ஆர் எஸ் எஸ் ஐ அறிந்து கொள்வோம் – நூல் அறிமுகம்
இந்தியாவில் ஏராளமான அரசியல் இயக்கங்களும் கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. ஆனால், ஆர் எஸ் எஸ் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதொரு இயக்கமாகும்.
இந்த புத்தகமானது ஆர் எஸ் எஸ் இன் உண்மை குணத்தை அதன் சொந்த ஆவணங்களில் இருந்தே மக்களுக்கு முன் வைப்பதற்கான முயற்சியாகும் என்கிறார் சம்சுல் இஸ்லாம்.
ஒரு இயக்கத்தைப் பற்றி மதிப்பீடு செய்யும் போது அதனுடைய அதிகாரப்பூர்வமான ஆவணங்களிலிருந்தும் தலைவர்களின் செயல்பாட்டில் இருந்தும் பல்வேறு அம்சங்களை எடுத்து பகுப்பாய்வு செய்ய வேண்டும்.அப்போது தான் அந்த இயக்கத்தின் உண்மை தன்மை என்பது வெளிவரும்.
ஆர்எஸ்எஸ் இன் செயல்பாடுகள் அனைத்தும் வெளியில் தெரியாதவை அல்லது வெளியில் வர முடியாத அளவுக்கு மறைமுகமானவை.
எனவே இதுபோன்ற ஒரு இயக்கத்தை மதிப்பீடு செய்யும் போது இன்னும் இன்னும் ஆழமான ஆய்வுகளும் செயல்பாடு பற்றிய விவரங்களும் அவசியமாகின்றன.
அதனை இப்புத்தகம் நிறைவு செய்கிறது.
ஆர் எஸ் எஸ் ஐ பற்றி கீழ்க்கண்ட பதினொரு கேள்விகளை எழுப்பி அதற்கான விடையை அவர்களின் ஆவணங்களிலிருந்து எடுத்து வைக்கிறார் நூல் ஆசிரியர்.
இதில் உள்ளவை அனைத்தும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே எடுத்து இயம்பப்படுகிறது.
1. ஆர்.எஸ்.எஸ். இயக்கம், பாசிசத்தையும் ஹிட்லரையும் வழிபடுகிறது என்பது உண்மையா?
2. ஆர்.எஸ்.எஸ். எப்போதாவது தேசியக் கொடிக்கு விசுவாசமாக இருந்திருக்கிறதா?
3. ஆர்.எஸ்.எஸ். கோருகிறபடி மனுஸ்மிருதி இந்திய அரசமைப்புச்சட்டமாக மாற்றப்பட்டால், சூத்திரர்கள் (தலித்துகள்) மற்றும் பெண்களின் நிலை என்னாகும்?
4. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எப்போதாவது மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை வைத்திருந்திருக்கிறதா?
5 .காந்திஜி கொலை செய்யப்பட்டபின்னர் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது ஏன்?
6. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறதா?
7. பகத்சிங், சந்திரசேகர் ஆசாத், அஸ்பகுல்லா கான் போன்ற விடுதலைப் போராட்டத்தியாகிகளை ஆர்.எஸ்.எஸ். மதிக்கிறதா?
8. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தான் ஓர் அரசியல் சார்பற்ற இயக்கம் என்று சொல்லிக்கொண்டே தேசிய அரசியலில் எப்படிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது?
9. பசுவும் ஆர்.எஸ்.எஸ்.-ஸூம்: கட்டவிழ்த்துவிடும் பொய்களுக்கு முடிவே இல்லை
10. ஆர்.எஸ்.எஸ். எப்படி பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. போன்ற உளவு நிறுவனங்களுக்கு உதவுகிறது?
11. நாடு பிரிவினை அடைவதற்கு முன்பே முஸ்லிம் லீகைக் போன்றே ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இரண்டு தேசக் கொள்கையில் நம்பிக்கை வைத்திருந்தது.
இன்றைய சூழலில் நவீன பாசிச குணா அம்சங்களை பிரதிபலிக்கிற பிஜேபியின் அரசாங்கத்தின் செயல்பாட்டிற்கு அடித்தளமாக ஆர்எஸ்எஸ்-ன் மேற்குறிப்பிடப்பட்ட கோட்பாடுகள் அடிப்படையாக அமைகின்றன.
நாடு முழுவதும் வெறுப்பு அரசியலை பரப்புவதற்கும் மக்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்பதற்கும் தீவிரமான முறையில் வெறிகொண்டு செயல்பட்டு வருகிறது.குறிப்பாக,இவர்கள் பாசிசம் மற்றும் நாசிசத்தின் மிக தீவிர பற்றாளர்கள் ஆவார்கள்.
மூஞ்சே வின் நாட்குறிப்புகளை ஆய்வு செய்து பாலில்லா மற்றும் பாசிஸ்ட் ஸ்தாபனங்களை பார்த்து ஈர்க்கப்பட்டேன் என்று முசோலினிடம் தெரிவித்தார்.
இவர்களின் ஈர்ப்பு சித்தாந்த ரீதியானது இன்றைய அரசியல் சூழலில் அவர்கள் பின் தொடரும் பாதையின் வழிகாட்டியாக அமைந்துள்ளது.
இன்னும் முக்கியமானது ஆர் எஸ் எஸ் இன் பெண்கள் குறித்தான பார்வையும் கருத்துக்களும் மிகவும் பிற்போக்குத்தனமானவை மட்டுமல்ல .
நாகரீகமான சமூகத்திற்கு எந்த வகையிலும் உகந்தவை அல்ல.
மனுவாதத்தையே இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டமாக இயற்றிய இடவேண்டும் என ஆர் எஸ் எஸ் வகையறாக்கள் கோரி வருகின்றன.
பெண்கள் குறித்து மனுவாதம் முன்வைக்கும் கருத்துக்களை போல மோசமான கருத்துக்கள் வேற எதுவும் உலகில் இருக்காது.
ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் தனிப்பட்ட சுதந்திரம் எதுவும் கிடையாது.
அவர்கள் பலகீனமானவர்கள் பொய்யை போல மாசு வடிவினர் என அறிவியலுக்கு முற்றிலும் புறம்பான வகையில் வரையறை செய்கிறது.
இது பெண்களுக்கு மட்டுமல்ல.
தலித்துகள், சிறுபான்மையினர் என ஒவ்வொருவருக்கும் வெறுப்பினை விதைக்கின்றனர்.
88 பக்கங்கள் கொண்ட இப்ப புத்தகத்தை வாசிக்கும் போது ஆர்எஸ்எஸ்ஸின் உண்மை முகத்தை அறிந்து கொள்ள முடியும்.
இதில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளும் ஆர்எஸ்எஸ் ஸின் ஆவணங்களில் அடிப்படையில் தரப்பட்டுள்ள பதில்களும் மிகுந்த நேர்த்தியானவை.
ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாசிக்க வேண்டிய புத்தகமாக திகழ்கிறது.
நூலின் தகவல்கள் :
நூல் : ஆர் எஸ் எஸ் ஐ அறிந்து கொள்வோம்
ஆசிரியர் : சம்சுல் இஸ்லாம்
தமிழில் : ச.வீரமணி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : 80
தொடர்பு : 94449 60935
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/rss-yai-arinthu-kolvom/
நூல் அறிமுகம் எழுதியவர் :
எஸ்.பாலா
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


இந்தியர்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அவசியமான நூல் இது. ஆசிரியரின் முயற்சிக்கு நன்றி.