1.
இரணமாய்க் கொல்லும் வரை
அழகான பொய்களும்
ரசனைக்கு உரியவைதான்.
2.
அந்தந்த நேரத்து
அழகிய பொய்களில்
நீயும்
நானும்
நாமாக இருக்கிறோம்.
3.
இவர்களுமா என்னும்
ஆச்சர்யத்தில்
நம்மை
ஆழ்த்திக் கொண்டே
இருக்கிறது
வாழ்க்கை.
எழுதியவர்
ச. பாரதி பிரகாஷ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

