எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய “நாவல்வாசிகள்” நாவல்
உலக வாழ்க்கைப் பெருவெளியின் பேரியக்கமாகத் துலங்கும் மனிதர்களின் வாழ்வியல் பாடுகளை, மகிழ்வை, சஞ்சலங்களை, இழப்பினைக் கண்ணுறும் ஓர் படைப்பாளி, தன் அனுபவத்துடனும்; சிந்தனைத் திறத்துடனும்; கற்பனை வளத்துடன் இரசவாதம் நிகழ்த்தி புது படைப்பாக உலவ விடுகிறான். அவனது படைப்புகள், சமூகத்துடன் உறவாடி எதிர்வினை புரிவதோடு, அடுத்தகட்ட நகர்விற்கான மாற்றங்களை விதைக்கின்றன. அவ்வகை படைப்புகள் காலங்கடந்தும் வாசகர் மனதில் நிலைகொண்டு விடுகின்றன
அப்படியான படைப்புகளில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்களை ‘நாவல்வாசிகள்’ என அழைக்கும் எஸ். ராமகிருஷ்ணன் இத்தொகுப்பில், 30 இந்திய நாவல்களை அறிமுகப்படுத்துகிறார்.
இந்தி, கன்னடம், உருது, வங்காளம், கொங்கணி, ஒரியா, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராட்டி, பஞ்சாபி, குஜராத்தி என பன்மொழி நாவல்ள், அவற்றை மொழியாக்கம் செய்தவர்கள், அந்த நாவல்களை வெளியிட்டிருக்கும் பதிப்பகம், வெளிவந்த ஆண்டு, நூலாசிரியரைப் பற்றிய தகவல்கள் என நமக்கு அடையாளப்படுத்தியிருப்பதில், பெரும்பாலானவை சாகித்திய அகாடமி விருது பெற்றவையேயாகும்.
போக, நாவலை எப்படி வாசித்து, உள்வாங்க வேண்டும், உள்ளடக்கத்தை வெளிப்படுத்தாமல், வாசனைப் படிக்க தூண்டும் வழிமுறை, நாவலின் திருப்புமுனையானத் தருணங்களை எங்ஙனம் உற்று நோக்குவது, ஆழ்ந்த வாசிப்புக்குள் நம்மை கரைத்துக் கொள்ளும் நுட்பங்கள் என அனைத்தையும் இக்கட்டுரை தொகுப்பிலிருந்து அறியலாம்.
2012ல் வெளியான மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன் எழுதிய ‘சுமத்திரா’ மற்றும் 2022ல் வெளிவந்த மலையாள எழுத்தாளரான கே.ஆர்.மீரா எழுதிய ‘ஆராச்சார்’ நாவல் ஆகியன மட்டும்தான் இப்புத்தகத்திலுள்ள 20ம் நூற்றாண்டின் படைப்புகள் குறித்த கட்டுரைகள். மற்றவை அனைத்தும், பெரும்பாலும் நாம் அறியாத 19ம்நூற்றாண்டின் படைப்புகளே என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நாவல்களில், இத் தலைமுறை அறிந்துக் கொள்ள ஏதுவான சுதந்திர கால நிகழ்வுகளையும், ஆளுமைகளையும் ஊடாக பதிவுசெய்திருப்பதைக் கோடிட்டு காட்டி, இலக்கியமே, ஆகச் சிறந்த காலக் கண்ணாடியென காட்சிபடுத்தியிருக்கிறார், நூலாசிரியர்.
முப்பது கட்டுரைகளையும் வாசித்து முடிக்கையில், வங்காள நாவல்களும், மலையாள நாவல்களும் இந்திய இலக்கியத்தில் பெரும் பங்காற்றியிருக்கின்றன என்பதோடு, வாழ்வின் போக்கை அதிர்ஷ்டமே முடிவு செய்கிறதென கருத்தியல் கொண்டோருக்கு, அயராத உழைப்பாலும், நேர்மையான பாதையில் பயணத்தாலும், பிடிவாதமான நன்முயற்சியாலும், நிறைவான வாழ்க்கையைக் கையகப்படுத்தலாம் என்ற பேரூண்மை ஓங்கி ஒலிக்கிறது.
சரித்திரத்தில் இடமில்லாத சாமானியனை, அவனின் பாடுகளைத்தான், ஒன்றுபோல் அனைத்து புதினங்களும் பேசுகிறது.
வழக்கம்போல், எஸ். ரா. தனது தனித்துவமிக்க, எளிய நடையால், இந்நூலிலுள்ள புதினங்களைத் தேடி தேடி, வாசகனை வாசிக்க வைத்துவிடுவார் என்பது திண்ணம். அதுதான், ‘நாவல்வாசியின்’ வெற்றியும் கூட. நன்றி!
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | நாவல்வாசிகள் (2025) |
| ஆசிரியர்: | எஸ். ராமகிருஷ்ணன் |
| வெளியீடு: | தேசாந்திரி பதிப்பகம் |
| விலை: | ₹.160 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 பா. கெஜலட்சுமி, சென்னை – 19. |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

