ராக்கெட் தமிழன் ஆனந்த் மேகலிங்கம் சோவியத் ராக்கெட் விஞ்ஞானி மிக்கைல் டிக்கோன்ராவா
ராக்கெட் தமிழன் ஆனந்த் மேகலிங்கம் மீண்டும் செய்திகளில் அடிபடுகிறார். தனது மனதின் குரல் பகுதியில் பிரதமர் பாராட்டியதை இங்கு நான் குறிப்பிடவில்லை.. ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருவிடந்தை எனும் கடற்கரை கிராமத்தில் இருந்து இரண்டாவது கலப்பின ராக்கெட்டின் மொபைல் ஏவுதள முறை மூலம் ஏவுதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. அது என்ன கலப்பின ராக்கெட்?.. மொபைல் ஏவுதளம் என்பது என்ன?.. திடீரென்று ஏன் இப்படி ஒரு பரபரப்பு.. ஒன்றை தமிழனின் சொந்த ராக்கெட் நிறுவன முயற்சி குறித்து அறிந்த பொழுது நான் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவில்லை.
ஹைபிரிட் ராக்கெட் என்று அழைக்கப்படும் கலப்பின ராக்கெட் பற்றி பார்ப்பதற்கு முன் நாம் ஆனந்தின் வாழ்க்கை பற்றி பார்ப்போம் ஏனெனில் இன்றைய விண்வெளி கனவுகளுடன் இருக்கும் கோடிக்கணக்கான தமிழக மாணவர்களின் வழிகாட்டியாக அவருடைய வாழ்க்கை அமையும் என்பதில் சந்தேகமில்லை

ராக்கெட் தமிழன் ஆனந்த் மேகலிங்கம் சென்னையைச் சேர்ந்தவர். இவர் தாமாகவே மிகவும் தைரியமான புதுமையான விதத்தில் ஸ்பேஸ் ஜோன் இந்தியா (space zone india) தனியார் ராக்கெட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஆனந்தின் கதை ஒரு நடுத்தர குடும்பத்தில் தொடங்குகிறது. அவரது தந்தை ஒரு டிராக்டர் டிரைவராக இருக்கிறார். அவருடைய தாயார் வீடுகளில் பாத்திரம் கழுவும் பணிப்பெண்ணாக வேலை செய்கிறார். பள்ளி முடித்து கல்லூரி ஆண்டுகளுக்குள் நுழைந்த பொழுது ஆனந்திற்கு விண்வெளி ஆர்வம் அதிகரித்தது. ஆனால் ஆனந்த் தடகள விளையாட்டு துறையில் தலைசிறந்தவராக இருந்தார். அவருக்கு ஏரோநாட்டிகல் என்ஜீனியரிங் படிப்பு அதற்கான முழு உதவித்தொகையையும் அந்த ஆர்வம் பெற்றுத்தந்தது. விண்வெளி தொழில்நுட்பத்தின் மீதான அவருடைய பயணம் தொடங்கியது.
2021 டிசம்பரில் தன்னுடைய எம் எஸ் படிப்பை அவர் பாதியில் கைவிட வேண்டியிருந்தது. இதனால் மனம் துவண்டு போனார். மதிப்புமிக்க இளம் விஞ்ஞானி விருது உட்பட பலவற்றை பெற்றவர். அவர் அப்போது தன்னுடைய தந்தையுடன் இணைந்து மிகச் சிறிதாக ஸ்பேஸ் ஜோன் இந்தியா என்கிற தன் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். மொத்தமாக இருந்த பணம் 1,00,000 ரூபாய்தான்
விண்வெளி மண்டலம் என்று அழைக்கப்படும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா விண்வெளி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் மாணவர்களிடையே கல்வியை கொண்டு செல்வதில் கவனம் செலுத்துகிறது. நிறுவனத்தின் புதுமையான கலப்பின உந்துவிசை ராக்கெட் உலகம் முழுவதும் இன்று பேசப்படுகிறது. ராக்கெட் ஏவுதல் என்பதை அதிக செலவு, குறைந்த சுற்றுச்சூழலுக்கு ஏற்றமான ஒன்றாக இந்த கலப்பின ராக்கெட்டுகள் மாற்றுகின்றன..

2023 ஆம் ஆண்டில் ஸ்பேஸ் ஜோன் இந்தியா இந்தியாவின் முதல் கலப்பின ராக்கெட்டை சென்னையில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதே போன்ற அடுத்த முயற்சியில் Rhumi-1 ராக்கெட்டை வரும் ஆகஸ்ட் 24 அன்று செங்கல்பட்டு அருகே மொபைல் லான்ச் பாயிண்ட்ஸ் சிஸ்டம் என்கிற முறைப்படி அனுப்பிட இருக்கிறார்கள்.
கலப்பின ராக்கெட் என்பது ராக்கெட் மோட்டார் கொண்ட ஒரு ராக்கெட் ஆகும்.. புது சக்திகளை இந்த வகை ராக்கெட்டுகள் இரண்டு வெவ்வேறு கட்டங்களில் பயன்படுத்துகின்றன. ஒன்று திடமான கட்டம் மற்றொன்று வாயு அல்லது திரவ கட்டம் மூன்றையுமே பயன்படுத்துகின்றன ஒன்றாக இருப்பதால் இந்த வகை ராக்கெட்டுகள் கலப்பின ராக்கெட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன.
1930களில் சோவியத்துகள் முயற்சி செய்த ஒரு ராக்கெட் தொழில்நுட்பம் இது .. சோவியத் ராக்கெட் குழுவில் எதிர்வினை இயக்கம் என்கின்ற ஒரு அமைப்பு இருந்தது.. ஸ்புட்னிக் 1 மற்றும் லூனா திட்டத்தின் வடிவமைப்புக்கு பின்னர் அவற்றை மேற்பார்வையிட்ட Mikhail Tikhonravov .. ராக்கெட்டுகளில் திட திரவ வாயு மூன்று எரிபொருள்களையுமே ஒவ்வொரு காலகட்டத்தில் பயன்படுத்துகின்ற தன்னுடைய கண்டுபிடிப்பை வெளியிட்டார்.. ராக்கெட் விடும் செலவை பெருமளவு குறைக்க முடியும். அதே சமயத்தில் ராக்கெட் மோட்டார்களை பயன்படுத்துவதால் நாம் இவற்றை திரும்ப திரும்ப பயன்படுத்துவதற்கும் வாய்ப்பு உள்ளது.

TIKHONRAVOV ரஷ்யாவின் விளாடிமிர் இல் பிறந்தவர் 1931இல் விமான தொழில்நுட்ப பொறியாளர் ஆகி 1932 இல் ரிக்கிவ் மோஷன் ஆய்வுக் குழுவில் இடம்பிடித்தார். வாயு இயக்கவியல் ஆய்வகத்தில் அவர் இணைந்த பொழுது எதிர்வினை அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தால் கவரப்பட்டார். திரவ எரிபொருளை கொண்ட ராக்கெட்டுகளை அப்போது அவர்கள் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். தி காமிராவோ ராக்கெட் லாஞ்சர் என்ற ஆயுத அமைப்பின் ஏவுகணைகளை ஆய்வு செய்தார். 1946ல் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சோவியத் அறிவியல் அகாடமியில் துணை தலைவராக்கப்பட்டார்
அப்போது மல்டி ஸ்டேஜ் ராக்கெட் பற்றி அவருடைய மூன்று ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்தன. விமான வரம்பை தாண்டி ஒரு ராக்கெட் செல்வதற்கு மிகக் குறைந்த செலவில் சுற்றுசூழலுக்கும் பாதுகாப்பான விதத்தில் எப்படி ராக்கெட்டுகளை அனுப்ப முடியும் என்பது குறித்து அவருடைய ஆய்வுகள் பேசின.
ஸ்புட்னிக் 1 மற்றும் விலங்குடன் ஒரு செயற்கைக்கோள் ஏவப்பட்ட பிறகு பல விஞ்ஞானியுடன் இணைந்து ஹைபிரிட் ராக்கெட்டுகளை அறிமுகம் செய்தார் அவர். முதல் சோவியத் திரவ உந்து தாக்கத்தை வடிவமைத்தார். பிரபலமான ஆர் செவன் ராக்கெட்டான பூஸ்டர் ராக்கெட்களை அவர் அறிமுகம் செய்தார். யூரி ககரின் விண்வெளிக்கு பயணம் செய்த ராக்கெட்டை வடிவமைத்தவர் அவர். சோவியத் விண்வெளி வீரர்களை நாம் COSMONAUTS என்று அழைக்கிறோம் இந்த பெயரை தேர்வு செய்தவரும் அவரே …
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தன்னிச்சையாக கல்வி கற்று அதனை செயல்படுத்தியும் வருபவர் ஆனந்த்.. முன்பு வெறும் 1,00,000 ரூபாயில் தொடங்கிய Space Zone India இன்று 800 கோடி மதிப்புடையது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு டிராக்டர் டிரைவரின் மகன் விண்வெளி விற்பன்னராக சோவியத்து தொழில்நுட்பத்தை உள்வாங்கிக்கொண்டு மிகத்திறம்பட முன்னேறிக்கொண்டிருக்கிறார் ….

