ச. பாரதி பிரகாஷ் கவிதைகள்

ச. பாரதி பிரகாஷ் கவிதைகள்

1.
சிலர் கவிதையாகப் பேசுகிறார்கள்.
சிலருடன் பேசுவது
கவிதையாகிறது.
சிலர் கவிதைகளுடனே
வாழ்கிறார்கள்.
சிலருக்கு
அது கவிதை என்றே
புரியாமல் போய் விடுகிறது.
இவ்ளோதாங்க கவிதை.
2.
வழி கிடைக்காமல்
பக்கத்தில் ஒரு
ஆம்புலன்ஸ் கதறுகிறது.
முன்னால் உள்ள
இறக்குமதியான
வெளிநாட்டுக்காருக்கு
காது கேட்கவில்லை.
மற்றொரு பக்கவாட்டுக் காரில்
இரண்டு வெவ்வேறு
ஆன்லைன் வகுப்புகள்.
ஆம்புலன்ஸின் முன் உள்ள
இருசக்கர  வாகனத்தில் அமர்ந்துள்ள
காதலர்கள்
வேறு ஏதோ
உலகத்தில் உள்ளவர்கள்.
முன்னும் பின்னும் உள்ள பலரின் காதுகளில் ஹெட் போன்.
இன்னும் 60 வினாடிக்கு
மேல் நீளும் சிக்னல் நொடிகள்.
இன்னும் கொஞ்சம்
மிச்சம் இருக்கிறது
ஆம்புலன்சில் உயிரும்…
என் க(வி)தையும்.
ச. பாரதி பிரகாஷ்,
சின்னத் தடாகம், 
கோயமுத்தூர். 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 2 Comments

2 Comments

  1. சா.யமுனாதேவி

    அருமை சார். கவிதையின் எளிய விளக்கமே கவிதையாகிப் போனது.

  2. தேவி

    கவித ! கவித👏👏
    மொத்த வாழ்வையும்
    ஒற்றைக் கவிக்குள் அடக்கிய
    கவிஞருக்கு வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *