படிச்சா அறிவு வளரனும் பாகுபாடு வளரக்கூடாது. இப்படியான தெரிப்புகளை கொண்ட சிறுகதைகளின் தொகுப்புதான் லாஞ்சனை என்னும் எஸ் காமராஜ் எழுதிய சிறுகதை தொகுப்பு. பதிமூன்று கதைகளை கொண்ட இந்த நூலில் சின்ன ஜப்பான் என்றழைக்கப்படும் கந்தக பூமியான சிவகாசி மற்றும் சுற்றுபுற மக்களின் அன்றாட வாழ்வின் பாடுகளை பதிவு செய்ததோடு நிற்காமல் தான் பணி செய்த பகுதிகளில் ஏற்பட்ட அனுபவங்களிலிருந்தும் கதைகளை படைத்திருக்கிறார். ஓர் இடத்தில் குறிப்பிடுகிறார். இதை குட்டி ஜப்பான் என்று சொல்லுவதை விட குட்டி நாகசாஹி, ஹிரோசிமா என்று சொல்லலாம் என்று. எவ்வளவு வலியும் வேதனையும் இருந்தால் இப்படி பதிவு செய்வார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
மாண்புமிக ஏமாளி என்ற கதையில் கடைசி பத்தி என்னை நானே பார்த்தது போல இருந்தது. அந்த ஒத்தவடையை பொய் கணக்கு சொல்லி மிச்சம் பிடிச்சு கோட்டையான கட்டபோரான். பசிக்கு திங்கிரவனை கண்டுபிடிச்சு சிஐடி பட்டம் வாங்காட்டி போகுது. பொய் சொல்லுரவன் சமத்தன் பொறுத்துப்பேரவன் ஏமாளின்னு நான் ஏமாளியாவே இருந்துட்டு போரேன் என்று சொல்லிவிட்டு விக்காத வடைகளை எடுத்துக்கொண்டு விற்க போகிறார். இப்படிதான் தாங்களும் 27 ஆண்டுகளாக பள்ளியை நடத்திக்கொண்டிருக்கிறோம். இப்படி நான் மட்டுமல்ல இப்படியான மாண்புமிகு ஏமாளிகள் ஏராளமாக இருப்பதால் தான் உலகம் உருண்டோடுகிறது.
இலங்கை தமிழ் போராளிகள் எளிமைகயாக தமிழகம் வந்து சென்ற காலத்தில் நடைபெற்ற சம்பவமாக இருக்கலாம் என்று கணிக்கிறேன். அப்போது ராமநாதபுரத்தில் இவர்களோடு தங்கியிருந்த இளைஞர்கள் காலை உணவு நான்கு இட்டிலிக்கு மேல் எடுத்துக் கொள்ளவே இல்லை. எவ்வளவு கெஞ்சியும் எடுத்துக் கொள்ள வில்லை. இதற்கு காரணத்தை அறிந்த போது உண்மையிலேயே போராளிகளின் வலிமையை அறிந்து கொள்ள முடிந்தது.
என்னப்பா மேலத்தெரு, கீழத்தெரு பிரச்சனைகள் ஒரு பனைமரத்தடி நுங்கில் இளைய தலைமுறை மறந்து செல்லுவதை பார்க்கும் போது எவ்வளவு சந்தோசம். அப்படியான மறதிகள் மிக மிக அவசியம்.
ஒரு குறிப்பிட வாழ்விடத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வியலை அறிந்து கொள்ளவும், அன்றாட பாடுகளை தெரிந்து கொள்ளவும் இந்த நூல் பெரிதும் பயன்படும்
இந்த அற்புதமான படைப்பை படைத்த படைப்பாளி திரு எஸ் காமராஜ் அவர்களுக்கு என் அன்பும், வாழ்த்துகளும். எனக்கு இந்த புத்தகத்தை அறிமுகம் செய்து வழங்கி அன்பு நண்பர் ஜீவ கரிகாலன் அவர்களுக்கு என்றென்னும் நன்றி.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “லாஞ்சனை” சிறுகதை தொகுப்பு |
| ஆசிரியர்: | எஸ். காமராஜ் |
| வெளியீடு: | யாவரும் பதிப்பகம் |
| விலை: | ₹.160.00 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 மொ. பாண்டியராஜன் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