அது என்ன மொபைல் ராக்கெட் ஏவுதளம்.. ராக்கெட்டை ஏவுவதற்கு ஸ்ரீஹரிகோட்டா போல நாம் ராக்கெட் ஏழு தளங்களை உருவாக்க வேண்டும். ஆனால் செங்குத்தான ஒருங்கிணைப்பு வசதியோடு இன்றைக்கு ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு எடுத்துச் செல்லத்தக்க சக்கரங்கள் வைக்கப்பட்ட ராக்கெட் ஏவு தளங்கள் உள்ளன. இவ்வகையான ஏவுதளத்தை இந்தியாவில் உருவாக்கி பீரங்கிகளை எடுத்துச் செல்வது போல ராக்கெட் ஏவுதளத்தையே ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு எடுத்துச் சென்று தான் நினைக்கின்ற திறந்தவெளியில் இருந்து நாம் நினைக்கின்ற ராக்கெட்டை அனுப்ப முடியும் என்கின்ற அதிசயத்தை ஆனந்து அறிமுகம் செய்திருக்கிறார்
ITL இன்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள் இது ஒருங்கிணைந்த பரிமாற்ற ஏவுதளம் என்று அழைக்கப்படுகிறது. 1960களில் இது முயற்சி செய்யப்பட்டது. இன்றைக்கு உலக அளவில் எல்லாம் மஸ்கினுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பெரிய அளவில் இதை தயாரித்து பெயர் பெற்ற நிறுவனமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட ஒரு முயற்சியை இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் ஒருவர் செய்கிறார் என்றால் கண்டிப்பாக அவர் ராக்கெட் தமிழன் என்பதில் சந்தேகமில்லை..
கட்டுரையாளர்:

ஆயிஷா இரா.நடராசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


ஒரு விண்வெளி நிறுவனத்தில் இணைந்து பயிற்சி பெறாமல் தன்னிச்சையாக ஒரு ஹைபிரிட் ராக்கெட்டை டிசைன் செய்து உருவாக்குவது என்பது மிகவும் கடினமானது இந்த ஹைபிரிட் ராக் ராக்கெட் டெக்னாலஜி இஸ்ரோவில் ஆய்வு கூட லெவலில் தான் உள்ளது இன்னும் இந்த ராக்கெட்டை நாம் விண்வெளியில் செலுத்தவில்லை விர்ஜின் கேலக்ஸி என்ற நிறுவனம் இந்த ஹைபிரிட் மோட்டரைக் கொண்டு விண்வெளிக்கு சுற்றுலா வீரர்களை அனுப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது பூட்டு இந்த திறமை வாய்ந்த தமிழ் விண்வெளி வீரரை தங்கள் கட்டுரை மூலம் உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியது மிகவும் போற்றத்தக்கது இதற்காக தங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த தமிழ் விண்வெளி வீரர் பல வெற்றிகளை பெற எனது வாழ்த்துக்கள்
By JP Murugan