ரிஸ்கா முக்தார் கவிதை…

ரிஸ்கா முக்தார் கவிதை…

 

ஒரு நெடிய பிரிவிற்குப் பின்னர்
மீண்டும்
உறவுக்குள் திரும்புபவர்கள்..

அங்கு
அன்பின் வார்த்தைகள் மாறுபட்டிருப்பதனை
நேசத்தின் கொடிகள் அறுந்து விழுந்திருப்பதனை
காதலின் சாலைகளில் நெருஞ்சி முட்கள் வேர்விட்டிருப்பதனை

இன்னும்
நினைவின் தடங்களை ஒரு அலை வந்து
அடித்துச்செல்வதனை
புதிதாய் அங்கொரு வெறுமை சூழ்ந்திருப்பதனை
கைவிட்ட நிலமொன்றில் கல்லறைகள் தோன்றிவிட்டிருப்பதனை..

அவ்வுறவின்
முன்னைய நாள்
ஞாபகங்களோடு
ஒப்பிட்டு
பெருமூச்சு விடுகிறார்கள்..

பின்
அந்நியப்பட்டுப்போன
அவ்வுறவின்
வாயிற்படிகளில்
சிறு துளி கண்ணீரோடு
மனம் கலங்கி
சில கணங்கள் நின்றுவிட்டு
திரும்பிப்பாராமல்
வெளியேறுகிறார்கள்!!!

-ரிஸ்கா முக்தார்-

Show 1 Comment

1 Comment

  1. selvakumarik

    எத்தனை உண்மை..அன்பின் விலகலும் ததும்பலும்..ஐயோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *