ரோபோட் நாய்களும் இந்திய ராணுவமும் நம் மாணவர்களின் கேள்விகளும்..
இந்திய ராணுவ தளவாட அறிவியலில் இன்றைய பரபரப்பு ரோபோட் நாய்கள். நம் இந்திய ராணுவம் முதல் தொகுதி ரோபோட்டிக் நாய்களை MULES என்கிற புதிய அறிவியல் முறைப்படி தொழில் நுட்ப சாதனையாக வீரர்களுக்கு களத்தில் உதவும் இயந்திர நாய்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக 25 இயந்திர நாய்கள் பயிற்சி பெற்று வருகின்றன. என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அது என்ன MULES தொழில் நுட்பம்? நிஜ நாய்களை விட இந்த இயந்தி ரநாய்கள் ராணுவத்தில் பணியாற்றும் அளவிற்கு மேலானவையா.. இப்படி பல கேள்விகள் எழுகின்றன.
சவாலான நிலப்பரப்புகளில் எக்யூப்மெண்ட் இந்த இயந்திர நாய்கள் லேசான சுமைகளைக் கொண்டு செல்லவும் பயன் படுத்தப்படும் ராணுவத்தின் அனைத்து செயல் பாட்டு திறன்களையும் தொழில் நுட்பத்தின் மூலம் நவீன படுத்துவதில் அறிவியலின் பங்கை இந்திய ராணுவம் சரியாக பயன் படுத்துவதற்கு இது ஒரு முன்னுதாரணமாகும். பாதுகாப்பு ஸ்தாபனத்தின் ஆதாரங்களை மேற்கோள்காட்டி த பிரிண்ட் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்திய ராணுவம் கடந்த ஆண்டு செப்டம்பரில் அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ் 100 மல்டி யூடிலிட்டிலெக் எக்யூப்மெண்ட் என்கிற MULE தொழில் நுட்ப நாய்களை ஆர்டர் செய்தது. இதன் மொத்தவிலை 300 கோடி..
நம்முடைய நாட்டின் மிக சவாலான எல்லைப் பகுதிகளில் குறிப்பாக இமையத்தின் காஷ்மீர் பகுதி கடும் பனிப் பிரதேசத்தில் இரவும் பகலும் கண் காணிப்புகளில் ஈடுபட இவை மிகவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகை நாய்களை உருவாக்குவது மிகவும் கடினமான விஷயமாகும். இந்த ரோபோட் நாய்கள் வெப்ப கேமராக்கள் மற்றும் பல்வேறு உணரிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சூழல்களில் குறிப்பாக செங்குத்தான மற்றும் சீரற்ற நிலப்பரப்புகளில் கண்காணிப்பை ஏற்படுத்த இவைரே டியம் கேமராக்களை பயன்படுத்துகின்றன. ஒரு ரோபோட் நாய்தன்னுடைய சக ராணுவ வீரர்களையும் எதிரிப்படை வீரர்களையும் எப்படி இனம் காணும் என்பது தான் உலகிலேயே மிக அற்புதமான விஷயமாகும். சகவீரர்களுக்கு ஆபத்து இல்லாமலும் எதிரி வீரர்களை நோக்கி சுடும் வண்ணமும் எப்படி இந்தநாய்களை தயாரிப்பது. உணர்ச்சியற்ற இயந்திரங்களுக்கு இவர் நம்முடைய ராணுவத்தைச் சேர்ந்தவர் இவர் எதிரி..என்று கண்டு பிடிக்கின்ற தொழில் நுட்பம் என்பது செயற்கை நுண்ணறிவு நமக்கு வழங்கியிருக்கும் கொடையாகும்.
MULES என்பது குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.
2023 ல் ஜம்முவில் நடை பெற்ற நார்த் டெக்சிம்போசியம் என்கின்ற ஒரு ராணுவ பொறியியல் கண்காட்சியில் முதன் முதலில் இவ்வகை இயந்திர நாய்கள் இந்தியாவில் காட்சிக்கு வைக்கப்பட்டன.இவற்றை குறித்து நாம் யோசிக்கின்ற போது பொறியியல் இன்மகத்தான சாதனையை நம்மால் புரிந்து கொள்ள முடியும் நான்கு கால் ரோபோட் என்று அழைக்கப்படும். இந்த நாய்கள் உளவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு மிகவும் தேவையான வெப்ப கேமராக்கள் பொருத்தப் பட்டவை இவற்றினுள் ஒரு ரோபோட்டிக்க்கு ஏழு ரேடார்கள் போன்ற மேம்பட்ட தொழில் நுட்ப அமைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.
மிகக் குறைந்த எடையுள்ள ரோபோட் இந்த ஒட்டு மொத்த நாய் ரோபோட்டின் எடை பெறும் 12 கிலோ கிராம் ஆனால் இது ஏறத்தாழ 50 கிலோ சுமக்கும் திறனைக் கொண்டுள்ளது. சிரிய ஆயுதங்களுடன் பொருத்தப்பட்ட இந்த நாய்கள் எதிரிகளை நோக்கி சுடுவதற்கும் பயன்பட முடியும் மோதலின் போது வீரர்களை பாதுகாப்பான தூரத்தில் வைத்து ரோபோட்டுகள்யான இந்த நாய்களை எல்லைக்கு அனுப்பி நம்மால் சமாளிக்க முடியும் இதன் மூலம் நம் வீரர்களின் உயிர் சேதத்தை தடுக்க முடியும். MULE ஃப் ஒரு தனித்துவமான அம்சமாகும் ஃப் ஏனெனில் இது WIFI வழியே செயல் படுகின்ற திறன் கொண்டது. 10 கிலோ மீட்டர்கள் வரை இதை ரிமோட் முறையில் நம்மால் இயக்க முடியும் ஹெல்தி என்று அழைக்கப்படுகின்ற. தொலை தூர செயல்பாடுகளுக்கான நீண்ட காலபரிணாமம் என்கின்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தகவல் தொடர்புகளை கட்டுப் படுத்துகிறார்கள்.
இந்த ரோபோட் நாய்களுக்கு கண்டு பிடிப்பாளர் பொறியாளர் ஆர்யன் சிங்கின் பங்களிப்பு மகத்தானது கட்டிடங்கள் அல்லது பிறவசதிகளுடன் கூடிய இடங்களில் தீவிரவாததாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகள் ஒளிந்திருந்தால் இந்த ரோபோட் நாய்களால் ஏறத்தாழ 25 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தே அவர்களை கண்டு பிடிக்க முடியும்.
சாதாரண நாய்களுக்கு மோப்பத்திறன் உண்டென்றால் இந்த ரோபோட் நாய்களுக்கு ரேடார் திறன் உள்ளது எதிரியின் இருப்பிடங்களில் துல்லியமாக தெரியாத ஆபத்தான சூழ்நிலைகளில் இந்த இயந்திர நாய்கள் நமக்கு 360 டிகிரி கேமராக்கள் கொண்டு உதவப் போகின்றனது. ப்பாக்கி சூடுதலங்கள் இவற்றி இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை ரிமோட் முறையில் எதிரிகளை நோக்கி சுடுவதற்கு தான் பயன் படுத்த முடியும்.
வடக்கு தொழில் நுட்பசிம் போசியம் மற்றும் மிலிட்டரி காலேஜ் ஆஃப் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இரண்டும் இணைந்து புதுமையான ராணுவ தொழில் நுட்பங்களை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது ஆனால் பன்மடங்கு திறன் கொண்ட ரோபோட் நாய்களை ஏற்கனவே சீன ராணுவம் அறிமுகப்படுத்திவிட்டது. அந்த ராணுவத்தில் சுமார் 2000 ரோபோட் நாய்கள் இருக்கலாம் என்று உளவுத்துறை அறிவிக்கிறது செயற்கை தொழில் நுட்பத்தின் அடிப்படையிலான தன்னியக்க பல ஆயுத ஈடுபாட்டு அமைப்பு வான்வழி மற்றும் நிலப்பரப்பு இலக்குகளை தன்னியக்கமாக அல்லது கை முறையாக ஈடுபடுத்தும் திறன் இந்த நாய்களுக்கு உண்டு. MULE என்று அழைக்கப்படுவது MULTIPURPOSE UNMANNED LAND EQUIPMENT என்றும் அதே சமயத்தில் MULTI-UTILITY LEGED EQUIPMENT என்றும் பொருள் கொள்ளத்தக்கது.
முதன் முதலில் இவ்வகை நாய்கள் பிக்டாக்..அதாவது BIG DOG..என்று 2005 தில் போஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனத்தால் நாசாவின் அயல்கிரக விஜய்ங்களுக்காக ஜெட்டு வெர்ஷன்ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது. இதற்கு அமெரிக்கா ராணுவம் நிதி அளித்தது இந்தவகை நாய்கள் மூன்று அடி நீளமும் 2.5 அடி உயரமும் ஏறக்குறைய 110 கிலோ எடையும் கொண்டிருந்தன ஒரு சிறிய கழுதையின் அளவு இது ..இந்திய ராணுவத்தில் இப்போது இணைக்கப்பட்டிருக்கும் இயந்திரநாய்களைவிட இது பலமடங்கு பெரியது மணிக்கு நான்கு மைல் தூரத்தில் எந்திரநாய்களால் ஓட முடியும் 150 கிலோவை மிக சர்வசாதாரணமாக BIG DOG சுமந்து சென்றது.
இந்தவகை நாய்கள் நான்கு கால்கள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.ஒவ்வொரு காலிலும் மூட்டுக்கு சக்தி அளிக்கும் பேட்டரிகள் பொருத்தப்பட்டு இருக்கும் நான்கு குறைந்த உராய்வு ஹைட்ராலிக் சிலிண்டர்கள் ஆக்டிவேட்ர்களாக பயன்படும் இவைகளின்னுடைய லோகம் மோசம் நடத்தைகள் சாதாரண நாய்களிடமிருந்து பெரும்பாலும் மாறுபடும் எழுந்து நிற்கலாம் உட்காரலாம் ஒரு நேரத்தில் முன்கால்களை மட்டும் தூக்கிக்கொண்டும் ஊர்ந்து செல்லலாம் குறுக்கு கால்களை தூக்கிக்கொண்டு நடக்கலாம் அல்லது போடும் நடையிலும் இருக்கலாம். இவ்வகை நாய்களை முதலில் அறிமுகப்படுத்திய விஞ்ஞானியின் பெயர் டாக்டர் மார்டின் யூஸ்லர் ஆனால் 2012 இல் அமெரிக்கா ராணுவம் உட்பட உலகின் மூன்று ராணுவங்கள் இயந்திர நாய்களை அறிமுகப் படுத்தின அவற்றில் சீன ராணுவமும் ஒன்று டாக்டர் மார்டின் யூஸ்லர் மெக்கில் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த பொழுது அங்குள்ள ரோபோட்டிக்ஸ் ஆய்வகத்தில் நான்கு கால்நடை இயந்திரங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வெற்றி பெற்றார்.
ஆனால் இந்தவகையான நாய்களை பயன்படுத்துவதில் அமெரிக்கா ராணுவம் சிக்கல்களை எதிர்கொண்டது. இவ்வகை நாய்கள் இயங்குகின்ற பொழுது அவை எழுப்புகின்ற இயந்திர ஓசைகள் எதிரிகளால் மிக எளிதில் கண்டு பிடித்துவிட முடியும் எதிரிகளின் ரேடார்களையில் உடனடியாக சோனார் அமைப்புகள் மூலம் இவை செயல் படுவது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி விடும் மூன்றாவது மிக முக்கிய விஷயம் இந்த பேட்டரிகளில் அடைக்கப்பட்டு இருக்கின்ற பெட்ரோலிய பொருட்கள் மிகப் பெரிய ஆபத்தை அங்கு ஏற்படுத்துகிறது. இவை இல்லாமல் உயர் தொழில் நுட்ப முறையில் இப்போது இந்திய ராணுவம் பேட்டரிகளில் இயங்க வேண்டிய அவசியமற்றவை ஃபை பயன்பாடு உடைய MULE இயந்திர நாய்களை அறிமுகப்படுத்தி இருப்பதை கண்டிப்பாக நாம் பாராட்ட வேண்டும்..
இந்த இயந்திர நாய்கள் விஷயத்தில் எனக்கு சில கேள்விகள் இருந்தன..தேர்தலில் தோல்வியுற்ற பிறகும் அதிபர் பதவியை விட முடியாது என்று பிடிவாதமாக இருந்த ட்ரம்ப்க்கு எதிராக மக்கள் போராடியபொழுது இயந்திர நாய்களை அவர்கள் மீது ஏவிவிட்டார் என்கிற வரலாற்றை நாம் மறந்து விடக்கூடாது..
எது எப்படியோ..வகுப்பறையில் என் மாணவர்களோடு இந்திய ராணுவத்தில் இயந்தி ரநாய்கள் சேர்க்கப்பட்டிருப்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தபொழுது அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய சந்தேகம் ஏற்பட்டது..ராணுவ டாங்கிகள் அருகே செல்லும் பொழுது இந்த இயந்திர நாய்கள் ஒற்றை காலை தூக்கி ……போகுமா. ஆனால்மாணவிகள்கேட்டகேள்விவித்தியாசமானதுநடுநிசியில்எங்கோஒருநாய்குரைக்கும்பொழுதுஅல்லதுசீனராணுவநாய்குரைக்கும்பொழுதுஇந்தநாய்களும்ந
டு நிசி நாய்கள் போல .. குரைத்து நம்மையும் சேர்த்து காட்டிக் கொடுத்து விடுமா…இதெல்லாம் ஒரு கேள்வியா என்கிறீர்களா? அற்புதமான ஒரு கேள்வியை ஒரு மாணவி முன்வைக்கிறார். நம் கணினிகளை ஹக் செய்வதை போல இந்த நாய்களையும் எதிரிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்கு எடுத்துச் சென்று விட்டால் என்னசெய்வீர்கள்… அறிவியல் தொழில் நுட்பம் பாமரர்கள் மற்றும் அறிவார்த்த மனிதர்களின் கேள்விகளை தூண்டுவதில் எப்போதும் வெல்கிறது. இந்திய ராணுவத்திற்கு ஒரு சல்யூட்…
கட்டுரையாளர் :

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


பல தொழில்நுட்ப சவால்களை எதிர்கொண்டு Mules இயந்திர நாய்கள் தயாரித்து நம் இந்திய ராணுவத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருப்பது சவாலான விஷயம்.
அதைவிட மாணவர்களின் கேள்வி நகைப்பிற்குரியதாக இருந்தாலும் சிந்திக்க தக்கவையாக உள்ளது…
அருமை சார். அரிய தகவல்களுடனான Mules இயந்திரம் பற்றி அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள் சார்.🙏🏻🙏🏻🙏🏻
Pingback: ரோபோட்டால் தற்கொலை செய்து கொள்ள முடியுமா? - Book Day