ராபின் சர்மா (Robin Sharma) எழுதிய “Discover your Destiny” – நூல் அறிமுகம்

ராபின் சர்மா (Robin Sharma) எழுதிய “Discover your Destiny” – நூல் அறிமுகம்

“Discover your Destiny” – நூல் அறிமுகம்

புத்தக தினத்தன்று ( April 23rd) புத்தக பிரியராகிய என் நலன் விரும்பியால் என் விதியை மாற்ற என் கையில் தவழ்ந்தது *உங்கள் விதியை கண்டறியுங்கள்* என்னும் இப்புத்தகம் பலமுறை கையில் எடுத்து, வாசிக்கும் பொழுதெல்லாம் என் மனநிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது, சில நேரம் என் மனசாட்சியாய் என்னுடன் பேசியது, வேறு சில நேரம் வாடிய செடியாயிருந்த என் மனநிலைக்கு நீர்பாய்ச்சி சென்றது..

நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவதற்கும் நம்மை நிதானித்து பார்த்து சீர்திருத்துவதற்கும் நல்லதோர் வழிகாட்டியாய் நற்பல நடைமுறை சான்றுகளோடு வண்ணமயமாக்கப்பட்ட அழகோவியம் தான் *Discover your Destiny* by Robin Sharma..

ராபின் ஷர்மா உலக அளவில் மிகச்சிறந்த பேச்சாளர், பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளராக தம் முத்திரையை பதித்தவர்..

இவரது முக்கிய படைப்பான

*The Monk who sold his Ferrari* மூலம் பிரபலமானவர்.. அந்த புத்தகத்தை *உங்கள் விதியை கண்டறியுங்கள்* என்ற இந்த புத்தகத்துடன் தொடர்புபடுத்திய விதம் சிறப்பு..

இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் மூலம் முழு புத்தகத்தையும் வடிவமைத்ததோடு நில்லாது *நதி போன போக்கிலே நகரும் படகை போல நம் வாழ்க்கையை நெறியையும், அதில் நமக்கான விதியையும்* ஒருங்கே கற்றுக்கொள்ளும் நிலையை விவரித்த விதம் அற்புதம்..

Dar Sanderson ( an international hotel entrepreneur) என்னும் ஹோட்டல் தொழிலதிபர், இலட்சியவாதி மற்றும் மிகப்பெரிய ஆளுமையின் மகிழ்ச்சியற்ற, வெறுமையாக்கப்பட்ட தனிப்பட்ட வாழ்க்கை நிலையினை அர்த்தமுள்ளதாக மாற்றும் பிரபலமான துறவி Julius Mantle மூலம் வெற்றிக்கான ரகசியத்தை வரைந்து காட்டும் திறன் சிறப்பு..

புத்தகத்தின் கதாநாயகனாக வலம் வரும் Dar Sanderson க்கு ஒரு அழகிய மனைவியும் மூன்று அழகிய குழந்தைகளும் இருக்கிறார்கள், மிகப்பெரிய தொழிலதிபராக இருந்தும் குடும்பத்திற்கான பொறுப்பை தவற விட்டதால் ஒரு நாள் அவரது மனைவியும் குழந்தைகளும் அவரை விட்டுப் பிரிந்து செல்கிறார்கள் ஒரு கடிதத்தை மட்டும் விட்டுவிட்டு அதில் நாளை எனது வக்கீல் உங்களை வந்து சந்திப்பார் என்ற தகவலை அளித்து…

என்னதான் உயர் பதவியையும் செல்வத்தையும் தன்னகத்தே கொண்டிருந்தும் குடும்பத்தை இழக்கும் அந்த மணித்துளிகளை அவரால் தாங்கிக் கொள்ள இயலாது நிலை தடுமாறி தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் ஒரு சூழ்நிலைக்குள்ளாக தள்ளப்படுகிறார்..

வேண்டா வெறுப்புடன் வேலைக்கு சென்ற Dar, மனித வள மேம்பாட்டு மேலாளரின் உந்துதலால் ஒரு பயிற்சியில் கலந்து கொள்ள, அங்கே அவரே அறியாமல் எதேர்ச்சியாக ஒரு துறவியை ( Julian Mantle) சந்திக்க, அத்துறவியும் தான் அவருக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க அனுமதி கேட்க, அதற்கு Dar சம்மதித்தாரா? அதன்பின் Dar ன் வாழ்க்கை நெறியையும், அவரின் விதியையும், கண்டறிய துறவி மேற்கொண்ட படிப்படியான செயல்முறைகள் என்னென்ன? எடுத்துக்காட்டிய சான்றுகள் என்னென்ன? Dar ன் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டதா? இல்லையா? என்பதுதான் மீதி கதை..

ஜூலியன் என்னும் கதாபாத்திரம் இப்புத்தகத்தின் வழியாக நமக்கு விட்டு விட்டு செல்லும் சில யதார்த்தங்கள் என்னவென்றால் நம் வாழ்க்கை என்பது மிகப்பெரிய பொக்கிஷம் நாம் எதிர்பார்த்ததை விட எதிர்பார்க்காத அளவுக்கு அசாதாரணமிக்கவர்கள் என்னும் உண்மையை அழகாக வரைந்து சென்று இருக்கிறார் ..

என்னைக் கவர்ந்த சில எடுத்துக்காட்டுகள்

 குறிப்பாக படகுகளை எடுத்துக் கொண்டோமானால் அதனை கரையிலே கட்டி போட்டிருந்தால் அதற்கு எந்த சேதமும் வந்திருக்காது ஆனால் *படகுகள் கரையில் கட்டப்படுவதற்கா உண்டாக்கப்பட்டவை?*

நாம் கடந்து செல்லும் வாழ்க்கை பாதையில் கரடு முரடுகள் கோணல்கள் இருப்பின் அதனைக் கண்டு பயந்து முதலில் இருந்து வாழ்க்கையை ஆரம்பிக்க இயலுமா? *we cannot live our life as an artist who change or erase the art* என்பது போன்ற நம் புத்தியை தீட்டும் சில கேள்விகளை கொடுத்து நம் வாழ்க்கையை உன்னிப்பாய் கவனித்து அதற்கான அர்த்தங்களை சிந்திப்பதற்கு சில நிமிடங்களை சேகரித்துள்ளார்..

*Golden Key to a beautiful life was to balance Heaven and Earth*

Leonardo da Vinci said *Fix your course to a star and you can navigate any storm*

Shall we discover our destiny now by reading this book?

நூலின் விவரங்கள்:

புத்தகம்: Discover your Destiny
ஆசிரியர்: ராபின் சர்மா (Robin Sharma)

பதிப்பகம்: Jaico Books
விலை: Rs. 299/-

எழுதியவர் : 

✍🏻சுகிர்தா அ
நெல்லை..

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *