ச.ஜீவானந்தம் எழுதிய 'திராவிடப் பெண்' புத்தகம் | Sa. Jeevanandham's Dravida Pen Tamil Book Review | பாரதி புத்தகாலயம் | www.bookday.in

ச.ஜீவானந்தம் எழுதிய ‘திராவிடப் பெண்’ – நூல் அறிமுகம்

திராவிடப் பெண் – தரவுகளின் வழி…

பெண்கள் மறுமலர்ச்சிக்கும், சீர்திருத்தத்துக்கும் குரல் கொடுத்த இயக்கம் சுயமரியாதை இயக்கம். பெண் விடுதலை என்பது. சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. பெரியார் முன்னெடுத்த சுயமரியாதைக் கருத்தியலை ஏற்று இயங்கிய பெண்கள் குறித்தும், சுயமரியாதை இயக்கம் முன்னெடுத்த பாலின சமத்துவக் கோட்பாடுகள் குறித்தும் பேசும் வகையில், பாரதி புத்தகாலயம் வழி வெளிவந்துள்ள நூல் ‘திராவிடப் பெண்’.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பெண்ணிய ஆய்வு மையத்தில், உதவிப் பேராசிரியராக பணிபுரியும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ச.ஜீவானந்தம், எழுதியுள்ள இந்த நூல், ஆய்வுக் குறிப்புகளுடன் சுயமரியாதை இயக்கத்தின் பெண்ணியச் செயல்பாடுகளை பேசுகிறது.

சுயமரியாதை இயக்கத்தின் ஆளுமை மிக்கப் பெண்கள், சுயமரியாதை இயக்கமும் பெண்ணிய விடுதலையும், அக வாழ்க்கையும் பெண்ணின விடுதலையும், மதமும் பெண்கள் விடுதலையும் என தனித்தனி தலைப்புகளில் சுயமரியாதை இயக்கச் செயல்பாடுகளை அலசுகிறது.

பெரியார் முன்வைத்த பெண்ணியம், பெண் விடுதலை ஆகியவற்றை உரிய தரவுகளுடன் பேசும் இந்த நூல். ‘புரட்சி’, ‘குடிஅரசு’, ‘விடுதலை’, ‘பகுத்தறிவு’, ‘ரிவோல்ட் (Revolt)’ என பல இதழ்களில் இருந்து குறிப்புகளைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. ‘நூலில் உள்ள எந்த ஒரு தகவலும் இட்டுக்கட்டியோ, புனையப்பட்டோ எழுதப்படவில்லை என்பதைக் குறிப்பிடுகிறார் ச.ஜீவானந்தம். அதுவே, இந்த நூலின் அவசியத்திற்கான சான்று.

நூலின் விவரங்கள்:

நூல் : திராவிடப் பெண்
ஆசிரியர் : ச.ஜீவானந்தம்
விலை :  ரூ.180
பதிப்பகம் :
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

நன்றி: முரசொலி

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *