ச.அனுசுயா ஹைக்கூ கவிதைகள்

1.
சமபந்தி போஜனம்
வீட்டு விசேஷங்களில் இல்லை
மதுக்கடையில்
2.
செங்குளத்தில்
எட்டிப்பார்க்கும் தாமரை
அதிகாலை கதிரவன்
3.
கொட்டிக் கிடந்த குப்பைகளை
கொட்டிக் கொண்டே செல்கிறது
குப்பை லாரி.
ஹைக்கூ கவிதைகள் - நண்பேண்டா!!!!!!!!!
4.
வளர்ப்புத்தாயின்
மார்பை முட்டி பசியாறியது
தேனீ
5.
நீச்சல் குளம் வசதியோடு
வீடு கட்டினான்
குளத்தில்.
6.
காத்திருந்த நேரங்களின்
ஓயாத அலைகள்
அவன் நினைவலைகள்.
7.
உலகமொழிகளில் தோன்றிய
முதல் ஹைக்கூ
மழலையின் சொல்.
8.
யாருடைய ஊர்வலத்திற்கு
நீர்தெளித்துச் செல்கிறது
தண்ணீர் லாரி.
                                     ச.அனுசுயா,
                                      வேடசந்தூர்.