ஆஸ்திரிய காடுகள்
அழிந்தன
விலங்குகள் கலங்கின
எரிமலை வெடித்தது
எங்குமியிர்கள் மாய்ந்தன
கிருமிகள் கால் பதித்தன
காலமின்றி காலம் பதில் சொல்கிறது
புலம்பெயர் தொழிலாளர்களின் புலம்பல்கள்
நெடுஞ்சாலை முழுதும் செப்பனிடுகின்றன
கருப்பின கொலை நிகழ்ந்து
உலகம் கொதித்து எழுந்தது
கால்பந்து நாயகன்
களம் காணாது மண்ணில் போனது
விவாசாயிகள் வீதியிலிறங்கி
போராட்டங்கள் நிகழ்கின்றன
என உலகம் முழுவதும்
துயர்கள் சூழ்ந்தன
பூமி புன்னகைக்க
புத்தாண்டு பிறக்கட்டும்
– இப்படிக்கு காலம்
— சிந்து