“இடது குரல்” – நூல் அறிமுகம்
தமிழ்நாட்டின் இடதுசாரி சிந்தனை மரபைப் பேசும் வரலாற்று ஆவணம்!
தமிழ்நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு வரலாற்றை இடதுசாரிக் கருத்தியல் பார்வையில் ஆழமாகப் புரிந்து கொள்ள விரும்புவோருக்கு ஒரு முக்கியமான அறிவுசார் ஆவணமாக வெளிவந்துள்ளது ச.தமிழ்ச்செல்வன் தொகுத்த ‘இடது குரல்’ என்னும் நூல். ‘செம்மலர்’ இதழில் வெளிவந்த காத்திரமான கட்டுரைகளின்தொகுப்பாக பாரதி புத்தகாலய வெளியீடாக இந்நூல் அமைந்துள்ளது.
ம. சிங்காரவேலர் தொடங்கி ப. ஜீவானந்தம், கலாநிதி கைலாசபதி, கா. சிவத்தம்பி, தொ. பரமசிவன், ராஜ் கவுதமன், ஆ. சிவசுப்பிரமணியன்,எஸ்.வி. ராஜதுரை வரை தமிழ்நாட்டின் முற்போக்குச் சிந்தனையைச் செழுமைப்படுத்திய இருபது ஆளுமைகளின்வாழ்வு, சிந்தனை, பங்களிப்புகள் மற்றும் படைப்புகளைப் பற்றிய விரிவான பகுப்பாய்வை இந்நூல் வழங்கு கிறது. ஒவ்வொரு எழுத்தாளரும் இயங்கியகாலச்சூழல், அவர்களின் கருத்தியல் நிலைப்பாடு, சமூக மாற்றத்திற்காக அவர்கள் முன்வைத்த இயங்கியல் பொருள்முதல்வாத வாதங்கள் ஆகியவை கூர்மையான ஆய்வுப்பார்வையுடன் விளக்கப்பட்டுள்ளன.
இந்துத்துவ அரசியல் தீவிர நவீன பாசிசமாக உருவெடுத்து வரும் சூழலிலும், உலகமய கார்ப்பரேட் பண்பாடு பரவிவரும் தருணத்திலும் மாற்றுப் பண்பாட்டின் அவசியத்தை இந்நூல் உரக்க வலியுறுத்துகிறது. சங்க இலக்கியம் தொடங்கி சமகாலம் வரையிலான படைப்புகளை ஒடுக்கப்பட்டவர்களின் பார்வையில் இருந்துமறுவாசிப்பு செய்யும் இந்நூல், கடந்த காலப் பெருமைகளை மட்டுமே பேசாமல் விமர்சனப்பூர்வமானவிழிப்புணர்வை ஏற்படுத்து கிறது.
மானுட முன்னேற்றத் திற்கு வரலாற்றி லிருந்து எதை எடுத்துக்கொள்ள வேண்டும், எதை எதிர்த்துப் புறந்தள்ளவேண்டும் என்ற தெளிவை வாசகர்களுக்கு வழங்குகிறது. தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்களின் ஆழமானமுன்னுரையுடன் வெளிவந்துள்ள ‘இடது குரல்’, தமிழ் மண்ணின் கலை மரபுகளை அறிந்து, அவற்றை இன்றையமாற்றுப் பண்பாட்டு நடவடிக்கை களுடன் இணைக்கத் தூண்டும் மிக முக்கிய மான கருத்தியல் வழிகாட்டியாகும்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | இடது குரல் |
| தொகுப்பாசிரியர்: | ச. தமிழ்ச்செல்வன் |
| வெளியீடு: | பாரதி புத்தகாலயம் |
| விலை: | ₹.260 (10% Discount price was: ₹.234 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 எஸ். பாலா |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
தொடர்புக்கு: 9444960935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

