ஒரு பெரிய விளையாட்டு மைதானத்தின் ஓரத்தில் நின்றயிருந்த மரத்தடியில் இருள் நிழலில் புகைப்படம் எடுக்க வண்டியை நிறுத்திவிட்டு வந்தவள் காத்திருந்த அவனுக்கு அவள் அளித்த பரிசு நெற்றியில் ஓற்றை முத்தம். கைகள் கோர்த்து பூத்திருந்த வீண்மீண்களை கண்கள் கண்ணீர் துளிகளால் சிதறின…. படபடக்கும் நிமிடங்கள் எப்போதும் இல்லாத மகிழ்ச்சி போராட்டங்களின் வெற்றி அப்படி தான் இருக்குமோ என்னவோ?
சரியாக ஒன்றை வருடத்திற்கு முன் ஒரு நாள் கடற்கரையில் கால்கடக்க காத்திருந்த கால்கள் கத்திரிபூ கவுன் அணிந்த அந்த பெண் வந்தவுடன் கடுகடுப்பான முகம் கட்டாய புன்கையை தூவியது. கடற்கரையோரம் இருக்கும் உணவகத்தில் சென்றுதும் இருக்கையில் அமர்ந்தவள் இரு காதுகளை பிடித்து கேட்ட முதல் வார்த்தை மன்னிப்பு புன்னகை பூக்க மறுத்தும் உண்மையில் பூத்தது அவன் முகம். இது தான் முதல் சந்திப்பு. அதற்கு முன் எப்போவது பார்த்து உண்டு ஆனால் பேசியது இல்லை. மனதில் பெரிதும் பதியாத முகம். ஒரு முறை முகநூலில் காப்பி குடிக்க அவனிடமிருந்து அழைப்பு அதுவும் கவிதையுடன்
இருட்திரை இடையிருந்து
இளிப்பதாய் இருப்பினும்
இருவரிதான் படித்திடுக.
இனி என்ன எண்ணம் எழுமோ
என்னென்ன எண்ணம் எழுமொ
என்றெல்லாம் எண்ணியெண்ணி
இருள் சூழ்ந்து உறக்கமில்லை
இருகாதும் இனிக்கும்படி
இயம்பத்தான் ஆசை
இறுமாப்பு என்றெண்ண
இடந்தருமோ என்றெண்ணித்தான்
எழுதுகின்றேன்
நன்னெறி கெடாதிருக்கும்
நம்பித்தான் எழுதுகின்றேன்
நம் நட்பும் கெடாதிருக்க
நடுங்கித்தான் எழுதுகின்றேன்
காபியோடு கதைபேச
காமணிநேரம் கிடைத்திடுமா?
இருவரும் அருகே அருகே அமர்ந்து ஆனியன் ஃபரையுடன் காபியுடன் பேச தொடங்க திடீரென்று எனக்கு உங்களை பிடிக்கும் என்று சொல்லியவன் உங்களுக்கு என் மீதான அபிப்ராயம் பற்றி தெரிந்து கொள்ளவே இந்த சந்திப்பு என்று முடித்தான்.
அவ்வளவு நேர்ப்போக்கான மனிதர். அப்படியே உணவகத்திலிருந்து வெளியே வந்து காற்றுடன் கைக்கோர்த்தப்படி கதைகள் நீள உலக சினிமா தொடங்கி அரசியல் முதல் இலக்கியம் வரை பேசிக்கொண்டே இருவர் பற்றியும் பேச தனக்கு திருமணம் பற்றியான புரிதல் உங்களுடன் தொடங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று சொல்ல பதில் எதும் இல்லாமல் விடைப் பெற்றது அன்றைய தினம்.
அப்போதைக்கு அவன் பற்றி அவளுக்கு எவ்வித கேள்விகளும் இல்லை. முகம் தெரியாது மனிதருடன் எப்படி பயணிக்க என்று கேள்விகள் அவ்போது எழுந்திருக்கும் போதெல்லாம் காதல் திருமணம் செய்திருக்கலாம் என்று தோன்றும் அதுவும் தோன்றுவதற்கு காரணம் ஜென்னி மார்க்கஸின் கதை. காதல் காரணமின்றி பிறக்கும் கட்டாயத்திலோ, கொடுக்கல் வாங்கலில் பிறப்பதுதில்லை. அது ஒரு உணர்வு, நம்பிக்கை அதை அப்படி தான் பார்க்கவும் செய்தாள்.
பின்னொரு நாள் வீட்டிற்கு அவளை வேறிடத்திலிருந்து பெண் பார்க்க வருவதாக சொல்ல பெரிய இடம் நல்ல குடும்பம், ஆகையால் பிரச்சனை ஏதுமில்லை என்று குடும்பத்தில் பேசிக்கொண்டியிருக்கையில் பணம் மட்டும் எப்படி இருவருக்குமான இணக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விகள் மனதை உலுக்கியது அது தாண்டி இருக்கும் வினாக்களுக்கு எதற்கும் விடையில்லை.
அன்றைய தினம் இதைப்பற்றி பேச தோழமையுடன் நினைவிற்கு வந்தது அவன் முகம். ஆம் மனதில் ஆழமாய் பதியாத அந்த முகம். மீண்டும் அதே கடற்கரையில் சந்திப்பு டிசம்பர் மாதம் தெருக்கள் பூக்களின் வாசத்தால் நிறைந்தது. அப்போதும் காப்பியுடன் அவர்கள் இருவரை பற்றிய உரையாடல் அல்ல. அவளின் ஊர் பயணம், உறங்காத டில்லி ரயில்வேயில் தனியாக நின்றிருந்த தருணம், பெரியாரும் பெண்ணும் என கதை நீண்டது. உள்ளே ஏதோ உணர்வு, நம்பிக்கை எதையும் ஒளிவு மறைவுயின்றி பேச ஒரு தோழமை என்று..
இப்படியே நாட்கள் கடக்கையில் ஒரு நாள் எதேச்சையாக பேசிக்கொண்டிருக்கையில் அவன் வெளிநாட்டில் சென்று முதுகலை படிக்கப் போவதாகச் சொல்லப் பின் அவள் அவனிடம் பேசுவதில்லை. கொரோனா பொது முடக்கம் எல்லோரையும் வீட்டில் முடக்கியது திருமணம் எல்லோருக்கும் ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. குறைந்தபட்ச புரிதல் இல்லாத பயணம் எப்படி என நினைத்து கொண்டியிருக்கையில் இன்னொரு நாள் அவனிடமிருந்து அழைப்பு திரும்ப இருவரின் சந்திப்பு அதே கடற்கரையில், ஆனால் திருமண புரோபோசலுடன் .
மறுநாள் காலை அந்த பெண்ணின் உடன் பிறந்தோருடன் பேச அதுவரை அவர்களுக்குள் இருந்தது நல்ல நட்பு மட்டுமே. பிறகு அந்த பெண்ணின் வீட்டில் பேச பூகம்பம் வெடித்தது மாதங்கள் பல கடந்தது.
அந்தப் பெண்ணின் தாயிடம் பேசி புரிதலுக்கு உட்படுத்தினாலும் சாதி, சமூக நிலை, வயது என எல்லாம் குறுக்கே நிற்க அதன் மீது பரனமைத்து இவர்கள் இருவரும் அன்பை பகிர ஆறு மாதங்கள் ஆனாது. ஒரு நாள் இருவரும் பேசிக்கொண்டியிருக்கையில் அவள் அவன் கைகளை தொட்டப்போது உதிர்ந்தது அவன் வார்த்தைகள் நான் சிறுவயதில் மெக்கானிக்க ஷாப்பில் வேலை செய்தப்போது குளிர்ச்சிக்காக பெட்ரோலை கையில் தடவியதால் இப்படி யானது . அப்போது பாபிலோ நெருடாவின் ஓரு வரி நினைவிற்கு வந்தது.
“As if you were in fire from within, The moon lives in the lining of your skin”.
இன்று படித்து மென்பொருள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் டீம் லிடாக உள்ளான். அவனை எப்போதும் அவள் கடினமான பாறைகளில் பூத்த வாசம் வீசும் பூங்காவாகத்தான் பார்க்கிறாள்.
” முரண்கள் பல இருந்தும் , அவன் போல் யாரும் இல்லை”
ஒருவரின் நம்பிக்கையைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல. அதுவும் எந்த எதிர்பார்ப்புகளன்றி. அவளுக்கு சிறு வயது முதல் பிரான்ஸ் நகரம் தான் சொர்க்கம் என்று நினைத்தது உண்டு. ஆனால் அங்கே வாழ்க்கையை தொடர வாய்ப்பிருந்தும் அந்த மாப்பிள்ளையை நிராகரிக்க எல்லோருக்கும் புரிய வைத்தது அவளுக்கு அவனை எந்தளவிற்கு பிடிக்கும் என்று. பல முறை அவனில் 96 பட விஜய் சேதுபதியை நினைவூட்டும். உண்மையில் அப்படியானவும் கூட. வீட்டில் பல சண்டைகளை எதிர்க்கொண்ட போதும் அவன் மீதான அன்பு அடங்காமல் வழிய காரணம் பெண்னை வெறும் உடலாக மட்டும் பார்க்காமல், பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஒருவன். காம்ரெட் எல்லோரையும் நேசிப்பது மட்டுமல்ல அடுத்தவரால் நாம் நேசிக்கப்படும் போது அவனும் காம்ரெடே.
அவள் பார்த்து பேசிய பல நூறு ஆண்களில் நம்பிக்கையை விதைத்தவன் இவன் ஒருவன் என்பதால் தான் என்னவோ அவனுக்கு பெயர் டியர் காம்ரெட் என்று ஆனாது….
*************

