“விண்வெளிப் பயணம் போகலாம் வாங்க”
ஆம் இந்த நூலை படிப்பவர்கள் நிச்சயம் விண்வெளி பயணம் செல்வதற்கான ஆர்வம் ஏற்படும். “ராக்கெட்” என்னும் சொல் இத்தாலிய மொழியின் ராக்கெட்டோ எனும் சொல்லிலிருந்து உருவானது.
1798 ஆம் ஆண்டே திப்பு சுல்தான் கிழக்கு இந்திய கம்பெனி படைகளுக்கு எதிராக “மைசூர் ராக்கெட்டுகள்” பயன்படுத்தி உள்ளார். இதுதான் விண் ஊர்திகளுக்கான முதல் படி என நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
1806 ஆம் ஆண்டில் செல்ல பிராணிகளை ராக்கெட்டில் வைத்து கட்டி உலகின் முதல் பாராசூட்களின் மூலம் தரையிறக்கினார் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கிலாட் ருகேசரி. 1913 ஆம் ஆண்டில் சந்திரனுக்கு பயணிக்க தேவைப்படும் ஆற்றலை கணக்கிட்டவர் பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த பொறியாளர் ராபர்ட் எஸ்னால்டு.
1926 ஆம் ஆண்டில் திரவ எரிபொருள் ராக்கெட்டை விண்வெளியில் செலுத்தியவர் அமெரிக்க நாட்டின் ராபர்ட் கொடார்டு. அதுபோன்று விண்வெளி பயணித்திற்கான உடைகளை அறிமுகம் செய்தார் எமிலோ ஹரோ பைநார்ஷ். 1947 ஆம் ஆண்டில் விண்வெளி பயணத்திற்கு பயன்படும் ஆய்வு நூலினை இந்தியாவைச் சேர்ந்த எஸ் கே மித்ரா ஆங்கிலத்தில் வெளியிட்டார். 1961 ஆம் ஆண்டு ரஷ்ய விண்வெளி வீரர் யூரிக் காக்கரின் பூமியிலிருந்து விண்ணில் பறந்த முதல் மனிதன் ஆவார்.
சந்திரனுக்கு முதன் முதலில் ராக்கெட் தயாரிக்கப்பட்ட நகரம் அமெரிக்காவில் உள்ள ஹன்ட்ரஸ்வை நகரம் தான். அது போன்று முதன் முதலில் விண்வெளிப் பயணம் மேற்கொண்டவர் சோவியத் யூனியனைச் சேர்ந்த வாலண்டினா.
நம் இந்திய நாடு முதல் முதல் ராக்கெட் ஏவியது 1963 ஆண்டு தும்பா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து தான். இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவை 1975 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. 1984 ஆம் ஆண்டு விண்வெளியில் பறந்த முதல் இந்தியர் ராக்கேஷ் சர்மா.
தும்பா ராக்கெட் தளம், சதீஷ் தவன் விண்வெளி ஆய்வுதளம், ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் ஆகியவை இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் உருவாகி வருகிறது. விரைவில் பயன்பாட்டுக்கு வரும். 2008 இல் சந்திரயான் – 1 அனுப்பி நிலவில் தண்ணீர் உள்ளதை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தது இந்தியா. 2013 இல் மங்கள்யான் செயற்கைகோள் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டது. இது ஆசியாவின் முதல் விண்வெளி ஊர்.
எலன் மார்க்ஸ் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செவ்வாய்கிரகத்தில் மனிதனை குடியேற வைக்க திட்டமிட்டு வருகிறது. இது போன்ற முக்கியமான தகவல்கள் ஏராளம் உள்ளது.
இந்நூலினைப் படிக்கும் மாணவர்கள் நிச்சயமாக ராக்கெட் விஞ்ஞானியாக உருவாக உத்வேகமூட்டும் என்பதில் ஐயமில்லை.
நூலின் பெயர் : “ராக்கெட்”
நூலாசிரியர் : ஆயிஷா நடராஜன்
விலை: ரூபாய் 80/-
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
சென்னை -600018
தொடர்பு எண்:
044 24332424
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.