரான டேவிஸ் மற்றும் லெவிஸ் இணைந்து ஆடையில் சில மாறுதல்களைச் சேர்ந்து முழுமையான தொழிலாளர் வர்க்கம் பயன்படுத்துக கூடிய ஆடையாக அறிமுகப்படுத்தினர். டேவிஸ் மற்றும் லெவிஸ் இணைந்து அதற்கான காப்புரிமைகளைப் பெற்றனர். பின் இருவரும் இணைந்து சன் ப்ரன்சிகோவில் உற்பத்தி மற்றும் விற்பனை கடைகளைத் துவங்கினர்.

அடுத்த பத்தாண்டுகளில் ஜீன்ஸ் தொழிலாளர்களிடமிருந்து நாகரிக மற்றும் உயர்குடி மக்கள் பயன்படுத்தத் தொடங்கினர். பணிரெண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னல் டெனிம் ஒரு எதிர்மறையான பயணத்தைத் தொடங்கினார், அமெரிக்க இளைஞர்களுக்குக் கவர்ச்சி, கிளர்ச்சியின் காற்று, புரட்சி ஆகியவற்றைக் கொடுத்தது. டெனிம் கலாச்சாரம் விரைவில் உலகில் புயலைக் கிளப்பியது பின் மேற்கத்தியக் கலாச்சாரத்தால் இந்தியாவிலும் இந்த அலை இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை உருவாக்கியது.தொழிலாளர்கள் முதல் நவநாகரீகம் வரை

தொழிலாளர்கள் பயன்படுத்தும் நீல நிற ஜீன்ஸ் காலப்போக்கில் நவ நாகரீக ஆடையாக மாறியது. ஆனால் அதன் தொடக்கம் என்னோவோ அமெரிக்காவில் தொழிலாளர்களிடமிருந்து தான்,தற்போது ஜீன்ஸ் நாம் தினசரி பயன்பாட்டில் தவிர்க்க முடியாத ஆடையை மாறியுள்ளது. இதற்கு சமீபத்தில் கொரோனா காரணமாகப் புலம்பெயர் தொழிலாளர்கள் நடைப்பயணமாகச் சென்ற பலர் ஜீன்ஸ் உடுத்தி இருந்தனர் என்கின்றது ஒரு ஆய்வு.

எப்படியோ ஜீன்ஸ் எல்லோருக்குமான ஆடையாக மாறியது. இப்படி உலகளாவிய சந்தையில் தனக்கென ஒரு இடத்தை இடம் பிடித்தது ஜீன்ஸ். கொரானா பெரும் தொற்றுக்கு முன்னால் உலகிலேயே அதிகமான உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெறுவது இந்தியாவில் தான். இதற்கு இங்கு மலிவான விலையில் கிடைக்கும் பருத்தி, குறைவான தொழிலாளர் கூலி என எல்லாம் உற்பத்திக்கு மூலகாரணம். ஜீன்ஸ் இன்று பெருநகர சாலைகளை ஆக்கிரமிப்புக்குப் பின்னல் தொழிலாளர் சுரண்டல்,குறைவான ஊதியம் என எல்லாம் இருப்பது கண்களுக்குப் புலப்படுவது இல்லை. அதையெல்லாம் கடந்த ஜீன்ஸ் உற்பத்தியில் ஏற்படும் கழிவுகள் சுற்றுச்சுழலுக்கு தீங்குவிளைவிக்ககுடியது. ஒரு ஜோடி ஜீன்ஸ் தயாரிக்க ஆகும் செலவை விட அதிலிருந்து வெளி ஏற்றப்படும் கழிவுகள் தான் நம்மை மேலும் அச்சுறுத்துகிறது.

Employees-sit-during-their-lunch-time-inside-a-textile-mill-in-India-18072017093543-1000x0-1-740x416.jpeg
ஜீன்ஸ் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் மதிய உணவிற்காக அமர்ந்து இருகின்றனர். நன்றி: Reuters

இந்தியாவில் அதன் தாக்கம்

டெனிம் உற்பத்தியில் உழைப்பு செயல்முறையில் முதல் படி பருத்தியின் வேதியியல் மற்றும் நீர் தீவிர வேளாண்மை ஆராய்கையில்  இந்தியாவில் தான் பருத்தி பண்ணைகள் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகப்பெரிய பகுதியை உள்ளடக்கியது ஆனால் இங்கு உற்பத்தியாகும் பருத்தி வேறு எங்கும் இல்லாததை விட ஒரு கிலோ ஃபைபருக்கு அதிக தண்ணீரை எடுத்துக்கொள்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

சுற்றுச்சூழல் அபாயமான சுழலில் டெனிம் நெசவு செய்யப் பயன்படுத்தப்படும் நூலின் சாயத்தால் மாசுபடுகிறது .சாயமிடுதல் செயல்பாட்டில் செயற்கை இண்டிகோ மற்றும் சல்பர் சாயங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் நச்சு கழிவுகள் நீர்நிலைகளில் வெளியேற்றப்படுகின்றன. டெனிம் உற்பத்தியும் மற்ற பருத்தி துணிகளை விட அதிக சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகிறது.

ஒரு ஜோடி ஜீன்ஸ் தயாரிக்க சுமார் 11,000 லிட்டர் நீர் செலவு செய்யப்படுகிறது. இது ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களின் தினசரி குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானது. இது ஒரு காட்டன் ஷர்ட் தயாரிக்கும் நீரைப் போன்று  நான்கு மடங்கு அதிகம். மேலும், சுற்றுச்சூழல் விதிமுறைகளை அமல்படுத்தாத நிலையில், உற்பத்தி மையங்களுக்கு அருகில் வாழும் மக்கள் மாசுபாட்டிலிருந்து அவர்களின் உடல்நலம் மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குக் கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

உற்பத்திச் சங்கிலியுடன் ஜவுளி மற்றும் ஆடைத் தொழிலாளர்களுக்குக் குறைந்த ஊதியம், நீண்ட வேலை நேரம், சுரண்டல் போன்ற காரணங்களால் பாதிக்கப்படுகின்றனர்.  இப்படியான இன்னல்களுக்கிடையே  உற்பத்தி செய்யப்படும் ஜீன்ஸ்  பெரும்பாலும் ஒரு ஏழை இளம் பெண். தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுடையது. நாம் தேர்ந்தெடுக்கும்  ஆடை அணிவதற்கான நமது சுதந்திரத்தை வலியுறுத்தும், இவ்வேலையில்  நம்முடைய ஆடைகளைத் தயாரிப்பவர்களையும் நினைவில் கொள்வோம். ஆடை அவரவர் விருப்பம் அவரவர் சுதந்திரம்.

https://science.thewire.in/environment/ripped-jeans-denim-fashion-textile-industry-resource-consumption-pollution-wages/

நன்றி : Science The Wire

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.201 – 05.05.2021 வரை மட்டும்)