ரிஸ்கா முக்தாரின் தமிழ்க் கவிதையும், ஸ்ரீவத்ஸாவின் ஆங்கில மொழியாக்கமும் 

Riska Mukthar's Tamil Poem and Srivatsa's English Translation. Book day Website is Branch of Bharathi PuthakalayamOnce upon a time, we spoke, wrote and communicated in detail. We have no time for anything now and glance through a page as though a mere look would suffice to scan and upload the content to our brain. Even the humble condolence message is reduced to a RIP. Our being and ceasing is reduced to a green blip says Riska Mukthar in this stark poem in Tamil which has been reproduced here alongside an English translation by moi with her prior permission:

இமோஜிகளில் புன்னகைத்துக்கொள்கிறேன்
இமோஜிகளில் முத்தமிட்டுக்கொள்கிறேன்
இமோஜிகளில் அணைத்துக்கொள்கிறேன்
இமோஜிகளில் முறைத்துக்கொள்கிறேன்
இமோஜிகளில் கண்ணீர் சிந்துகிறேன்
எனக்கிங்கு
நெருங்கிய நண்பர்களென யாருமில்லை
எதிரிகளென எவருமில்லை
நம்பிக்கைகளென ஏதுமில்லை
காதல்களெனப் பிறிதொன்றில்லை
என் இருப்புக்கும்
இன்மைக்கும் இடையே
ஒளிர்ந்துகொண்டிருக்கிறது
ஒரு பச்சை விளக்கு
ஆக
இந்த இணையவெளியில்
நானென்பது
கடைசியில்
அணைந்துபோகுமொரு
விளக்குதான்
இல்லையா??

ரிஸ்கா முக்தார்I smile
in emojis.
I kiss
in emojis.
I hug
in emojis.
I stare
in emojis.
I shed tears
in emojis.
Here
I have no one
as close friends.
Nobody as enemies.
Nothing by way
of beliefs.
No other things
as loves.
Between my presence
and absence
a green light
is glowing.
Therefore,
in this internet space,
I am just
a light that goes off,
am I not?

~Srivatsaஇப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.