விளிம்புநிலை சிறுவர்களின் வாழ்வியலை பேசும் நூல் “வானவில்லின் தோழர்கள்” சிறுகதை தொகுப்பு
சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் யெஸ். பாலபாரதி “வானவில்லின் தோழர்கள்” சிறுவர் இலக்கிய உலகில் ஒரு முக்கியமான வரவு. குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கான படைப்புகளில் யதார்த்தத்தையும், சமூக அக்கறையையும் பிணைப்பதில் வல்லவரான பாலபாரதி, இந்த நூலிலும் தனது தனித்துவத்தை நிரூபித்துள்ளார்.
“வானவில்லின் தோழர்கள்” 11 சிறுகதைகள் கொண்ட நூலாகும். இது சாதாரணமான ஒரு சாகசக் கதையாகவோ அல்லது அறிவுரை சொல்லும் கதையாகவோ இல்லாமல், விளிம்புநிலை சிறுவர்களின் வாழ்வியலை மையமாக வைத்து நகர்கிறது.
கொரானா காலத்தில் பள்ளி செல்லாமல் இருந்த குழந்தைகளுக்கு ஏற்பட்ட கனவு, ஊராடங்கின் போது அப்பா பணி புரியும் இடத்தில் நேர்மையாக நடந்து கொண்ட குழந்தை, சட்டத்திற்கு புறம்பாக அட்டை பெட்டிக்குள் அடைத்து வைக்கபட்ட கிளிகள் விடுதலை செய்த குழந்தை, யானை பெற்றெடுத்த குட்டி யானை இறந்து விட்டது. சோகத்தில் இருந்த யானையை மகிழ்வித்த பட்டாம்பூச்சிகள், வானவில்லுக்கே வண்ணம் தீட்டிய குழந்தைகள், குப்பையில் கிடந்த பல லட்சம் மதிப்புள்ள நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த குழந்தை இது போன்ற சிறுகதைகள் அடங்கிய நூல் தான் வானவில்லின் தோழர்கள்.

எதார்த்தமான சித்தரிப்பு
பாலபாரதியின் எழுத்துக்கள் எப்போதுமே தரையில் காலூன்றி இருக்கும். இந்தப் புத்தகத்திலும், குழந்தைகளுக்குள் இருக்கும் கனவுகள் மற்றும் உற்சாகத்தை அழகாகக் காட்டியுள்ளார்.
நூலின் தலைப்பிற்கேற்ப, “தோழமை” என்பது இதில் பிரதானமாகப் பேசப்படுகிறது. ஒருவருக்கொருவர் இரத்த உறவு இல்லையென்றாலும், இக்கட்டான சூழலில் அவர்கள் காட்டும் பிணைப்பு “வானவில்லின்” வண்ணங்களைப் போல அழகானது.
எளிய மொழி நடை
சிறுவர்களுக்கான நூல் என்பதால், மிக எளிமையான ஆனால் காத்திரமான மொழியைப் பயன்படுத்தியுள்ளார். உரையாடல்கள் இயல்பாகவும், காட்சிகளை கண்முன் நிறுத்தும் படங்களும் நிறைவாக உள்ளன.
வானவில்லின் தோழர்கள் – வெறும் குழந்தைகளுக்கான கதை மட்டுமல்ல; மனிதநேயத்தை நேசிக்கும் எவரும் வாசிக்க வேண்டிய நூல். குழந்தைகளிடம் வறுமையைப் பற்றிய புரிதலையும், சக மனிதர்கள் மீதான அக்கறையையும் வளர்க்க இந்த புத்தகம் பெரிதும் உதவும்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “வானவில்லின் தோழர்கள் (Vanavillin Thozhargal)” |
| ஆசிரியர்: | யெஸ்.பாலபாரதி |
| வெளியீடு: | |
| விலை: | ₹.70 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 MJ. பிரபாகர். |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
